ஏன் இப்படி நடந்தது?

குழந்தையின் தலை பிரசவத்தின் போது தானே திரும்பும்??.எனது தோழிக்கு குழந்தை 8 மாதத்திலேயே திரும்பி கொடியில் மாட்டி சிசுவையே..முடிவை எழுத்தால் எழுதக்கூட முடிய வில்லை.என்னால் இப்படி ஆனதை இந்த நிமிடம் வரைக்குமே நம்ப முடியவில்லை. ஏனெனில் அவளுக்கு கர்ப்பகால பிரச்சினைகள் எதுவும் இல்லை.தாயும் சிசுவும் நல்ல ஆரோக்யமாகவே இருந்தனர்.இப்படி நடப்பதற்கு 4 நாட்கள் முன்பு கூட Dr said every thing was normal.பிறகு ஏன் இப்படி நடந்தது?.. துக்கத்தில் இருக்கும் அவளிடம் எதுவும் கேட்கவும் முடியவில்லை. நீங்களாவது யாராவது சொல்லுங்களேன்.

நீங்க எழுதினதை படிக்கும்போதே வயித்தை கலக்கரது.
அந்த தாய் எப்படி தாங்கிக்கொண்டார்களோ?

சாந்தினி

உங்கள் தோழிக்கு எவ்வாறு ஆருதல் சொல்வதென்று தெரியவில்லை. காலம் தான் மருந்தாக அமைய வேண்டும். மனம் பாரமாகிவிட்டது.

எனக்கு இத பத்தி தெரிஞ்ச அளவுக்கு சொல்றேன்.

கர்ப்பிணி படுக்கும் போது ஏதாவது ஒருபுறமாக தான் படுக்கணும். நேராக படுக்க கூடாது. அதே போல் தூக்கத்தில்

திரும்பும் போது கூட படுத்திருக்கும் நிலையிலேயே மறுபுறம் திரும்ப கூடாது. அவ்வாறு செய்யும் போது குழந்தை

கொடியில் சுத்திக்கொள்ளும். எழுந்து உக்கார்ந்து 1 நிமிடம் கழித்து தான் மறுபுறம் திரும்ப வேண்டும்.

என் கொழுந்தன் பையனுக்கும் இப்படி தான். ஆனால் அவர்கள்
முனெச்சரிக்கையாய் இருந்ததால்

(குறை மாதத்திலும்) காப்பாற்ற முடிந்தது.

அது போல் மசக்கையில் வாந்தி எடுப்பது இயல்பு. ஆனால் 7 மாதத்திற்கு பிறகும் தொடர்ந்தால் குழந்தை

நெஞ்சில் வரும். இது இருவருக்கும் ஆபத்தை தரும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

komu madam ,தாங்கிக் கொள்வதா.. சிசுவை இழந்த துயரம் ஒருபுறம் மறுபுறம் அதை வெளிக் கொண்டுவருவதற்குள் நரகத்திற்கே சென்று வந்தது போல் இருந்தததாகக் கூறினாள். போனில் அழுத அவளுடன் சேர்ந்து கண்ணீர் மட்டுமே சிந்த முடிந்தது என்னால்.. என்ன சொல்லி தேற்றுவது அவளை..

amina madam, எனது அம்மாவிடமும் பேசினேன்... அவரும் படுப்பதில் கவனம் இல்ல விட்டால் இப்படி ஆகும் என்று தான் கூறினார்கள்.. உங்கள் கொழுந்தன் வீட்டார் முன் எச்சரிக்கையாக இருந்ததாக கூறினீர்களே.. தயவு செய்து அது எப்படி என்றும் கூறுகிறீர்களா இதை படிப்பவர்களும் எச்சரிக்கையாக இருக்க உதவும்...

சாந்தினி

நான் சொன்ன எச்சரிக்கை என்ற வார்த்தையை எந்த அளவில் எடுத்துக்கொண்டீர்கள் என தெரியவில்லை. இருந்தாலும் சொல்கிறேன்.

அவங்க அடிக்கடி செக்கப் போவாங்க. 7 மாதம் ஆரம்பிக்கும் போதே லேசான வயிற்று வலி ஏற்படும் போது சூட்டுவலி தான் என்று எல்லாரும் சொல்லியிருக்கிறார்கள். என் கொழுந்தனோ உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவிட்டார். நல்ல வேளையா இப்ப கொண்டு வந்தீங்க. இல்லைன்னா கொழந்தைக்கு ஆபத்து தான் என்றார்கள். போனவுடனே பெட்டில் சேர்த்தாச்சு. 1 மணி போராட்டத்திற்கு பின் குழந்தை பிறந்தது. கொடி சுத்தி பிறந்ததாளும், குறை மாதம் என்பதாலும் அனைவரும் பயந்தோம். என் மாமியாரின் பக்குவத்தில் எந்த குறையும் இல்லாமல் மீண்டுவந்தனர்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மேடம்.. கர்ப்ப காலத்தில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பது மட்டும் நன்கு புரிகிறது.

மேலும் சில பதிவுகள்