இன்றைய ஸ்பெஷல் டாபிக்

இன்றைய ஸ்பெஷல் என்றதும் எல்லோரும் சமையலுன்னு நினைத்தீர்களா? அப்படின்னா ஏமாந்துட்டீங்கப்பா,
நானும் ஒரு இழை தொடங்கலாம்ன்னு தோணிச்சு, அதனாலதான்.
தினமும் நமக்கு நாமே செய்த ஏதாவது ஒரு செயல் மிகவும் பெருமையா இருக்கும் இல்லையா? அந்த மாதிரி தினமும் செய்வதில் பிடித்ததை நாம் நம் அறுசுவை தோழிகளுடன் பகிர்ந்து கொள்ளதான் இந்த இழை. தயவு செய்து இங்கும் உங்களது பதிவுகளை வந்து போடுங்கோகோகோகோ

இது தான் நல்ல பிள்ளைக்கு அடையாளம் :)

பவித்ரா நல்ல தலைப்பு!!!
அடுத்த பதிவில் அடுத்த ஸ்பெஷலோட வரேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நன்றி ஆமி

அன்புடன்
பவித்ரா

ரண்டு நாளா தொடர்ந்து பலத்த மழை....
1 வாரமா தொடர்ந்து ஆமி துணி துவைக்கல.

என்ன ஆனாலும் பரவாயில்ல
அப்படின்னு காலைல தூரல்ல நனச்சுட்டே துணி ஊற போட்டேன். இப்ப வரைக்கும் மழையே பெய்யல.
ஒரு துணி விடாம எல்லா துணியும் துவைத்து,காயபோட்டு,மடிச்சு வச்சுட்டேன். இப்ப தான் லேசா தூரல் விழுது.
மழையே எனக்காக வராம கொஞ்சம் நேரம் வேலைநிறுத்தம் பண்ண மாறி ஒரு அல்ப பீலிங்......

:(ஐய்யோ பாவம்!!! ஒரு வார துணியையும் ஒரு ஆளா தொவச்சுட்டீங்களான்னு பரிதாபப்பட வேண்டாம்....
நான் துவைத்தது வாஷிங் மெஷினில்:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமி, அந்த மழையை கொஞ்சம் இந்த பக்கம் அனுப்புங்கப்பா, இங்கெல்லாம் மழை வர மாதிரி இருக்கு ஆனா வர மாட்டிங்குது. "வரும் ஆனா வராது" கதையாதான் இருக்கு போங்க

அன்புடன்
பவித்ரா

போங்க!!!
அனுப்ப மாட்டேன்.

எங்களுக்கெ இப்ப தான் வருது, கொஞ்சம் அனுபவிச்சுட்டு பிறகு அனுப்புறேன்:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நான் இன்று ஒரு பத்து நாட்களாக கிடந்த டிசைன் சேலையா துவைத்தேன் வாஷிங்மெஷினில உடனே துவைதுடலம் கைல துவகுறது ரொம்ப கஷ்டமா இருக்குபா

இப்படியெல்லாம் சொல்ல பிடாது, நான் தினமும் கையில்தான் துவைத்து வருகிறேன் தெரியுமா? ரொம்பவே கஷ்டம்

அன்புடன்
பவித்ரா

எங்கோ இருக்கும் என்னையும் ,எட்டிப் பார்க்க வைத்தீர்கள்;உங்கள் மனதை ..வாழ்க சகோதரி.

முன்னாடியே சொல்லிடுறேன் இதுலாம் ஒரு வேலையான்னு கேட்டுடாதீங்க. ரொம்ப நாளா சுத்தம் செய்யனும் சுத்தம் செய்யனும்னு நினைச்சுட்டு இருந்த என்னோட wardrobe இன்னக்கி தான் க்ளீன் செய்து இருக்கேன். என் பாப்பாவும் அதுக்கு ஹெல்ப் பண்ணா அது என்னான்னா நிறைய நேரம் தூங்கினா அதுதான். இன்னக்கிலேயிருந்து wardrobe எப்பவுமே சுத்தமா வச்சிக்கனும்னு முடிவு பண்ணிருக்கேன்.

இன்றைய ஸ்பெஷல், தினமும் அருசுவைல பதிவு போடணும், நினைச்சு இன்னிக்குதான் டைம் கிடைச்சு, (அதுக்கு என் பையனும் பெண்ணும் ஹெல்ப் பண்ணராங்க(தூங்கராங்க)பவித்ராக்கு ஸ்பெஷல் பதில் போட்டுட்டேன்,இதுதான் இன்னிக்கு காலைல முதல் வேலை, இன்னும் ப்ரேக்ஃபாஸ்ட் கூட சாப்பிடலை.

மோஹனா மாமி, நல்ல காரியம் செய்தேள் போங்கோ!கொழந்தேள், மொகத்துல சந்தோஷத்தப்பாக்கரதே சந்தோஷந்தான், அதுவும் யாருக்காவது ஏதாவது, அதுவும் சாப்பாடு போட்டு, அந்த மனசு நிறைவு, கேக்கவே வேண்டாம், அன்னிக்கி முழுவதும் ஏதொ பெரீசா சாதிச்ச மாதிரி ஒரு த்ருப்தி , நிம்மதி கிடைக்கும்.

ஆமினா, எல்ல பதிவிலயும் வந்து கலக்கரீங்க. ரொம்ப சுறுசுறுப்புதான் நீங்க.
பவித்ரா, இன்று என்ன இந்த பதிவு போட வெச்சதுக்கு உங்களுக்குதான் நன்றி சொல்லணும்.

மேலும் சில பதிவுகள்