பழைய சாத ரெசிப்பிஸ்

தோழிகளே எங்கள் வீட்டின் மிகப்பெரிய தலையாய பிரச்சனை சாதம் மீந்து போவது நான் எவ்வளவு தான் சிக்கனமாக சாதம் வடித்தாலும் மீந்து விடுகிறது. நாங்கள் தாய்லாந்து அரிசி உபயோகிக்கிறோம். அதில் எலுமிச்சை சாதம் செய்தால் குழைந்து போய் விடுகிறது. நான் அதில் குடை மிளகாய் சாதம் மட்டும் செய்வேன் அது சுமாராக இருக்கும். தினமும் அந்த கொடுமையையே சாப்பிட முடியுமா? பிளீஸ் தோழிகளே உங்களுக்கு தெரிந்த பழைய சாத ரெசிப்பிஸ் இருந்தால் சொல்லுங்களேன்.(தயவு செய்து பழைய சாதத்தில் தண்ணீர் ஊற்றி ஊறுகாய், வெங்காயம், பச்சை மிளகாய் தொட்டு சாப்பிடலாம் என்றெல்லாம் சொல்லிவிடாதீர்கள்)

இரவில் சாதம் மிந்து விட்டால் புளியோதரை செய்து விடுங்கள். மிகவும் சுலபம். மிளகாய்,மல்லி,பூண்டு சேர்த்து எண்ணெயில் வருத்து மிக்ஸியில் பொடித்து பின் புளி தண்ணிர் ஊற்றி அதில் அரைத்த கலவையை போட்டு கொதிக்க்வைத்து பேஸ்ட் போல் வரும் வரை கொதிக்க வைக்கவும்.இதை ஒரு பாட்டிலில் போட்டு வைத்து கொன்டால் தேவைபடும் போது கடுகு, கடலைபருப்பு போட்டு தாளித்து மீந்து விடும் சாதத்தில் சேர்த்து கிளறி விடுங்கள். பழைய சாதத்தை அரைத்து வடகம் போடலாமே.

மீந்து போன சாதத்தில் வடகம் செய்வாங்கன்னு கேள்வி பட்டிருக்கிறேன். ஜீரகம் காஞ்ச மிளகாய் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து கிள்ளு வடகம் போல் செய்து பொறித்து சாப்பிடலாம் எதோ எனக்கு தெரிந்தது

hai கல்பனா. how are u?
கடுகு, சீரகம், இஞ்சி, மிளகாய் வற்றல், போட்டு தாளித்து தயிர் ஊற்றி அதிலேயே சாதத்தை போட்டு வதக்கி இறக்கவும். நீங்கள் தாய்லாந்து அரிசி உபயோகிப்பதாக சொன்னீர்கள். அதில் இப்படி செய்தால் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. முயன்று பாருங்கள்

கல்பனா.
மிஞ்சின சாததில் சூப்ப்ரா பொங்கல் ப்ண்ணலாம்.
எவ்வளவு சாதம் மிச்சமிருக்கோ அதில் பாதி அள்வு
பயத்தம் பருப்பு குழைய வேக விடவும்.. நன்கு வெந்த
பருப்புடன் மீந்த சாததையும்போட்டுகல்ந்து குழையவிடவும்.
பொதுவாக பொங்கல் குழைவாகத்தானே இருக்கும். கொஞ்சம்
உப்பு போட்டு கலந்துவிடவும். இறக்கி வைத்ததும். சின்ன
கடாயில் ஒரு கரண்டி நெய் விட்டு, கொஞ்சம் மிளகு,ஜீரகம்
இஞ்சி,கருவேப்பிலை கொஞ்சம் முந்திரி பருப்ப்பு தாளித்துக்
கொட்டவும் நல்ல டேஸ்டாகவும் இருக்கும்..

கல்பணா..

என் அத்தை மீதமுள்ள சாத்தை நன்கு பிசைந்து அதில் கோதுமை மாவினை சேர்த்து சப்பாத்திமாவு போல பிசைந்து, உருட்டி தேய்த்து அப்படியே சப்பாத்தி செய்வது போல செய்வார்.. அதற்கு தக்காளி தொக்கு செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். பக்குவம் எனக்கு தெரியாது. நீங்கள் செய்யும் போது பதம் பார்த்து செய்யுங்கள்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அன்பு தோழி நாகவளர், நீங்கள் சொன்ன குறிப்பு நன்றாக இருந்தது நன்றி பா. அதில் என்ன பிரச்சனை என்றால் நான் சொன்ன தாய்லாந்து அரிசியில் நீங்கள் சொன்னது போல் புளி தண்ணீரோ அல்லது எலுமிச்சை சாறோ ஊற்றி பிறகு தாளித்தால் சாதம் குழைந்து போய்விடுகிறது அதனால் அது போன்று பண்ண முடிவதில்லை.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹாய் கல்பனா நானும் தாய் அரிசிதான் பயன்படுத்துகிறேன். ஆனால் நீங்கள் சொல்வதுபோல் குழையாதே! நீங்க ப்ரஷர் குக்கரில் சமைக்கிறீர்களா? அப்படீன்னா குழையும் சரியாக வராது. எந்த வகை சாதம் செய்தாலும் சுவையும் இருக்காது. எலக்ட்ரிக் குக்கரில்தான் நன்றாக வரும். இகப் அரிசிக்கு ஒன்றரை முதல் ஒன்றேமுக்கால் கப் வரை தண்ணீர் சேர்த்தால் குழையாமல் வரும். எலுமிச்சை சாதம் புளிச்சாதம் எல்லாமே அதில்தான் செய்கிறேன். நன்றாக உதிரியாக வரும்.

நாசி கோரேங்(ஃப்ரைட் ரைஸ்) செய்தா நல்லா இருக்கும் http://www.arusuvai.com/tamil/node/13997

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

தோழி ஜஸ்வின், நீங்கள் கூறியிருந்த வடாம் குறிப்பு நன்றாக இருந்தது நன்றி பா. இங்கே நாங்கள் இருக்கும் வீட்டில் வெயில் வசதி இல்லை. அது தவிர என்னுடைய இரண்டு வாண்டுகளும் சும்மா இருக்க மாட்டாங்க. ஏற்கனவே கிள்ளி வைத்திருக்கும் வடாமை திரும்ப கிள்ளி வைத்து உரு தெரியாமல் பண்ணிடுவாங்க.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ப்ரைட் ரைஸ் செய்யலாமே!!!
அடுத்து நாசிகோரிங்,
கேரட் சாதம்,
வெஜிடபிள் அனைத்தையும் நெய்யில் வதக்கி அதில் சாதத்தை கொட்டி கிளறி எடுக்கலாம்.....

பிரீசரில் வைத்து அடுத்த நாள் இட்லி சட்டியில் கொஞ்சம் சுட வைத்தால் புது சாதம் போல் இருக்கும். அப்படி செய்த அனுபவம் உண்டா?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

தோழி கவிசிவா உங்களுடய பதிலுக்கு நன்றி. நான் ராயல் அம்ரெல்லா மற்றும் ஜாஸ்மின் பிராண்டு அரிசி உபயோகிக்கிறேன். தவிர, பிரஷர் குக்கரில் சமைத்தால் வாயு தொந்தரவு ஏற்படுவதால், நான் பிரஷர் குக்கர் பயன் படுத்துவது இல்லை.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்