உருளைக்கிழங்கு அல்வா (குழந்தைகளுக்கு)

தேதி: July 18, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (5 votes)

 

1. உருளைக்கிழங்கு - வேக வைத்து மசித்தது 1 கப்
2. சர்க்கரை - 1 கப்
3. நெய் - தேவைக்கு
4. பால் - 1/4 கப்
5. முந்திரி, திராட்சை - தேவைக்கு


 

உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து வைகவும். விரும்பினால் மிக்சியில் போட்டு அடித்து வைக்கவும்.
நெய்யில் முந்திரி திராட்சை வறுத்து வைக்கவும்.
பாலை கொதிக்கவிட்டு சர்க்கரை சேர்த்து கரைய விடவும்.
இதில் மசித்த உருளை சேர்த்து நன்றாக கிளறவும்.
அல்வா பதம் வரும்போது முந்திரி திராட்சை நெய்யோடு சேர்த்து கலந்து எடுக்கவும்.


கையில் மசித்தால் பால்கோவா போலும், மிக்ஸியில் அடித்தால் அல்வா போலும் வரும். குழந்தைகளுக்கு வேக வைத்த உருளை கொடுப்பது நல்லது. 7 மாத குழந்தை என்றால் நெய் சேர்த்து அல்வா செய்தால் போதும் முந்திரி திராட்சை தேவை இல்லை. வெறும் வேக வைத்த உருளை கொடுப்பதை விட இதை விரும்பி சாப்பிடுவார்கள். சற்று வளர்ந்த பிள்ளைகளுக்கு வறுத்து சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நல்ல குறிப்பு.

உருளை கிழங்கு சாப்பிட அடம் பிடிக்கும் என் குழந்தைக்கு இந்த குறிப்பு பலன் தரும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா... மிக்க நன்றி. :) உங்க குழந்தையும் அடமா??? இங்கையும் அதே தான்!!! :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா அக்கா

வானிவாசு என்பது யார்?
ரொம்ப நாள் சந்தேகம்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா... அது வாணிவாசு இல்லை. வனிவசு. :) வனி நான், வசு என் தங்கை. அவ தான் எனக்கு சமைக்க கத்து குடுத்த முதல் ஆள். அதான் எப்பவும் அவ பெயரை சேர்த்து குறிப்பு குடுக்கறேன். சந்தேகம் தீர்ந்ததா? ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

புரிஞ்சுற்சு அக்கா.
உங்க தங்கை உங்களுக்கு சமையல் கத்து கொடுத்தாங்களா?
பேஸ்..பேஸ்......

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வனிதா மேடம்,
நல்ல குறிப்பு எனக்கு தான் உருளை பிடிக்காது
அல்வா பதத்தை எப்படி தெரிந்து கொள்வது?
மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா.. மிக்க நன்றி. பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வருவதே சரியான பதம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா அக்கா!
இன்னைக்கு ஈவ்னிங் உருலைக்கிழங்கு அல்வா செய்தேன். சொன்னபடியே என் மகன் விரும்பி சாப்பிட்டான். உருளை வாசனையே வரவில்லை என்பது கூடுதல் ஸ்பெஷல்.(எதுல செய்ததுன்னு என் கணவரால் கடைசி வரை கண்டுபிடிக்கவே முடில.)

இனி வாரம் ஒரு முறை எங்க வீட்டில் இந்த அல்வா தான். நன்றி அக்கா!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா... மிக்க நன்றி. மிக்சியில் அடித்தீர்களா, இல்லை கையில் மசிச்சீங்களா??? ஏன் க்கேக்குறேன்னா இரண்டுக்கும் வித்தியாசம் வரும். கையில் மசிச்சா பால்கோவா மாதிரி வரும், மிக்சியில் அடிச்சா அல்வா மாதிரி வரும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கையில் மசிச்சா(பாதி கட்டியா வந்தது) சரியா மானு மாறி வரலன்னு மிக்ஸியில் தான் 10 சுத்து ஓடவிட்டேன்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

உருளைக்கிழங்கு பிடிக்காத குழந்தையும் உண்டோ. எப்பவும்
சாதம், சப்பாத்திக்கு ஸைட் டிஷாக மட்டுமே பண்ணும் உருளையில்
ஸ்வீட்டாக ஒரு ரெசிப்பி சொல்லி இருக்கீங்க. சின்னக்குழந்தைகளுக்கு மட்டுமில்லீங்க. பெரிய குழந்தைகளும் விரும்பி சாப்பிடு வாங்க.

கோமு...என்ன இப்படி கேட்டுட்டீங்க??? என் இரண்டு குழந்தைகளும் உருளை சாப்பிட மாட்டாங்க. இப்படி குடுத்தா கொஞ்சம் கஷ்டம் இல்லாம ஊட்ட முடியுது :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

My baby doesn't like potato. yesterday i prepared & It's very tasty & Easy.she ate well. thanks to u