கொள்ளு சுண்டல்

தேதி: July 14, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (10 votes)

 

கொள்ளு - 2 கப் (ஊற வைத்தது)
வெங்காயம் - 1/4
பச்சை மிளகாய் - 2
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
உளுந்து - அரை தேக்கரண்டி
கடலை பருப்பு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவைக்கு
உப்பு - தேவைக்கு


 

வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஊற வைத்த கொள்ளை வேக வைத்து, நீரை வடித்துவிட்டு உப்பு கலந்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இதில் வேக வைத்த கொள்ளை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.
கொள்ளை சேர்த்து நன்கு கிளறியதும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி எடுக்கவும்.
சுவையான கொள்ளு சுண்டல் தயார். இதில் முளைக்கட்டிய கொள்ளும் பயன்படுத்தலாம். விரும்பினால் தாளிக்கும் போது பெருங்காயம் சேர்க்கலாம். கொள்ளை வேக வைத்து வடித்த நீரில் ரசம் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அன்பு வனிதா..
குழந்தைகள் நலமா?யாழினி என்ற பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

நான் உடல் இளைக்க கொள்ளு வாங்கி வைத்திருக்கிறேன்.
கணவரையும்,மகளையும் அனுப்பி விட்டு 8.30 மணிக்கு
யோகா செய்வேன்.அதற்கு முன் எதுவும் சாப்பிடக்கூடாது.
ஆனால் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நல்ல பலன் இல்லையா..
சாயங்காலம் சாப்பிடலாமா? அதே எஃபக்ட் கிடைக்குமா?

கவிதாசிவகுமார்.

anbe sivam

கவிதா... குழந்தைகள் நலம். மிக்க நன்றி. கொள்ளு எப்போ சாப்பிட்டாலும் நல்லது தான். கொள்ளு வேக வைத்த நீரில் ரசம் வைத்து சாப்பிடுங்க. கொள்ளு சுண்டல், துவையல் செய்து சாப்பிடுங்க. உடல் எடை குறைக்க செய்வதென்றால் தேங்காய் சேர்க்க வேண்டாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா


ஒங்க கொழந்த பேர் யாழினியா?பேர் ரொம்ப நன்னாயிருக்கு.அப்பறம் கொள்ள எங்கம்மா பருப்பு பொடி மாறி செய்வா.நன்னா ஒடம்பு இளைக்கும்.அம்மா தம்பியாத்துக்கு போயிருக்கா.வந்ததும் அளவு கேட்டு சொல்றேன்.GOOD NIGHT.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

அன்பு வனிதா,
குறிப்பு அருமை. ஒரு சின்ன தகவல்.. கொள்ளை ஊறவைக்கவே தேவை இல்லை. அப்படியிய குக்கரில் போட்டு 5 /6 விசில் விட்டால் வெந்து விடும்.

எனக்கு கொள்ளூ சுண்டல் செய்வதற்கு குறிப்பு கொடுத்ததற்கு நன்றி,நான் செய்து பார்த்துட்டு பின்னோட்டம் தருகிறேன் அக்கா.

தாமதமா பதில் சொல்றதுக்கு கோச்சிக்காதிங்க... 2 நாளா வெளியே போயிட்டு வந்தேன், அதனால் பதிவிட நேரமில்லை.

மோகனா.. மிக்க நன்றி. அவசியம் அம்மா வந்தது கேட்டு குறிப்பு குடுங்க. :)

சாந்தினி... மிக்க நன்றி. நீங்க சொல்வது சரி, அம்மா சொல்வாங்க ஊறவும் தேவை இல்லை, குக்கரும் தேவை இல்லை சும்மா அடுப்புல போட்டாலே வெந்துடும்'னு. ஆனா நான் எப்பவும் 1 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் ஒரு விசில் விட்டு சிறுந்தீயில் 5 நிமிடம் வைப்பேன். பழகி போயிடுச்சு அப்படியே. வருடக்கணக்கில் பருப்பு வகைகள் இங்கிருந்து வாங்கி வைத்து பயன்படுத்துவதால் துவரம்பருப்பு கூட ஊற வைத்தே செய்வேன். :(

சஹ்லா... மிக்க நன்றி செய்துட்டு சொல்லுங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஓ வருடக்கணக்கில் வைத்து பயன்படுத்துகிரீர்களா!!

தானியங்களை வருடக்கணக்கில் பூச்சி பிடிக்காமல் எப்படி பாதுகாக்கிரீர்கள்? எனக்கும் சொல்லுங்களேன். 3 மாதங்கள் கூட என்னால் வைத்துக் கொள்ள முடிவது இல்லை.வெய்யிலில் காய வைத்து வைத்தாலும் பூச்சி பிடித்து விடுகிறது.. :(((

சாந்தினி... ஆம் எங்களுக்கு முதல் முறை போகும்போது 1000 கிலோ'கு மேல் எடுத்து செல்ல அனுமதி உண்டு. அப்போதே அங்கு கிடைக்காத தேவையான பருப்பு, அரிசி எடுத்து செல்வோம். சுலபமான வழி Airtight bags'ல் போட்டு ஃப்ரீஜரில் போடுவது. என்னிடம் முதலில் இருந்த வீட்டில் வெறும் ஃப்ரீஜர் மட்டுமே ஒன்று இருந்தது. அதனால் அது சாத்தியம். இரண்டாவது வீட்டில் என்னுடைய சொந்த ஃபிரிஜ். அதனால் எல்லாம் வாங்கி போகும்போதே கடையில் சொல்லி Zandu tablets (Herbal) போட்டு பேக் செய்து விடுவேன்(1 tab per kg). அதனால் வருடம் ஆனாலும் பூச்சி வராது. அரிசி, பருப்பு, ரவை... எல்லாமே அப்படி தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு வனிதா,
மிகவும் நன்றி.. அறுசுவை மூலம் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது..

1000 கிலோவா!!!!!. 1 டன் -ல ஊருக்கே ஒரு வருசத்துக்கு சமைக்கலாமே!!! 100 கிலோவ அப்படி எழுதிட்டீங்களோ?

அன்புடன்,
இஷானி

சாந்தினி... மிக்க நன்றி. நீங்களும் கடைகளில் கேளுங்க, இந்த மாத்திரை கிடைச்சா வாங்கி பயன்படுத்துங்க. ஆனா மறக்காம சமைக்கும் முன் அதை நீக்கிடுங்க. மாவுகளில் போடுவதானால் இட்லி பாத்திரத்துக்கும் போடும் துணியை சிறு துண்டுகளாக வெட்டி அதனுள் மாத்திரையை வைத்து முடிச்சு போட்டு போடுங்க. சென்னை, டெல்லி என எல்லா இடத்திலும் இது கிடைக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இஷானி... இல்லை நான் சரியா தான் சொல்றேன். நாங்க கப்பல் அல்லது விமானம் மூலம் முதன் முதலாக ஒரு நாட்டுக்கு போகும்போது 700 - 1200 கிலோ வரை கொண்டு செல்ல அனுமதி உண்டு. இது எங்களுக்கு 3 வருடத்துக்கு தேவையான எல்லா பொருளும் கொண்டு செல்ல. பாத்திரம், துணி என எல்லாம் அடங்கும். எவ்வளவு எடுத்து போனாலும் அங்கே நாங்கள் அவசியம் மாதம் ஒரு பார்ட்டியாவது நடத்தி ஆகணும்... அதனால் நிச்சயம் செலவாகித்தான் போகும். நான் சிரியா போனபோது 750 கிலோ கொண்டு போனேன், பத்தாமல் போய் வருடா வருடம் வரும்போதெல்லாம் 60 கிலோ, அப்படியும் சிரியாவில் வாங்க வேண்டியிருந்தது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நேற்று கொள்ளு சுண்டல் செய்து பார்த்தேன் ரொம்ப நல்லா இருந்தது அக்கா.

சஹ்லா... செய்து பார்த்து பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு வனிதா,
//நீங்களும் கடைகளில் கேளுங்க, இந்த மாத்திரை கிடைச்சா வாங்கி பயன்படுத்துங்க. ஆனா மறக்காம சமைக்கும் முன் அதை நீக்கிடுங்க. மாவுகளில் போடுவதானால் இட்லி பாத்திரத்துக்கும் போடும் துணியை சிறு துண்டுகளாக வெட்டி அதனுள் மாத்திரையை வைத்து முடிச்சு போட்டு போடுங்க. சென்னை, டெல்லி என எல்லா இடத்திலும் இது கிடைக்கும்.//

உங்கள் தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி.இப்போது தான் பார்த்தேன். மேலும் அந்த zandu tablet எந்த கம்பனியின் தயாரிப்பு என்று கூறமுடியுமா? அது தெரிந்தால் தருவித்துத் தர முடியும் என்று கடையில் கூறினார்கள்.மருந்து கடைகளில் கிடைக்க வாய்ப்பு உண்டா?

சாந்தினி... எனக்கு கம்பெனி பெயரெல்லாம் சரியா தெரியலயே. அந்த பாக்ஸும் மாலே'வில் இருக்கு, சென்னையில் என்னிடம் இல்லை. நான் வெளியே போனால் விசாரித்து சொல்லட்டுமா? தாம்பரம் ரோட்டில் ஒரு கடையில் வாங்கியதாக அண்ணா சொன்னார், நான் போகும்போது விசாரித்து உங்களுக்கு சொல்றேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கிடைச்சிடுச்சு வனிதாஆஆஆஆ...

இன்று ஒரு மெடிக்கல் கடையில் கேட்டோம்.. இருந்தது.. :) அது இமாமி கம்பனி தயாரிப்பு.. (zandu parad tablet) என்று பெயர் உள்ளது... பூச்சி பிடித்ததால் ஒரு கிலோ கொள்ளைத்தான் வீணடித்தேன்.. உங்களின் அந்த கொள்ளு recipe மூலமே ஒரு விடிவும் கிடைத்து விட்டது.. :))

சாந்தினி... அதே தான். பிடிச்சுட்டீங்களா?? சந்தோஷம். இனி சரியா வாங்கும் போதே அதை போட்டு வைங்க. பூச்சி பிடிச்ச பிறகு இது எதுவும் ஒதவாது. முதலிலேயே போட்டு பாதுகாத்துக்காங்க. 1 கிலோ'கு 1 மாத்திரை போடுங்க. கூடுதலா போட்டா தப்பில்லை, குறைவா போடாதிங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கொள்ளை நேற்று வடைக்காக ஊற வைத்தேன்,ஆனால் வடை சுட நேரம் இல்லாததால் தண்ணீரை வடித்துவிட்டு ப்ரிட்ஜில் வைத்து விட்டேன்,என் கணவருக்கு சுண்டல்னா பிடிக்கும்,அருசுவையில் வந்து தேடினா........அட நம்ம வனி!!!!!!!உடனே பதிவு போடனும்னு தோனிச்சி,இன்னைக்கு சாயந்திரம் உங்க சுண்டல் தான் செய்யப் போரேன்,செஞ்சிட்டு சொல்ரேன் வனி!

Eat healthy

அவசியம் செய்துடுட்டு வந்து மறக்காம பிடிச்சுதான்னு சொல்லுங்க :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தோழி வனிதா!சுண்டல் செஞ்சேன்,ஆனால் அதில் சில மாற்றங்கள்,இஞ்சியை பொடியாக அரிந்தும்,மாங்காயையும் பொடியாக அரிந்தும் தாளிக்கும்போது சேர்த்துக் கொண்டேன்,ரொம்ப சுவையாக இருந்திச்சி,அப்புறம் எனக்கு ஒரு சந்தேகம்,நானும் இந்தியாவிலிருந்து ப்ரான்ஸ் வரும்போது 30 அல்லது 35 கிலோவுக்கு மேல் அனுமதி கிடையாது,நீங்க எந்த நாட்டுக்கு எந்த ஃப்ளைட்டில் போறீங்க?இவ்வளவு கிலோ அனுமதிக்கிறாங்களே!!!!!!!!!!!!எனக்கு ஒன்னுமே புரியல வனி!!!!!!!!!!!!!!

Eat healthy

மிக்க நன்றி. நாங்க டிப்லோமேட்ஸ் என்பதால் அதிக கிலோ கொண்டு செல்ல அனுமதி உண்டு. அது எந்த நாட்டுக்கு போனாலும், எந்த ப்ளைட்ல போனாலும் சரி :) குழப்பம் தீர்ந்ததா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

i have confusion vani!!!!!diplomets mean???? plz explain to me

Eat healthy