தேதி: July 19, 2010
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
சௌசௌ - ஒன்று
பாசிபருப்பு - கால் கப்
மஞ்சள்பொடி- கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் - ஒன்று
வரமிளகாய் - 2
பச்சரிசி - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
சௌசௌவை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பாசிபருப்பை குழைய வேக வைத்துக் கொள்ளவும்

அரைக்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அரைக்க எடுத்து வைத்த பொருட்களை முதலில் ப்ளெண்டரில் போட்டு ஒரு திருப்பு திருப்பி விட்டு பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்

ஒரு பாத்திரத்தில் கால் டம்ளர் தண்ணீர் வைத்து அது கொதித்தவுடன் அதில் நறுக்கிய சௌசௌ துண்டுகள், உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து வேக வைக்கவும்

காய் வெந்தவுடன் அதில் அரைத்த கலவை மற்றும் வேக வைத்த பாசிபருப்பு(தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்) சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.

அதில் தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்துக் கொட்டவும். சுவையான செளசெள பாசிபருப்பு கூட்டு தயார்.

1. இதேப் போல் புடலங்காய், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் உபயோகித்தும் செய்யலாம்.
2. பாசிபருப்பு இல்லாமல் சிறதளவு தேங்காய் கூட்டியும் செய்யலாம்.
Comments
சௌ சௌ கூட்டு
ரொம்ப எளிமையா தந்து இருக்கீங்க
பாராட்டுக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
கவிதா
கவிதா தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
லக்ஷ்மிஷங்கர்
அட்மின் மிக்க நன்றி
குறிப்பை விரைவாக வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி
லக்ஷ்மிஷங்கர்
லக்ஷ்மி..
லக்ஷ்மி..ரொம்பவே நல்லா விளக்கி இருக்கீங்க..இதில் அரை துண்டு தக்காளி சேர்க்கலாமா??
Madurai Always Rocks...
very yummy
i tried it in the home very tasty and yummy.
vanisri
ஹாய் ஆனந்தி
ஹாய் ஆனந்தி ,
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி . நான் இதுவரை தக்காளி சேர்த்தது இல்லை நீங்க சேர்த்து செய்து பாருங்க
லக்ஷ்மிஷங்கர்
ஹாய் வாணிஸ்ரீ
ஹாய் வாணிஸ்ரீ ,
செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி ரொம்ப சந்தோஷமாக இருக்கு
லக்ஷ்மிஷங்கர்
wanRi
wanRi
காலம் கண் போன்றது,
கடமை பொன் போன்றது.
நன்றி
நன்றி
காலம் கண் போன்றது,
கடமை பொன் போன்றது.
லஷ்மிசங்கர் மேம்
ஹாய் மேம்
நீங்க சொன்ன குறிப்பு படி தான் நானும் செய்வேன். நன்றாக இருக்கும். ஆனால் என் அம்மா சௌசௌ வேகவைக்கும் போது பாசிப்பருப்புடன் கடலைப்பருப்பு சிறிது மற்றும் சாம்பார் பொடி (காரத்திற்கு தகுந்தாற்போல்) சேர்த்துக்கொள்வார்கள். பின்பு தேங்காய் சீரகம் வைத்து அரைத்து உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கிவிடுவார்கள். இதுவும் சற்று வித்தியாசமாக நன்றாக இருக்கும். முடிந்தால் try பண்ணி பாருங்க
இப்படிக்கு
ராதா ஹரி
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
அனாமிகா
அனாமிகா, நல்ல ரெசிப்பி. நானும் ட்ரை பண்ணி விட்டு சொல்றேன்.
வாணி
ஹாய் perinbarani
ஹாய் perinbarani
உங்கள் நன்றிக்கு நன்றி :)
லக்ஷ்மிஷங்கர்
ராதா ஹரி மேடம்
ராதா ஹரி மேடம் ,
என்னை பேர் மட்டும் சொல்லியே கூப்பிடலாமே ...
ஒரு முறை நீங்க சொன்னம்மாதிரியும் செய்து பார்க்கிறேன் .தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
லக்ஷ்மிஷங்கர்
ஹாய் வாணி
ஹாய் வாணி
எப்படி இருக்கீங்க ? குட்டீஸ் எப்படி இருக்காங்க ?
ட்ரை பண்ணிட்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கவும்
மிக்க நன்றி
லக்ஷ்மிஷங்கர்
லஷ்மிஷங்கர்
நீங்களும் என்னை பேர் சொல்லியே அழைக்கலாம் லஷ்மி. செய்து பாத்துட்டு சொல்லுங்க. ரொம்ப அழகா போட்டோ எடுத்து போஸ்ட் பண்ணிருக்கீங்க. நிறைய பேருக்கு ரொம்ப உபயோகமா இருக்கும். நன்றி
இப்படிக்கு
ராதா ஹரி
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
9902
சௌ,சௌ கூட்டு செமை டேஸ்ட். சாம்பார் சாதமுடனும்,
சப்பாத்தியுடனும் நல்லாவே கூட்டு சேர்ந்தது. பாராட்டுக்கள்.
கோமு
செய்து பார்த்து தங்களுடைய கருத்தை தெரிவித்தற்கு மிக்க நன்றி
இன்னிக்கு தான் உங்க கருத்தை பார்த்தேன் ..
லக்ஷ்மிஷங்கர்
இருமுறை
இருமுறை பதிவாகிவிட்டது
சௌசௌ கூட்டு
thanks ரொம்ப எளிமையா தந்து இருக்கீங்க
பாராட்டுக்கள்