கருத்தரிக்க , கருத்தரிக்காமல் தடுக்க இயற்கையான வழி

அன்பு தோழிகளே ,
கருத்தரிக்க திட்டமிடுவோரும் சரி , கருத்தரிக்காமல் தடுக்க நினைப்போரும் சரி முதலில் அறிய வேண்டியது "அண்டம் (ஓவா ) வெளியேறும் நாள்". குத்துமதிப்பாக 14 ம் நாள் என்றோ மாதவிடாய் சுழற்சியின் நடுமத்திய நாள் என்றோ கணக்கிடாதீர்கள் . சரியாக 28 நாட்கள் சுழற்சியில் உள்ளோர்க்கும் சில சமயங்களில் ஒரு நாள் முன்போ பின்போ ஒவிலேசன் ஆகலாம் .
நார்மலாக ஒவொரு மாதமும் பெண் இனபெருக்க உறுப்பான ஓவரியில் 4 பாளிக்கில்ஸ் உருவாகும் . ஒன்று மட்டும் வளர்ச்சி அடைந்து முட்டையாக பெலூப்பியன் குழாய்க்கு வரும் . அங்கு விந்தணுவுடன் இணைந்து கரு (fertilized egg) உருவாகி கருப்பைக்கு வரும் . பின்பு அங்கு பொருந்தி (இம்ப்லான்ட் ) வளர ஆரம்பிக்கும் .
பாளிக்கில் வெளியேறும் நாளில் தம்பதியர் சேர்ந்திருந்தால் நிச்சயம் கரு உண்டாகும் . இதை நாம் எளிதாக கண்டறியலாம் . மெடிக்கல் கடை (அ) மருத்துவமனைகளில் basal body temperature பார்க்கும் தெர்மொமீட்டர் கிடைக்கும் . அதை வாங்கி மாதவிலக்கு ஆன முதல் நாளில் இருந்து தினமும் காலையில் கண் விழித்ததும் படுக்கையிலிருந்து எழும் முன்பாக வாயில் நாக்கிற்கு அடியில் வைத்து ரீடிங் எடுக்கவும் . இதை ஒரு நோட்டில் தேதியுடன் குறித்து வைக்கவும் .
" இந்த ரஈடிங்கை தினமும் ஒரே நேரத்தில் எடுக்க வேண்டும் என்பது முக்கியம்".
நம் உடலின் வெப்பநிலை மாதவிலக்கு ஆகும் நாளில் நார்மலாக இருக்கும் .ஆனால் ஓவா வெளியேறும் நாளில் மிக அதிகமாக இருக்கும் .இதை "பீக் டே" என்று கூறுவர். உங்களுக்கு கிராப் (கிராப்) துல்லியமாகப் போடத் தெரிந்தால் வரைந்து பாருங்கள் சட்டென்று மேலே செல்லும் . பின்பு மீண்டும் சரியும் .அதாவது வெப்பநிலை குறையும் . உதாரணத்திற்கு கீழே உள்ள ரிடிங்கை பாருங்கள் .
ஒரு வேலை நீங்கள் கருத்தரித்துவிட்டால் வெப்பநிலை குறையாமல் , அதே வெப்பநிலையிலோ அல்லது ஒவிலேசன் டே ல் இருந்ததைவிட சற்று (1 அ 2 பாயின்ட் ) அதிகரித்து அதுவே மெயிண்டன் ஆகும் .

Day 1 - 36.3 (AF-light flow)
Day 2 - 36.1 (AF- heavy flow)\
Day 3 - 36.0 (AF - heavy flow)
Day 4 - (AF - medium flow)
Day 5 - (AF - light flow )
Day 6 - 36.1
Day 7 - 36 .1
Day 8 - 36.1 ( CM - dry)
Day 9 - 36.3 (CM - dry)
Day10- 36.1 (CM - sticky )
Day11- 36.1 (CM - sticky )
Day12- 36.1 (CM - sticky + creamy)
Day13- 36.4 Ovulation ( CM - watery )
Day14- 36.4 ( CM - watery )
Day15- 36.3 ( CM - watery )
Day16- 36.3 ( CM creamy )

இது போல தொடர்ந்து 3 அல்லது 4 மாதங்கள் குறித்துப் பார்த்தால் உங்களின் ஒவிலேசன் டே தெரிந்துவிடும் . கருத்தரிக்கக் விரும்புவோர் அந்த நாளுக்கு முன்பு இரண்டு நாளும், பின்பு இரண்டு நாளும் சேர்த்து ஐந்து நாட்களும் தம்பதியர் சேர்ந்து இருக்க வேண்டும் . கருத்தரிக்காமலிருக்க இந்த ஐந்து நாட்களையும் தவிர்க்க வேண்டும் .
இந்த முறை மாதவிடாய் சுழற்சி 28 நாட்களாக இருப்போருக்கு மிகத் துல்லியமாக பயன்படும் . மேலே உள்ள உ.ம். மாதவிடாய் சுழற்சி 28 நாட்களுக்கனது . மாதவிடாய் சுழற்சி சிலருக்கு 30 அல்லது ௩௫ நாட்களாக இருக்கும் . அவர்களுக்கும் இந்த முறை உதவும் .
மாதவிடாய் மிகவும் இர்றேகுலராக இருப்போருக்கு இம்முறை உதவாது . இவர்கள் வெள்ளைப்படுதலை வைத்து ஓரளவிற்கு ஓவிலேசன் டே வை அறியலாம் .
மாதவிடாய் முடிந்தவுடன் வெள்ளைப் படாது . பின்பு அது திக்காக வெளிப்படுவதை காணலாம். கலரும் சற்று அழுக்கு கலரில் இருக்கும் . ஒவிலேசன்க்கு இரண்டு நாட்களுக்கு முன்பிலிருந்து அது கிரீம் கலரில் சற்று வழவழப்பாக இருக்கும் . ஒவிலேசன் டே அன்றும் அடுத்த இரண்டு நாளும் மிக தின்னாகவும் ( முட்டையின் வெள்ளைக்கரு போன்று ) வெண்மையாகவும் , transparant ஆக இருக்கும் . பின்பு மீண்டும் திக்காக வெளிப்படும் .இதைக்கொண்டு ஒவிலேசன் டே வை அணுகியோ தவிர்த்தோ இருக்கலாம். பெண் உறுப்பில் வெள்ளைப்படுதல் கருத்தரிப்பதி மிக முக்கிய பங்கு வகிக்கிறது . அது திக்காக உள்ள போது ஆண் விந்து பெல்லூப்பியன் குழாயை சென்றடையாது.. இடையிலேயே இறந்துவிடும் . அது டிரான்ஸ்பாரன்டாக இருக்கும் போது மட்டுமே விந்துவால் பெல்லூப்பியன் குழாயை அடைய முடியும் .
இதைத்தவிர இப்போது ஒவிலேசன் கிட் எல்லா மருந்து கடைகளிலும் கிடைக்கிறது . மாதவிடாய் ஆன எட்டாம் நாளில் இருந்து இதைக் கொண்டு செக் செய்யலாம் .
சில வாரங்களுக்கு முன்பே இந்தப் பதிவை போட நினைத்தேன் . இயலவில்லை . PCOS உள்ளோர்க்கு சில டிப்சை அடுத்த பதிவில் தருகிறேன் .

ஹாய் டெய்சி,

மிக்க நன்றி , இந்த இழை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

எப்படி இருக்கீங்க ? பூன்லே பதிவுககு வந்து பதிவு போட்டேன் . உங்களிடமிருந்து பதிலே இல்லை. நான் பெடாக் னார்த்தில் இருக்கேன்.

self-confidense is the key to open the door of happiness in your life

பயனுள்ள பதிவு. நன்றி டெய்ஸி அவர்களே. PCOS உள்ளோர்க்கான பதிவிற்ககா காத்திருக்கிறேன்.

டெய்சி நான் உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்கிறேன், நான் மிக குழப்பத்தில் உள்ளேன்ப்பா, நான் தற்போது IUI போட்டேன்ப்பா, BLEEDING அயிடுச்சு, என்னகு IRRUGULAR PERIODS ப்பா என் HUSBENDKKU 13 MILLION SPERM COUNT சோ இயற்கையா நாங்க ரென்டு பேரும் HEALTH IMPROVEKKU வாய்ப்பு உள்ளதா? உங்கள் பதிவு என்னகு மிக உதவியாக இருக்கும்ப்பா?

சிரித்த முகமும் தெளிவான வார்த்தையும் ஒரு பெண்ணின் அம்சம்

Hello Daisy
First thanks fr ur kind information.. Really it wl b very useful for all of us.. Then one more thing pa.. In many shops i searchd for OP kit.. Not found anywhere,,
Pls say me where can i get it in madurai..

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

Very useful Topic. Keep it up. Thank you.

எனக்கு திருமணம் ஆனதிலிருந்து தூரமாவது 2 நாட்கள் முன்பே வந்து விடுகிரது.திருமணத்திற்கு முன் 30ம் தேதி வரும்
முதல் மாதம் - 28
2-ம் மாதம் - 26
3-ம் மாதம் - 25
4-ம் மாதம் - 23
5-ம் மாதம் - 21
6-ம் மாதம் - 19
7-ம் மாதம் - 16
8-ம் மாதம் - 15
9-ம் மாதம் - 13
10-ம் மாதம் - 11
இவ்வாறு தேதி முன்பே வந்து கொன்டு இருக்கிரது. இந்த மாதம் 2 நாட்கள் மட்டுமே மாத விலக்கு இருந்தது. எனகு ஒரெ குழப்பமாக உள்ளது. இதனல் தான் குழந்தை தள்ளி போகிரதோ என்று யாரெனும் என் குழப்பத்தை தீர்த்து வையுங்கலேன்

ஜெயந்தி ,
IUI செய்ததாகக் கூரியுள்ளீர்கள் . சிலருக்கு ஒறே முறையில் செட்டாகிவிடாது . ஹார்மோன் பிரச்சனை இல்லாமல் இருந்து , கர்பப்பையில் கரு சரியாக பொருந்தினால் தான் தங்கும் . அலைச்சல் இல்லாமல் , வெயிட் தூக்காமல் , முடிந்தால் பெட் ரெஸ்ட் எடுங்கள் .
ஆண் விந்துவின் அளவு 20 மில்லியன் இருக்க வேண்டும். உங்கள் கணவருக்கு குறைவாக உள்ளது . எனக்கு தெரிந்து பாதாம், முந்திரி, செவ்வாழை போன்றவை விந்துவின் அளவை அதிகரிக்கும். இது பற்றி முன்பே ஒரு இழையில் பதிவைப் பார்த்தேன். அதை தேடிப்பாருங்கள் .

self-confidense is the key to open the door of happiness in your life

ஹாய் அனிதா , என் பெயரும் அனிதா தான் , அனிதா டெய்சி . ஒவிலேசன் கிட் சென்னையில் எல்லாக் மருந்து கடைகளிலும் கிடைத்தது . நான் சேலம் வந்த பிறகு ரெகுலராக வாங்கும் மருந்து கடையில் சொல்லி வாங்கினேன் . நீங்களும் தெரிந்த மருந்து கடையில் சொல்லி வைத்தால் வாங்கித் தருவார்கள் .

self-confidense is the key to open the door of happiness in your life

சாந்தினி , பக்ஸ்-கான பதிவை நாளை போடுகிறேன் .

self-confidense is the key to open the door of happiness in your life

மேலும் சில பதிவுகள்