தேதி: July 19, 2010
ஆரஞ்சு பூ செய்வதற்கு:
ஆரஞ்சு பழம் - ஒன்று
பென்சில்
கத்தி
புதினா இலைகள் - 3
ஆரஞ்சு கப் செய்வதற்கு:
ஆரஞ்சு பழம் - ஒன்று
கத்தி
செர்ரி பழம் - 5
டூத்பிக்
புதினா இலைகள் - 2
ஆரஞ்சை கொண்டு பூ மற்றும் கப் செய்ய தேவையான பொருட்களை தயார் நிலையில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஆரஞ்சு பழத்தோலின் மீது சுற்றிலும் ஏழு இதழ்கள் வருவது போல் முதலில் பென்சிலால் வரைந்து கொள்ளவும். வரைந்த இதழ்கள் ஒரே அளவாக சிறிது இடைவெளி விட்டு இருக்க வேண்டும். ஆரஞ்சு பழத்தின் மேலிருந்து முக்கால் பாகம் அளவிற்கு அதன் தோலை மட்டும் கவனமாக இதழ் போல் நறுக்க வேண்டும்.

கத்தியால் நறுக்கும் போது உள்ளிருக்கும் சுளையையும் சேர்த்து நறுக்கி விடக்கூடாது. எல்லா இதழ்களையும் நறுக்கின பிறகு தனித்தனி இதழ்களாக விரித்து வைக்கவும்.

இப்போது ஒரு இதழை நன்றாக பிரித்து வைத்து, அதன் உள்பக்கத்தின் நடுவில் ஒரு சிறிய இதழ் வருவது போல் கத்தியால் வரையவும். அடிவரைக்கும் வரையாமல் மேல் பகுதியை மட்டும் வரைந்து கொள்ளவும். மற்ற ஆறு இதழ்களிலும் இதுப்போல் வரைந்து கொள்ளவும்.

சிறிய இதழை வெளிப்பக்கம் நீட்டியிருக்குமாறு வைக்கவும். பெரிய இதழின் முனையை ஆரஞ்சு சுளையின் அடிப்பக்கம் சொருகி வைக்கவும். இதுப்போல் எல்லா இதழ்களையும் செய்து வைக்கவும். இப்போது ஆரஞ்சு சுளையின் மேல் இரண்டு, மூன்று புதினா இலைகளை சொருகி வைக்கவும். ஆரஞ்சு தோலை கொண்டு செய்த அழகிய பூ தயார்.

ஆரஞ்சு கப் : இந்த கார்விங் செய்வதற்கு மேலே செய்து வைத்திருக்கும் ஆரஞ்சு பூ கார்விங் சுளையை எடுத்து விட்டு ஆரஞ்ச் தோலில் பூ செய்ததை மட்டும் எடுத்துக் கொள்ளவும். பூவின் நடுவில் வைப்பதற்கு சாத்துக்குடி அல்லது ஆரஞ்சு பழங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

ஆரஞ்சு பழத்தின் மேல் பகுதியை கால் பாகம் அளவுக்கு வெட்டி தனியே எடுத்துக் கொள்ளவும்.

ஒரு டூத்பிக் குச்சியில் ஒரு புதினா இலை, ஒரு செர்ரி பழம் அதன் மேல் ஒரு புதினா இலையை சொருகி வைத்துக் கொள்ளவும்.

ஆரஞ்சு தோலில் பூ போல் செய்து வைத்திருக்கும் அதன் நடுவில், ஏற்கனவே நறுக்கி வைத்திருக்கும் முக்கால் பாகம் அளவுள்ள ஆரஞ்சுபழத்தின் நடுவிலுள்ள சுளையை குடைந்து எடுத்துவிட்டு வைக்கவும். அதன் உள்ளே சில செர்ரி பழங்களை போட்டு வைக்கவும்.

பிறகு கால் பாகம் அளவு வெட்டி வைத்துள்ள ஆரஞ்சு பழத்தின் மேல் பகுதியை அலங்கரிக்க அதன் ஏதாவது ஒரு முனையில் செர்ரி பழம் சொருகிய டூத்பிக் குச்சியை சொருகி வைக்கவும்.

இந்த மூடியை செர்ரி பழம் போட்டு வைத்த கப்பின் பாதியளவு மூடியிருப்பது வைத்து அலங்கரிக்கவும். சுலபமாக செய்யக்கூடிய ஆரஞ்சு கப் தயார்.

அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் இந்த ஆரஞ்சு கார்விங் செய்முறையை வழங்கியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்.

Comments
ஆரஞ்சு கார்விங்
செண்பகா,எப்படிங்க இப்படியெல்லாம்....!!!
ஹைய்யா,பார்த்தால் நானேகூட செய்யலாம்போல இருக்கே..!!
ஏன்னா பொதுவா எனக்கு இந்த மாதிரி வொர்க் எல்லாம் ஏணியென்ன ஏரோப்ளேன் வச்சாலும் எட்டாது....:(
நல்லா கவனமா இருங்க..திடீர்னு ஒரு நாள் உங்க ஷோகேஸே அபரிக்கப்படும் வாய்ப்பு இருக்கு.....:-)
அபகரிக்க போறது நாந்தான்னு சொல்லியெல்லாம் மாட்டிக்கமாட்டேனே..:-
அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
செண்பகா
செண்பகா
எளிமையான கைவேலை. நான் கூட செஞ்சுற்லாம். வாழ்த்துக்கள்.
ஒருகேள்வி. நவீனா பிறந்த நாள்
23-10-2007 சரிதானா?
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
கொள்ளை அழகு
சூஊஊஊஊப்பர் செண்பகா! உங்களைப் பார்த்தா பொறாமையா இருக்கு :)
இளவரசி வர்றதுக்கு முன்னாடியே நான் எல்லாத்தையும் சுட்டுட்டு போயிடுவேனே :)
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
செண்பகா
செண்பகா..
எப்படி உங்களுக்கு மட்டும் சிம்பிளான பொருளை கொண்டு இப்படியெல்லாம் செய்ய தோன்றுகிறது.?
என்னிடம் ஆரஞ்சை கொடுத்திருந்தால் இரண்டு விஷயத்தை மட்டும் செய்திருப்பேன்.. ஒன்று ஜூஸ் செய்து குடிப்பது... மற்றொன்று அப்படியே சாப்பிடுவது.. முன்னது சிறிது சிரமம் ஆதலால் இரண்டாவதை கண்டிப்பாக செய்வேன்.. ஹ்ம்ம்ம்
அழகு.. வாழ்த்துக்கள்..
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
ஹாய் இளவரசி
//செண்பகா,எப்படிங்க இப்படியெல்லாம்....!!!// உங்கள போல உள்ளவுங்க இப்படி எல்லாம் பாராட்டும் போது, என்ன கையை வைத்து கொண்டு சும்மா இருக்க முடியல அதான் இப்படி எல்லாம். ரொம்ப நன்றி இளவரசி.
//ஏன்னா பொதுவா எனக்கு இந்த மாதிரி வொர்க் எல்லாம் ஏணியென்ன ஏரோப்ளேன் வச்சாலும் எட்டாது....:(// சும்மா இப்படி எல்லாம் சொன்ன விட்டுடுவேனா செய்து பார்த்துவிட்டு போட்டோ அனுப்புங்க.
//நல்லா கவனமா இருங்க..திடீர்னு ஒரு நாள் உங்க ஷோகேஸே அபரிக்கப்படும் வாய்ப்பு இருக்கு.....:-)//அப்ப கண்டிப்பா வீட்டுக்கு வருவீங்க ஐ ஜாலி:-)
senbagababu
ஹாய் அமினா
ரொம்ப நன்றி அமினா. பாப்பா பிறந்த தேதி 23-10-2009. எதற்கு அமினா, பாப்பா பிறந்தநாள் அன்று எங்க வீட்டுக்கு வருவதற்காகவா? கண்டிப்பாக வரணும். ஓகே வா.
senbagababu
செண்பகா
செண்பகா!!!
கூப்பிட்டதுக்கு அப்பறம் வராம இருக்க முடியுமா?
ஆனா என் மகனும் கேக் வெட்டுவான். பரவாயில்லையா?
அவன் பிறந்த நாளும் அதுவே!!!!
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
ஹாய் கவி
உங்களை பார்த்தா எனக்கும் பொறாமையா இருக்கு கவி. பக்கம் பக்கமாக பேசுறீங்க. எனக்கு அது மாதிரி எல்லாம் வர மாட்டுதே;-( அப்ப எல்லோரும் வீட்டுக்கு வருவீங்க ரொம்ப ரொம்ப ஜாலி:-)
senbagababu
சந்தோஷம்
ரொம்ப சந்தோஷம் உங்க மகனே கேக் வெட்டட்டும். உங்க மகனுக்கு என்ன வயது?
senbagababu
செண்பகா
செண்பகா
அக்டோபர் வந்தா 3 வயசு பா.(23-10-2007)
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
ஹாய் ரம்யா
ரொம்ப நன்றி ரம்யா எப்படி இருக்கீங்க? இளவரசிக்கு சொன்னதுதான் உங்களுக்கும். உங்கள போல உள்ளவுங்க இப்படி எல்லாம் பாராட்டும் போது, என்ன கையை வைத்து கொண்டு சும்மா இருக்க முடியல அதான் இப்படி எல்லாம்.
முன்பு உங்கள மாதிரிதான் நானும் ஜூஸ் செய்து குடிக்க தெரியும், அப்படியே சாப்பிட தெரியும். அறுசுவையில் முதன் முறையாக க்ராப்ட் செக்சன் வந்தது, அப்போது என்னுடைய விநாயகர் க்ராப்ட் செய்து போட்டோ போட்டோம் உடனே எல்லோரும் ரொம்ப பாராட்டினாங்க அதன் பிறகு எனக்கும் ரொம்ப க்ராப்டில் ஆர்வம் வந்து விட்டது. ஆரஞ்சு கார்விங் செய்த பிறகு அப்படியே நான், பத்மா, ரேவதி எல்லோரும் பழத்தை சாப்பிட்டுவிட்டோமே:-)
senbagababu
செண்பகா
செண்பகா..
நான் விநாயகரின் தீவிர ரசிகை.. அறுசுவைக்கு வந்ததும் முதலில் உங்க விநாயகரைத் தான் பார்த்து ரசித்தேன்.. ரொம்ப பழைய பதிவுக்கு எங்க போய் பின்னூட்டம் கொடுப்பது என விட்டுவிட்டேன் ;-)
பேசுவதில் என்ன இருக்கு.. இந்த மாதிரி செய்வதில்தான் திறமையே
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
எப்புடி செண்பகா
எப்புடி செண்பகா..ரூம் போட்டு யோசிப்பிங்களோ??..க்ரியடிவிட்டி ஜாஸ்தியா இருந்தால் தான் இப்படி கண்டதை(??)) செய்ய சொல்லும்..வெரி சூப்பர் மேடம்...கலக்குங்க...
Madurai Always Rocks...
செண்பகா
செண்பகா... பார்த்ததும் கண்டுபிடிச்சுட்டேன் நம்ம செண்பகா வேலைன்னு. அத்தனை அழகு. அசத்திட்டீங்க. ரொம்ப ரொம்ப ரொம்ப கியூட்.... எனக்கு பாராட்ட தமிழில் கொஞ்சம் வார்த்தை சொல்லுங்கப்பா ப்ளீஸ். நான் சொல்ல நினைக்கிறத எல்லாம் எல்லாரும் முன்னாடியே சொல்லிட்டு போயிட்டாங்க. :(
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
செண்பகா மேடம்,
செண்பகா மேடம்,
ரொம்ப அருமையான ஐடியா
உங்களுடைய ஆரஞ்சு கப் பார்க்கவே அழகாக இருக்கு
கார்விங் கத்திகளை எப்படி தேர்வு செய்வது என்று சொல்லுங்க
மேலும் பல நல்ல குறிப்புகள் தர மனமார்ந்த வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
செண்பகமே! செண்பகமே!
//செண்பகா... பார்த்ததும் கண்டுபிடிச்சுட்டேன் நம்ம செண்பகா வேலைன்னு. அத்தனை அழகு. அசத்திட்டீங்க. ரொம்ப ரொம்ப ரொம்ப கியூட்.... எனக்கு பாராட்ட தமிழில் கொஞ்சம் வார்த்தை சொல்லுங்கப்பா ப்ளீஸ். நான் சொல்ல நினைக்கிறத எல்லாம் எல்லாரும் முன்னாடியே சொல்லிட்டு போயிட்டாங்க. :(// என்று சொல்லலாம் என்று பார்த்தால்... அதையும் வனிதாக்கா சொல்லி இருக்கிறாங்க. ;))
சுப்பர். பாராட்டுகள் செண்பகா. ;)
அன்புடன் இமா
- இமா க்றிஸ்
செண்பகா
ரொம்ப அழகாக இருக்கின்றன...பூ, கப் இரண்டுமே....
எனக்கு மூன்றாவது ஸ்டெப்(படம்)பிலேயே நம்பிக்கையில்லை....
ஹி ஹி ஹி அதனால் பாராட்டு மட்டும்தான்...படமெல்லாம் ...மன்னிக்கவும்...
செல்ல செண்பகா!
உ
நேக்கு கமலா ஆரெஞ்ச சாப்பிட மட்டுமே தெரியும்.நீங்க அதில பூமாறியெல்லாம் செஞ்சு அசத்தறேளே!ரொம்ப அழகா இருக்கு. ஒங்கள மாறியே!
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....அப்புறம் ஒங்க பாப்பா,ஆமினா தம்பி பாப்பா பொற்ந்தநாளு-க்கு முன்னாடியே என் பெரிய கொழந்தை-க்கு பொறந்தநாள் வந்துடும் தெரியுமோ?அவ 19-10-(வருஷத்த சொல்லமாட்டேனே).
பி.கு:
மிஸஸ்.மாமி. (அழகி போட்டிக்கு) என்ன ஜட்ஜா கூப்பிட்டுட்டு போயிருக்கறதால என்னால கெட் டூ கெதர்ல கலந்துக்க முடியல்ல.
(அப்பாடா மாமி இங்க வரல்லன்னு நீங்கள்லாம் சந்தோஷ பெருமூச்சு விடறது நேக்கு நன்னா கேக்கறது)என்ஜாய்!!!!!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
வாவ்
வாவ் முதல் பக்கத்தில உங்க ஆரஞ்சு தான் அசத்தலா இருக்கு செண்பகா மேடம், இதுவரை ஆரஞ்சு பழத்துல ஜூஸ் போடத்தான் தெரியும் கார்விங் கூட பண்ணலாமா? சூப்பர செய்து இருக்கீங்க.
ஹெல்லொ செண்பகா!!
ஹெல்லொ செண்பகா!!
உங்க கைவினை பொருட்கள் எல்லமே சூப்பர். கலக்குறீங்க!.. உண்மையில் அறுசுவையில் என்னை முதல் முதலில் இம்ப்ரெஸ் செய்ததே உங்கள் படைப்புகள் தான்.. நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்.
ரம்யா
விநாயகரை ரசித்தீங்களா ரொம்ப நன்றி. விநாயகர் அருள் பொழிந்தாரா? இல்லையா? எப்போதுமே அறுசுவை தோழிகள் தன் திறமையை ஒற்று கொள்வதில்லை அவ்வளவு தன்னடக்கம்:-) இதே மாதிரி தோழிகள் எனக்கு கிடைத்ததற்கு அந்த விநாயகருக்குதான் நன்றி சொல்லனும்.
senbagababu
ஹாய் ஆனந்தி
ரொம்ப நன்றி ஆனந்தி. நீங்க வேற ஆனந்தி ரூம்லாம் போட்டு யோசிக்கல பா. அந்தளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. சும்மா எனக்கு தெரிந்ததை செய்து காட்டுறேன்.
senbagababu
செண்பகா
சோ க்யூட்ங்க. எல்லாரும் எல்லா மாதிரியும் பாராட்டிடாங்க. வார்த்தைகள் தேடி கொண்டிருக்கேன் உங்கள பாராட்ட ஆனா கிடைக்கல. ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்குங்க. நல்ல க்ரியேட்டிவிட்டி keep going all the best.
ஹாய் வனிதா
பார்த்ததும் கண்டுபிடிச்சுட்டீங்களா இந்தளவுக்கு மோசமா நான் தான் செய்வேன் என்று. //நான் சொல்ல நினைக்கிறத எல்லாம் எல்லாரும் முன்னாடியே சொல்லிட்டு போயிட்டாங்க. :(//அதுக்குதான் முதலில் வரணும்:-)
//துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!// எங்க இருந்துங்க இதலாம் கண்டுபிடிக்கிறீங்க எனக்கும் கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்.
senbagababu
இமா அம்மா
////செண்பகா... பார்த்ததும் கண்டுபிடிச்சுட்டேன் நம்ம செண்பகா வேலைன்னு. அத்தனை அழகு. அசத்திட்டீங்க. ரொம்ப ரொம்ப ரொம்ப கியூட்.... எனக்கு பாராட்ட தமிழில் கொஞ்சம் வார்த்தை சொல்லுங்கப்பா ப்ளீஸ். நான் சொல்ல நினைக்கிறத எல்லாம் எல்லாரும் முன்னாடியே சொல்லிட்டு போயிட்டாங்க. :(// என்று சொல்லலாம் என்று பார்த்தால்... அதையும் வனிதாக்கா சொல்லி இருக்கிறாங்க. ;))// என்ன அம்மா உங்க நிலைமை இப்படி ஆயிடுச்சு :-( ரொம்ப நன்றி அம்மா. என்ன வச்சு பாட்டே படிக்க ஆரம்பிச்சிட்டீங்களா.
senbagababu
ஹாய் தேன்மொழி
உங்க பாராட்டிற்கு ரொம்ப நன்றி.// ஹி ஹி ஹி அதனால் பாராட்டு மட்டும்தான்...படமெல்லாம் ...மன்னிக்கவும்...// எதுக்கு மன்னிப்பு எல்லாம். பாராட்டுவதற்கே ஒரு மனசு வேண்டும் அது உங்களிடம் நிறையவே இருக்கு பிறகு என்ன வேண்டும்:-) அறுசுவையில் ஒரு நாளைக்கே நிறையே பேர் பார்க்கிறாங்க. அதனால் பயனும் பெறுகிறார்கள் குறிப்பா சமையல், நிறைய நல்ல விசயங்கள், கதை, கவிதை, ஆலோசனை, அழகு டிப்ஸ், விமர்சனம் இதுபோல் நிறைய இருக்கிறது... இதை எல்லாம் அவர்கள் பார்ப்போதோடு சரி வாழ்த்த முன்வருவதில்லை ஏன் என்று தெரியவில்லை. பார்ப்பவர்கள் எல்லோரும் வந்து வாழ்த்தினா எவ்வளவு நல்லா இருக்கும். அறுசுவையில் பங்களிப்பவற்கும் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். என்ன செய்வது:-(
senbagababu
ஹாய் மோகனா மாமி
மாமி உங்களுக்கு வயசு என்னா எனக்கு தெரிந்தாகனும். உங்க மகள் வயசையும் சொல்ல மாட்றீங்க. இப்போ நீங்க காரைக்காலில் தான் இருக்கீங்களா? ரொம்ப பக்கத்தில் தான் நாங்க இருக்கோம் (நாகை). //ரொம்ப அழகா இருக்கு. ஒங்கள மாறியே!// நீங்க எங்களையெல்லாம் பாத்துட்டீங்க நான் உங்களை பார்க்க ஆசையா உள்ளது முடிந்தால் போட்டோ அனுப்புங்க ப்ளீஸ். இந்த மெயிலுக்கு arusuvaiadmin@gmail.com. எந்த ஊரில் அழகி போட்டி நடக்குது நானும் வருவேன்ல:)
senbagababu
ஹாய் யாழினிமுகில்
அறுசுவைக்கு புதிய வரவாக இருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன். எப்படி இருக்கீங்க? தஞ்சையில் தான் இருக்கீங்களா அப்ப கொஞ்சம் பக்கம் தான்(2.30 hours).ஆரஞ்சு பழத்தில் கார்விங்கும் பண்ணலாம் யாழினி பண்ணி பாருங்க. உங்க பாராட்டிற்கு ரொம்ப நன்றி.
senbagababu
செல்ல செண்பகா!
உ
அப்படியெல்லாம் நெனைக்காதீங்கோ!நான் மொதல்ல ”ஃபிரைடு ரைஸ்” செய்வது எப்படி-னு பாக்கதான் உள்ள வந்தேன்.இப்போ நீங்க செய்யறத பாக்க பாக்க நேக்கு பொறாமையா இருக்கு. என்ன போல இருக்கறவா பொறாமைல ஒங்கள பாராட்டாம இருக்கலாம் இல்லையா?
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
ஹாய் சாந்தினி
// உண்மையில் அறுசுவையில் என்னை முதல் முதலில் இம்ப்ரெஸ் செய்ததே உங்கள் படைப்புகள் தான்.. //எனக்கு ஒரு ரசிகை கிடைத்துவிட்டாங்க ஐ ஜாலி:) கண்டிப்பா செய்து பாருங்க நன்றி.
senbagababu
செண்பகா
செண்பகா... அண்ணா ஊரில் இல்லாம ரொம்ப எஞ்சாய் பண்ற மாதிரி தெரியுது!!! இருங்க போட்டு குடுக்கறேன். ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
என்ன மாமி
நான் உங்களுக்கு கேட்ட கேள்விக்கு பதில் அனுப்பாம என் இது சின்ன புள்ளதனமா:)//இப்போ நீங்க செய்யறத பாக்க பாக்க நேக்கு பொறாமையா இருக்கு. என்ன போல இருக்கறவா பொறாமைல ஒங்கள பாராட்டாம இருக்கலாம் இல்லையா?// இதுக்கு என்னோட பதில் :-)
senbagababu
செல்ல செண்பகா!
உ
நீங்க ”சொந்த ஊரத்தான” கேட்டுருக்கேள்!.
வசிக்கற ஊர கேட்கலையே!
நேக்கு புக்காம் மதுர பக்கம்.
போறுமா?
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
வனிதா ஏன் ஏன்
//செண்பகா... அண்ணா ஊரில் இல்லாம ரொம்ப எஞ்சாய் பண்ற மாதிரி தெரியுது!!! இருங்க போட்டு குடுக்கறேன். ;)// பாபு இல்லாமல் ஒரே போர் அதான் இப்படி. நானும் அப்போதில் இருந்து சிஸ்டமை விட்டு ஏந்திரிக்கலாம் என்று பார்க்கிறேன் என்னை விட மாட்றாங்களே என்ன செய்ய:( எல்லோரையும் கெட் டூ கெதரில் சந்திக்க போறிங்களா ஜாலி. எங்களாலதான் வரமுடியல உங்க எல்லோறையும் ரொம்ப மிஸ் பண்றோம்.
senbagababu
செல்ல செண்பகா!
உ
ஆத்துக்கார் ஊருல இல்லையா?நான் நீங்களும் போயிருப்பேள்னா நெனச்சேன்.
நேக்கு என்னவோ தப்பா படறது!
அங்க யாரு அவர பாத்துப்பான்னுதான்?
பி.கு:
(அப்பா, நாரதர் வேல இங்கயாவது ஒர்க் அவுட் ஆறதான்னு பாக்கலாம்.)
ம். இதுக்காவது ”ரம்யா மேடம்” பதில் சொல்றாலானு பாக்கலாம்.
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
ரொம்ப அழகா இருக்கு!
ஹலோ செண்பகா,
நீங்கள் நலமா? கு(சு)ட்டிப்பெண் நவீனா நலமா?
இந்த ஆரங்சு பழம் கார்விங் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. எனக்கும் செய்து பார்க்க ஆசையா இருக்கு - இன்னைக்கே ஈவினிங் கடைக்கு போய் ஆரங்சு வாங்கி வந்துவிட வேண்டியதுதான்!
எத்தனை அருமையா எல்லாவற்றிலும் அசத்தறீங்க. (இப்பதான் சமையல் போட்டி த்ரெட்டில் பதிவு போட்டுட்டு வரேன்!) தொடர்ந்து உங்க கலையார்வம் வளர, வெற்றிப்பெற என் அன்பான வாழ்த்துக்கள்!!
அன்புடன்
சுஸ்ரீ
ரொம்ப அழகா இருக்கு!!!!!!!!!!!!!!!!
ஹலோ செண்பகா
ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா இருக்கு உங்களை போல. நல்லா அசத்தறீங்கபா.
வாழ்த்துக்கள்!.
அன்புடன்,
வள்ளி.
உண்மையாய் இரு.
செல்ல செண்பகா!
உ
யாராவது என் செல்லத்த என் கூட சேத்து வைங்கோளேன் ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ளிளிளிளிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்............
(ஒங்களுக்கு இன்னுமா கோபம் போகல)
நேக்கு ரொம்ப அழுகயா வரதே! அதை ஒங்கள்க்கு போட்டொவா எடுத்து அனுப்பிடுவேனாக்கும்...............
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
பாப்பி,
உங்கள் கற்பனைகள் அபாரம். கை வண்ணமோ அதற்கும் மேலே.
இன்னும் செய்யுங்கள். எல்லாவற்றுக்கும் பின்னுட்டம் போடா விட்டாலும் எல்லாம் வாசித்திருக்கிறேன். எல்லாமே கொள்ளை அழகு.
செண்பகா
சாரி செண்பகா மேடம் லேட்டா பின்னூட்டம் கொடுக்கறேன். எப்பவும் போல அசத்தலான கிராப்ட். தொடர்ந்து இதுபோல செய்து காட்டுங்கள். கண்டிப்பா ஒருநாள் இந்த கார்விங்கை முயற்சி செய்து பார்ப்பேன்.
அன்புடன்
யுத்தவர்ஷினி
hai shenbaga
ஹாய் செண்பகா உங்க கார்விங் ரொம்ப சூப்பரா இருக்கு என்க்கு உங்க உதவி வேண்டும் என் குழ்ந்தைக்கு ukg ஜீலை 30 fancy dress competition வருகிறது அதுக்கு animals or flowers ப்ற்றி ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்க்கு பூக்கள் ப்ற்றி செய்ய ஆசை எப்ப்டி செய்வது என்று என்க்கு சொல்லுங்கள் என்க்கு கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் உங்களுக்கு கைவேலைபாடு கிள்ளாடி நீங்கள் என்க்கு இத்ல்லாம் ரொம்ப் தூரம் நீங்கதான் என்க்கு உதவி பண்ண்னும் ப்ளீஸ்
bahrain friends yaravadu irukingala pls reply
hai friends nan arusuvaikku pudusu nanum unga friendship kidaikkumnu niraia nal try pannan ana yarume reply pannala nan bahrain yaravadu bahrain friends irukkangala pls
jelly epadi seiyanum help ...
Hai ..
enaku jelly epadi seiyanumunu sollunga .... enkita .. jelly powder iruku , athu kooda premix - nu oru packet iruku atha epadi use pannanum pls sollunga akka .....................
ஹாய் கெளரிலெஷ்மி
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி கெளரி.
senbagababu
ஹாய் மோகனா மாமி
//நேக்கு என்னவோ தப்பா படறது!
அங்க யாரு அவர பாத்துப்பான்னுதான்?// எந்த நாரதர் வேலையும் எங்கள்ட ஒர்கவுட் ஆகாது பாவும் மாமி ஏமாத்துட்டேளா:-)
senbagababu
செண்பகா மேடம்
செண்பகா மேடம். நலமா?நீங்க எப்படி இப்படியொல்லாம் யோசிக்கீறிங்க.உங்களுடைய ஆரஞ்சு கார்விங் சூப்பாரா இருக்கு.கார்விங் சமையல் கைவினை எல்லாத்துலோயுமே அசத்துறீங்க.
ஹாய் சுஸ்ரீ
நான் ரொம்ப நல்லா இருக்கேன். பாப்பாவும் ரொம்ப நல்லா இருக்கா. நீங்க எப்படி இருக்கீங்க. வீட்டில் அனைவரும் நலம்தானே? ஆரஞ்சு கார்விங் செய்து பார்த்திட்டீங்களா? எப்படி வந்தது? உங்க அன்பான வாழ்த்துக்கு ரொம்ப நன்றி.
senbagababu
ஹாய் வள்ளி
//ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா இருக்கு உங்களை போல// எதுக்கு இவ்வளவு ஐஸ் (என்னதான் ஐஸ் வச்சாலும் ஆரஞ்சு கார்விங் தரமாட்டோமுல:))ரொம்ப நன்றி வள்ளி.
senbagababu
என்ன மாமி
உங்க செல்லம் எப்பவும் உங்க கூடத்தான் இருப்பேன். ஆனா சீக்கிரம் போட்டோ அனுப்புற வேலைய பாருங்க நான் பார்த்தே ஆகனும்
senbagababu
செல்ல செண்பகா!
உ
அப்பாடா! எங்கூட பழம் விட்டுடேளா!ஜாலி...........ஜாலி..........
இந்தாங்கோ பிடியுங்கோ ஒர் கூடை ஆப்பில்.
அடுத்த கர்விங்குக்கு!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...