புதிய இந்திய உலாவி - Web Browser for India

Epic Browser
www.epicbrowser.com
Latest Film Songs. Live Cricket Scores. News from a Dozen+ Leading Sources. Regional and Hindi Language News. Live TV. Stock Quotes. Events. Videos. Even a Daily Joke.

புதிதாக ஒரு உலாவி யை இந்தியர்களுக்காக உருவாக்கி உள்ளார்கள்.
முயற்சி செய்து பாருங்கள்.. எனக்கு பிடித்து உள்ளது. நெருப்பு நரி உலாவியை (FireFox) இந்தியப்படுத்தி உள்ளார்கள்.

இந்திய மொழிகளில் தட்டச்சு செய்வது, தலைப்பு செய்திகளை உலாவியில் இருந்தப்படியே படிப்பது, போன்றவைகள் மிக அருமையாக வேலை செய்கிறது. ஸ்கீன்ஸ் (Skins) எனக்கு வேலை செய்யவில்லை. அதை என்னவென்று பாக்க வேண்டும்.

நட்புடன்
நாகை சிவா

"Follow your heart and your dreams will come true."

ரொம்ப நன்றி. Down load பண்ணச் சொல்லி வருதே! பண்ணிக்கலாமா?

musicmazaa.com இது எனக்கு தெரிஞ்ச முற்ரிலும் இலவசமான ஒரு உலாவி. இதுல இந்தியன் சினி பாடல்கள் மற்றும் பக்திப் பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றது.

Don't Worry Be Happy.

கண்டிப்பாக நம்பி பண்ணலாம். காலையில் இருந்து அதை தான் நோண்டிக் கொண்டு உள்ளேன்... (அறுசுவைக்கு திரை விமர்சனம் எழுத நினைத்து இருந்தேன் ;) ) கிட்டதட்ட 10 எம்.பி. அளவு கொண்டது. Spyware பிரச்சனை எல்லாம் ஏதும் இல்லை இது வரை. இருக்காது என்றே நினைக்குறேன். முயற்சி செய்து பாருங்கள். பிடிக்காவிடில் தூக்கிடலாம். சிம்பிள் தானே !

நட்புடன்
நாகை சிவா

"Follow your heart and your dreams will come true."

ஹாய் சிவா

நல்ல தகவல் நன்றி..
பயன்படுதினால் நன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது. உபயோகப்படுத்திப் பார்த்துவிட்டு கூறுகிறேன்.. ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹாய் சிவா வணக்கம்..

நாகை சிவா..நாகையில் எங்கே. எனக்கும் திருவாரூர் தான்.

நல்ல தகவல் நன்றி..தரவிரக்கம் செய்துக் கொண்டிருக்கிறேன். பார்க்கலாம் எப்படி என்று.

ஜேசுதாசன்.
-----------------------------------------------------------------
வாழ்க்கையில் சில நேரங்களில் நமக்கு கிடைக்கும் நண்பர்கள் கூட நம் வாழ்க்கையை நல்ல வழியில் திசை திருப்பமுடியும்....

சிவா..பட்டைய கிளப்புற ப்ரௌசெர் கொடுத்து இருக்கீங்க..மொக்கையா இருக்கும் நினைச்சு தான் போய் பார்த்தேன்...கலக்கல்..நன்றி சிவா..

Madurai Always Rocks...

நீங்கள் சொல்லியிருந்த எபிக் ப்ரௌஸர் டௌன் லோட் பண்ணினேன்.
பிறகு நமக்கு வேண்டிய நிகழ்ச்சி களை எப்படி தெரிவு செய்து பார்க்கனும்
என்று தெரியலையே? கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா.
இந்த கோமு வுக்கு எப்ப பார்த்தாலும் எதிலயாவது சந்தேகம் கேட்டுண்டே
இருக்கனும்.

Epic Browser ரொம்ப நல்லா இருக்கு. மிகவும் நன்றி.

அன்புடன்,
இஷானி

பயனுள்ள இழை...நல்ல தகவலுக்கு நன்றி.முயற்சித்துவிட்டு சொல்றேன்..

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

சிவா அண்ணா , எபிக் ப்ரௌசெர் மூலமா தமிழ்ல முதல் பதிவு இங்கயே கொடுத்துட்டேன் நன்றி அப்ப NHM writer download பண்ண வேண்டிய அவசியம் இல்ல தங்களுடைய தகவலுக்கு மிக்க நன்றி
லக்ஷ்மிஷங்கர்

மேலும் சில பதிவுகள்