இன்றைய ஸ்பெஷல் டாபிக்

இன்றைய ஸ்பெஷல் என்றதும் எல்லோரும் சமையலுன்னு நினைத்தீர்களா? அப்படின்னா ஏமாந்துட்டீங்கப்பா,
நானும் ஒரு இழை தொடங்கலாம்ன்னு தோணிச்சு, அதனாலதான்.
தினமும் நமக்கு நாமே செய்த ஏதாவது ஒரு செயல் மிகவும் பெருமையா இருக்கும் இல்லையா? அந்த மாதிரி தினமும் செய்வதில் பிடித்ததை நாம் நம் அறுசுவை தோழிகளுடன் பகிர்ந்து கொள்ளதான் இந்த இழை. தயவு செய்து இங்கும் உங்களது பதிவுகளை வந்து போடுங்கோகோகோகோ

நம்ம ஆமினாவோ இல்ல ரம்யாவோ பதிவு போடறதுக்கு முன்னாடி எனக்கு நானே பதிவை போடுகிறேன். என்ன கொடுமை சார் இது?

இன்று நானே அரைத்த ரசப் பொடியில் நானே ரசம் வைத்தேன். நிஜமாவே நல்லா இருந்தது. இந்த மாதிரி நீங்க சொல்ல நினைப்பதை இங்க பதிவா போடுங்கப்பா

காமெடியா இருந்தாலும் பரவாயில்லை, சும்மா நம் தொழிகளுக்காக சொல்லுங்க

அன்புடன்
பவித்ரா


என்னொட இன்னக்கி ஸ்பெஷல் யாருக்காவது சிண்டு முடியறதுதான்...............
நேக்கு அதான் தெரியும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......

ஒருத்தரும் சிக்க மாட்டேங்கறாளே? என்ன பண்ணுவேன்?

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மோகனா மாமி, அது உங்களோட தினமும் ஸ்பெஷல்,
இன்னைக்கு வேற ஏதாவது ட்ரை பண்ணுங்களேன். ஹி ஹி ஹி ஹி

அன்புடன்
பவித்ரா


செத்த முன்னடி வாசல்ல ரெண்டு கொழந்தேள் சண்டை போட்டுண்டுருந்தா?
என்னனு எட்டி பாத்தா கொறத்தி கொழந்தேளாம். பசி தாங்காம அடிச்சுண்டுதுகள்.அப்பதான் அறுசுவைல “விரதத்த” படிச்சுண்டிருந்தேன்.நேக்கு
மனசுக்கு ரொம்ப கஷ்டமா போயிடுத்து. ஒடனே ரெண்டு குத்து சாதத்த எடுத்து ரசம் ஊத்தி பெசஞ்சு அதுகள் கிட்ட கொடுத்தேன்.பரக்க பரக்க சாப்பிட்டதுகள்.அத பாத்த பின்னாடி நேக்கு மனசு நெறஞ்சு போச்சு.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஒழுங்கா அருசுவைல எல்லாருடைய பதிவுக்கும் பின்னூட்டம்
கொடுத்திட்டேன்பா. நான் கம்ப்யூட்டர்ல் உக்காந்தோடனே கரண்டும்
கட் ஆயி பேஜார் பண்ணிடும். இன்று நெட்-ல உக்காந்து ஒரு மனி
நேரமா கரெண்டே போலை.
இதுதான் என்னோட இன்றைய ஸபெஷல்.

ரொம்ப நல்லவங்களா இருக்கேல்...எங்க மனசும் நெறஞ்சிட்டு..நீங்க பண்ணின அந்த நல்ல காரியம் அறுசுவையே பண்ணின மாதிரி தானே..

நன்றி...

ஜேசுதாசன்.
-----------------------------------------------------------------
வாழ்க்கையில் சில நேரங்களில் நமக்கு கிடைக்கும் நண்பர்கள் கூட நம் வாழ்க்கையை நல்ல வழியில் திசை திருப்பமுடியும்....

ரொம்ப நல்லது மாமி, பிறருக்கு உதவும் போது இருக்கும் மன நிறைவே தனி.

அன்புடன்
பவித்ரா

நல்ல தலைப்பு தான்.

முதல் பதிவு போடுறதுக்குள்ள நீங்க போட்டது தான் ஆமிக்கு கவல:(

எனக்கு சப்பாத்தியே பிடிக்காது. செய்யவும் தெரியாது. அருசுவைல சாப்ட் சப்பாத்தி செய்முறையை பார்த்த பிறகு இப்ப ரொம்ப அர்ப்புதமா செய்ய ஆரம்பிச்சுட்டேன். உண்மையிலேயே ரொம்ப சாப்ட்டா இருக்கு. அது முதல் என் வீட்டில் இரவு உணவு சப்பாத்தியாகி விட்டது.

இது தினசரி ஸ்பெஷல்,அதெல்லாம் ஒத்துக்க முடியாதுன்னு நீங்க சொல்வதை நான் அறிவேன் பராபரமே!!!

இன்று மதியம் முதல் சாதத்துடன் சப்பாத்தியும் இடம் பிடித்தது. இனி இந்த ஸ்பெஷல் தொடரும்.......

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எங்க அம்மாக்கூட நான் தினமும் ஃபோனில் பேசும் போது அம்மா கரண்ட் இருக்கான்னு கெப்பா, நான் இருக்குன்னு சொல்லி வாய மூடறதுக்குள்ள கரண்ட் கட் ஆயிடுத்து, அதில் இருந்து அம்மா கரண்ட் பத்தி கேட்பதே இல்லை. கரண்ட் இருக்குன்னு சொன்னா போயிடும் அக்கா. ஜாக்கிரதை.

அன்புடன்
பவித்ரா

அப்படியா ஆமி, இனி நான் முதலில் பதிவை போடாமல் ஆமிக்காக காத்திருக்கிறேன்.

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்