அன்பின் தேவா

ஹாய் தேவா எப்படி இருக்கிங்க?என்னால் உங்களுக்கு எவ்வளவு சிரமம் என்று நினைக்கும் போது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.உங்கள் வேலை நேரத்திலும் எனக்காக சிறிது நேரம் ஒதுக்கியதற்கு எப்படி நன்றி சொல்வேன்.எனக்கு 1 சகோதரி இல்லாத குறையை நீங்கள் தீர்த்துவிட்டிர்கள்

உங்க குட்டி பையன் எப்படி இருக்கான்.தேவா எனக்கு MsAccess ஓரளவுக்கு தெரியும்,MySOL ம் தெரியும் அது பிரச்சனை இல்லை.நான் பஹ்ரைனில் இருக்கேன்.இது மிகவும் சின்ன நாடு.Software Company கூட 1 தான் உள்ளது.
மதுரையைவிட சின்ன ஊர் என்று சொல்லலாம்.இங்கு MsAccess போன்ற வேலைகளை தேடுவது மிகவும் கடினம் என்று எனக்கு தெரியும்.இருந்தாலும் நான் MsAccess படிப்பேன்.இங்கு Software துறையில் வீட்டிலிருந்தே வேலை பார்பது சாத்தியமா என்பது எனக்கு தெரியாது.

அதனால்தான் நான் MTயை தேர்ந்தெடுக்க விரும்புகிறேன்.இங்கு MT கன்சல்டன்சி கூட இல்லை.நான் MT படித்தாலும் இந்தியாவில் இருந்து ஆன்லைன் மூலம் தான் படிக்க வேண்டும்.இங்கு Electrical Contracting and civil company தான் அதிகமாக உள்ளது.

Software துறையில் வேறு எப்படி வேலை பார்ப்பது என்று எனக்கு தெரியவில்லை.நீங்கள் சொன்னது போல் நான் MsAccess,MySQL படிக்கிறேன்.இருந்தாலும் நீங்கள் எனக்கு MTயை பற்றிய விவரங்கள் மட்டும் சேகரித்து கொடுத்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்.
என் வாழ்க்கையிலிலும் நீங்கள் என் வெற்றிக்கு காரணமாக இருப்பீர்கள்.

ரொம்ப நன்றி தேவா

ஹாய் மல்லி,
தாமதமான பதிலுக்கு சாரி சொல்லிக்கிறேன். நீங்கள் கேட்ட MT பத்தின டீடெயில்ஸ் என்னால முடிஞ்ச அளவுக்கு இங்கே சொல்லி இருக்கேன். மற்ற விபரங்களுக்கு நான் கொடுத்திருக்கும் லிங்குகளில் பாருங்க. ஆன்லைனிலும் நிறைய காண்டாக்ட்ஸ் கிடைக்கும். பொதுவா MT செய்ய உங்ககிட்ட Braodband நெட் கனெஷன் இருக்கணும். மினிமம் 512 kbps ஸ்பீடாவது இருக்கணும். அப்புறம் Backup supply உங்க PC க்கு இருக்கணும். Voice Files ஐ அவங்க அனுப்பி வைப்பாங்க. அதை ரிசீவ் பண்ண பாஸ்ட் இண்டர்நெட் கனெக்ஷன் அவசியம். பொதுவா 50 WPM (Word Per Minute) அளவுக்கு உங்களுக்கு டைப்பிங் ஸ்பீட் இருக்கணும். ஒரு நாளில் குறைந்தது 500 லைனாவது டைப் அடிக்க வேண்டியிருக்கும். சில சமயம் ஷிப்ட் முறையிலும் நீங்கள் ஒர்க் பண்ண வேண்டியிருக்கும். அதாவது நீங்க உங்க நாட்டில் இருந்தாலும், அவங்களுக்கு ஆன்லைன் வேலை செய்யும்போது அவங்க சொல்ற நாட்டு டைமில் நீங்க அவைலபிளா இருக்கணும். Medical Transcriptionist ங்கறது ஸ்டார்ட்டிங் வேலைதான். ப்ரூஃப் ரீடர், எடிட்டர், டெக்னிகல் ஹேண்ட், கன்சல்டண்ட்னு அதிலேயே பல வேலைகள் இருக்கு. எல்லா BPO வும் Offshore Candidates ஐ எடுத்துக்கறதில்லை. காரணம், உள்ளூர் ஆளுங்கன்னா, கண்ணுக்கு எதிரேயே இருப்பாங்க. அவங்களுக்கு Mentoring ஈசி. சிலர் மட்டுமே இப்படி home based candidates ஐ எடுத்துக்கறாங்க. அதிலேயே முதலில் முக்கால்வாசி, இண்டர்வ்யூ, ட்ரெயினிங்லாம் நேரில் வந்து அட்டண்ட் பண்ற மாதிரிதான் வெச்சிருக்காங்க.
இந்த லிங்கில் ட்ரெயினிங் பத்தி சொல்லி இருக்காங்க.
http://medilogistics.net/.

இவங்க ஹோம் பேஸ்ட் வேலைக்கு ஆலோசனை கொடுக்கறாங்க.
http://www.acusisindia.com/AIP0302/Home.asp

அமெரிக்கா மட்டுமில்லாமல் ஆசிய நாடுகளுக்கும் இந்த MT வேலை செய்து கொடுக்கறாங்க. அமெரிக்காவா இல்லாட்டி ஏஷியாவில் எந்த நாடோ அந்த நாட்டு Accent ல் பயிற்சி கொடுப்பாங்க. கல்சர் கொஞ்சம் தெரிஞ்சிருக்கறதும் அவசியம். நீங்க கிரடிட் கார்டுக்கு போன் பண்ணும்போதே கால்செண்டரில் உள்ளவங்க இப்படி தெரிஞ்சமாதிரி பேசறதைக் கேக்கலாம். வெதர் எப்படி, உங்க டே எப்படின்னு பொதுவா விசாரிப்பாங்க நாட்டுக்கு தகுந்த மாதிரி. அடுத்து, Accent புரிஞ்சுக்காம நிச்சயம் இந்த வேலை சாத்தியப்படாது. காரணம் இது மெடிக்கல் துறையை சேர்ந்த வேலை. பிழைகள் அதிகம் இருந்தால் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். 99% அளவுக்காவது சரியாக இருக்க வேண்டும். அந்த நாட்டு டாக்டர்கள் வேகமாகவோ, நிதானமாகவோ சொல்லும் விஷயங்களை அப்படியே வாய்ஸ் பைலாக மாற்றி அனுப்ப, அதனை ரிப்போர்ட்டாக தயாரித்து அவர்களுக்கு அனுப்புவதுதான் வேலை. இதில் கீழ்கண்ட விஷயங்களில்தான் ட்ரெயினிங் பொதுவா இருக்கும்.
1) Medicine
2) American English
3) Computers
4) Medical Transcription
5) Typing
6) American Culture Traning
7) American Accent Training
8) Soft skills

இதெல்லாம் அடிப்படையா இருக்கவேண்டிய தகுதிகள்.
a) Proficiency in English.
b) Good listening, writing and comprehension skills.
c) An eye for detail.
f) Typing and basic knowledge in computers

சென்னையைவிட ஹைத்ராபாதில் நிறைய BPO, Home based Candidates எடுக்கறாங்க. இந்த லிங்குகளில் பார்த்து காண்டாக்ட் பண்ணி தெரிஞ்சுக்குங்க. உங்களுக்கு பேசிக்கா நிறைய ஐடியாஸ் இதிலிருந்து கிடைக்கும்னு நம்பறேன். வேலை கிடைச்சதும் சொல்லுங்க. ட்ரீட் வாங்காமல் விடமாட்டேன்.
www.elicobpo.com
www.yogambpo.in
www.cbaysystem.com
www.transdyne.in
www.cactusglobal.com
இந்த தகவல்கள் போதும்னு நினைக்கிறேன். அப்புறம், MS- Access பெரிசா செலவு இல்லை. எலல கம்பெனியிலும் MS- Office , Access உடந்தான் வாங்கி இருப்பாங்க. அவங்க எதுவும் புதுசா சாப்ட்வேர் வாங்க வேண்டியதில்லை. அதுவுமில்லாம எல்லா இண்டஸ்ட்ரீசுக்குமே நீங்க இந்த பேக்கேஜ் செய்ய முடியும். உங்க டிசைனிங் மற்றும் பிசினஸ் திறமை தான் முக்கியம்.

Note: ஆன்லைன் ஜாப்ஸ் எல்லாத்துலயுமே நல்ல ஆளுங்களும், ஏமாத்தற ஆளுங்களும் இருப்பாங்க. பக்காவா விசாரிச்ச்ட்டு அப்புறம் கமிட் பண்ணிக்குங்க. இங்கே குறிப்பிட்டு உள்ள லிங்க்ஸ் எல்லாமே ஒரு ஐடியாவுக்கு மட்டும்தான். இவங்க ஓக்கேனு நான் நிச்சயம் சர்ட்டிபிகேட் கொடுக்கல. நீங்கதான் பார்த்து, விசாரிச்சு முடிவு பண்ணனும்.

How Are U Deva?
தேவா ரொம்ப நன்றி,எனக்காக கஷ்டப்பட்டு தகவல் தந்து இருக்கிங்க.ரொம்ப நன்றி நீங்க கொடுத்து இருக்கிற லிங்க் போய் பார்க்கிறேன்.நானும் 1 மாதமாக கொஞ்சம் தகவல்கள் சேகரித்து வைத்து இருந்தேன்.Foot pedal software இன்ஸ்டால் பண்ண சொல்லி இருக்கிறார்கள் டாக்டர்கள் பேசுவதை Rewind,Forward,slow பண்ணி கேட்ப்பதற்காக.

எனக்கு சில ஐடியாக்களை கொடுத்துள்ளன.எனக்கு சில சந்தேகங்கள் உள்ளது,உங்களிடம் கேட்கலாமா தேவா?. Medical Transcriptionist ங்கறது ஸ்டார்ட்டிங் வேலைதான். ப்ரூஃப் ரீடர், எடிட்டர், டெக்னிகல் ஹேண்ட், கன்சல்டண்ட்னு அதிலேயே பல வேலைகள் இருக்கு.

அப்படின்னு சொல்லி இருக்கிங்க.1 Medical Transcriptionist இந்த எல்லா வேலைகளையும் பண்ணனுமா?நிறைய புரூவ் ரீடிங்க் பண்னனும்,டேட்டா டைப் பண்ணிட்டுன்னு சொல்லி இருக்காங்க,ப்ரூப் ரீடிங்க் எப்படி பண்ணுறதுன்னு 1 ஐடியாவே இல்லை.எனக்கு Soft Skills இருக்கான்னு தெரியலை.இந்த ஜாப் என்னால பண்ண முடியுமான்னு எனக்கு இப்ப 1 பயம் இருக்கு.உங்க மேல் பாரத்தை போட்டுட்டு வேலையை நீங்க இருக்கிங்கன்ற நம்பிக்கையில தேவாவை மனசுல நினச்சுகிட்டு தொடங்க முயற்சிக்கிறேன் தேவா.

இன்னும் நிறைய குழப்பங்கள் இருக்கிற மாதிரி இருக்கு.புரியாத மாதிரி இருக்கு.இன்னும் நிறைய விஷயங்கள் தெரிஞ்சிக்கணும்னு நினக்கிறேன்.தேங்க்ஸ் தேவா

டியர் தேவா எப்படி இருக்கிங்க?உங்க பசங்க எப்படி இருக்காங்க?எனக்கு அவசரமாக உங்க உதவி தேவை படுது தேவா,நீங்க குடுத்த 1 லிங்க்கில் எனக்கு பிரீயா நெட்ல MT கோர்ஸ் மெட்டீரியல்ஸ் 1 சைட்டுல கிடைச்சிருக்கு
அதோட URL கீழ குடுத்து இருக்கேன்.Please Open பண்ணி பாருங்க
http://mttutorial.blogspot.com/2008/02/human-physiology-and-medicine.html

நான் இந்தியா போயி MT படிக்கிற வரைக்கும் இதை ஓரளவு படிக்கலாம்னு நினைக்கிறேன்.என்னோட பெரிய சந்தேகங்கள் என்னன்னா?இதுல இருக்கிற எல்லா Lessonsஐயும் மனப்பாடம் பண்ணனுமான்னு சந்தேகம்,அதாவது Medical prefix,suffix அந்த மாதிரி யெல்லாம் குடுத்து இருக்காங்க பாருங்க,அதெல்லாம் எப்படி படிக்கனும்னு உங்க ரிலேட்டிவ் MT கிட்ட கேட்டு சொல்ல முடியுமா தேவா பிளீஸ்.இந்த 1 ஹெல்ப் மட்டும் பண்ண முடியுமா தேவா

மேலும் சில பதிவுகள்