கண் மருத்துமனை

ஹாய் தோழிகளே எல்லோருக்கும் மாலை வணக்கம்.....
நான் சென்னைல இருக்கேன்.. எனக்கு கண் problem இருக்கு... ஒருவருஷமா கிளாஸ் போட்டுருக்கேன். எனக்கு லென்ஸ் போடா விருப்பம் இல்லை.. அறுவை சிகிச்சை... எதாச்சும் ஹெல்ப் பன்னுமானு சொல்லுங்க... எனக்கு உங்கள் ஆலோசனை தேவை.. வாசன் கண் மருத்துமனை பற்றி உங்கள் கருத்து சொல்லுங்க... (வேற எந்த கண் மருத்துவமனைல நல்ல treatment பன்றாங்கனும் சொல்லுங்க).. உங்க பதில்க்காக காத்திருக்கேன்... ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க....

ஸ்டெல்லா

அரவிந்த் கண்மருத்துவமனை சென்னைல இருக்கா? நல்ல மருத்துவமனை.

வாசனும் அருமையான மருத்துவமனை தானே?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

Vasan Eye Care Hospital
New No. 165, Old No. 72, L.B. Road, Thiruvanmiyur, Chennai, Tamil Nadu 600041
044 22581573‎

Agarwal Eye Hospital
Cathedral Road, Teynampet, Chennai, Tamil Nadu
044 28112811‎
above 2 hospital are good eye care hospitals.

Note : Arvind eye Hospital Chennail Illai. Ok

சகிசரண்

ரொம்ப நன்றி. நான் இவ்வளவு நாளா சென்னைல இரும்னே நெனச்சுட்டு இருந்தேன்.

அதுசரி,
வாசன் தான் எல்லா எடத்துலையும் இருக்கே!!!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஸ்டெல்லா, அகர்வால், வாசன் இரண்டும் நல்ல முறையில் இருக்கிறது. மற்றவைகளில் நான் treatment செய்ததில்லை, அதனால் தெரியல. நான் 10 வருடங்களுக்கு மேலாக கண்ணாடிதான் அணிந்துள்ளேன்.

My kind advise is dont go for operations and laser, it wil give some side effects at the post-40 years.

அன்புடன்
பவித்ரா

ஹாய் ஸ்டெல்லா மேடம்

உங்க கண்ணுக்கு power problem அப்படின்னா நீங்க laser operation பண்ணிக்கொள்ளலாம். நான் 5 வருடங்களுக்கு முன்பு அரவிந்த் ஆஸ்பிட்டலில்(மதுரை) செய்து கொண்டேன். அரை நாள் மட்டும் மருத்துவமனையில் இருந்தால் போதும். இன்று வரை எனக்கு எந்த பிரச்சனையும் வரவில்லை.லென்ஸ் போடாதீா்கள். நான் அதையும் 3 வருடம் போட்டிருந்தேன். அதை maintain பண்ணுவது மிகவும் கடினம். கண் எரிச்சல் வரவும் வாய்ப்பிருக்கிறது. சென்னையில் பிரபலமான மருத்துவமனை பல இருக்கிறது. ஆனால் எனக்கு தெரியவில்லை. தோழிகள் யாருக்காவது தெரிந்தால் கூறவும்.

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

பதில் அளித்த amina mohammed, Shakisaran, pavithra_ram, radha hari உங்க எல்லாருக்கும் நன்றி... எனக்கு பவர் problem தான்... லேசர் பண்ணலாம்னு என்னோட தோழி சொன்னால்... அதன் உங்களோட ஆலோசனையும் கேட்கலாம்னு இங்க பதிவு போடேன்... நன்றி

வாசனில் என் கணவரின் நண்பர் சிகிச்சை பெற்றார்..

ஒன்றும் பிரச்சனையில்லை.பயப்படாமல் செய்யலாம்

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

மேலும் சில பதிவுகள்