ஏமாற்றங்களும் மாற்றங்களும்...

அனைவருக்கும் வணக்கம்.பொதுவாகவே பெண்களிடம் எதிர்பார்ப்புகள் நிறைய இருக்கும். குறிப்பாகத் திருமண வாழ்க்கையைப் பற்றிய கனவுகளும்,திருமணத்திற்குப் பின் கணவரிடம் எதிர்பார்ப்புகளும் அதிகம் இருக்கும்.கனவுப்படியே கணவன் அமைந்தவர்களுக்கு வாழ்த்துக்கள்.ஆனால் அவ்வாறு இல்லாமல் போன போது அந்த ஏமாற்றங்களை எவ்வாறு எதிர்கொண்டீர்கள், என்ன மாதிரியான மாற்றங்களை உங்களுக்குளோ அல்லது கணவரிடமோ ஏற்படுத்தி வெற்றி கண்டீர்கள்.. உங்களது அனுபவங்கள் மற்றவர்களுக்கு உதவியாக இருக்குமே.. [எனக்கும் தான் :)].. பகிர்ந்து கொள்வீர்களா!!

cheers,
Changdini :)

என்னப்பா இது.. யாருக்குமே இப்படி பட்ட அனுபவங்கள் இல்லையா??

சாந்தினி..

எனக்கு இன்னம் அந்த அனுபவம் இல்லை.. நான் எதிர்பார்த்த வாழ்க்கைதான் எனக்கு அமைகிறது. இல்லையெனில் முதல் பதிவை போட்டிருப்பேன்..;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

உங்களுக்கு எதிர்பார்த்த வாழ்க்கையே அமைவதில் மிக்க மகிழ்ச்சி ரம்யா..
பதில் போட்டதற்கும் நன்றி. By the way உங்கள் ஊர் ஈரோடு என்று பார்த்தேன். நானும் ஈரோடு தான்.ஆட்சேபனை இல்லை எனில் எந்த பள்ளியில் படித்தீர்கள் என்று கூற முடியுமா?

நன்றி... சாந்தினி..

என் பிறந்த ஊர் ஈரோடு ஆயினும், என் தந்தை ஸ்டேட் பேங்க் கேஷியராக பணி புரிந்ததால் அடிக்கடி இடம் மாற்றம் வரும்.. அதனால் நான் ஈரோடு, பவானி, சத்தியமங்களம் என பல ஊர்களில் படித்தேன் ;-(

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஓ!.. நல்லது.. :)

சாந்தினி
அது போல் எனக்கு நடந்துற்கு. அப்பறமா சொல்றேனே!!!
ஏன்னா எங்கதை ரொம்ப பெருசு. டைப் அடிக்க 1 மணி நேரமாவது வேணும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கண்டிப்பாக.. உஙகள் பதிவிற்காக காத்திருக்கிறேன். :)

நானும் ஈரோடு தான். 12th வரைக்கும் கலைமகள் ல தான் படிச்சேன்.
நீங்க?
என்னோட பாலிசி இது தான்.
Dont expect anything and try accept everything.
expectation leads to disappointment.
என்னுடைய அனுபவம் இது தான். ஒரு சில விஷயங்களில் நீங்கள் அவரை அவராகவே ஏற்று கொள்ளுங்கள். பின்பு அவராகவே உங்களை புரிந்து கொண்டு ஒரு சில விஷயங்களில் அவரும் விட்டு கொடுப்பார்.
ஆனால் எனக்கு இதை பற்றி பேச இன்னும் நாள் ஆக வேண்டும், ஏனெனில் திருமணமாகி ஒரு மாதமே ஆகிறது.
நானும் ஆமினா அக்காவின் பதிவிற்காக காத்திருக்கிறேன்.

அன்புடன்,
சுதா வசந்தன்

ஒன்னா இரண்டா???

சென்னை விட்டு வெளிய போக மாட்டேன்னு அடம் பிடிச்சேன்... வாழ்க்கையே வெளிநாட்டில்!!!
வேலையை உயிரா நினைச்சேன்... வேலைய விட்டே போக வேண்டியதாயிடுச்சு!!!

இது வெறும் சாம்பிள்... அடுக்கினா அறுசுவை தாங்காது. எப்படி மாத்திகிறேன்னு கேட்டுட்டீங்க... ஒன்னே ஒன்னு தான் எங்க அப்பா சொல்லி குடுத்தது... "எது நடந்தாலும் நல்லதுக்குனு நம்பு". இன்னும் நம்பறேன். இதுவரை நடந்தது, இப்போ நடப்பது, இனி நடக்க போவது எல்லாம் நல்லதுக்கு தான்னு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆஹா இப்படி ஒண்ணு ஓடிக்கிட்டு இருக்கா! இப்பத்தானே பார்க்கறேன்.

ரொம்ப சிம்பிள். இன்னொருவரை(கணவராக இருந்தாலும்) நமக்கேற்றவாறு மாற்றுவது கஷ்டம். ஆனா நாம நம்பளை மாத்திக்கறது ஈசி. குறைவான எதிர்பார்ப்புகள் நிறைவான வாழ்க்கை இதுவே என் வாழ்க்கை தத்துவம் :)

கனவு கண்டபடி கணவர் அமையலியா டோண்ட் வொரி. கணவரின் குணம் நல்ல குணமா உங்களிடம் அன்பாக இருக்கிறாரா இந்த இரண்டும் மட்டும் இருந்தா போதும் உங்கள் கனவுகளை எல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு அவரை அவராக ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தால் வாழ்க்கை இனிக்கும்.

சினிமாவில் வர்ற மாதிரி சாக்லெட் கணவரை எதிர்பார்த்தால் பெரும்பாலும் ஏமாற்றமே மிஞ்சும். ஏன்னா அது சினிமா இது வாழ்க்கை.

மொத்தத்துல வாழ்க்கையை அதன் போக்கிலேயே இயல்பாக எடுத்துக் கொண்டால் ஹேப்பீஈஈ...இன்று முதல் ஹேப்பீ...தான்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்