இன்றைய ஸ்பெஷல் என்றதும் எல்லோரும் சமையலுன்னு நினைத்தீர்களா? அப்படின்னா ஏமாந்துட்டீங்கப்பா,
நானும் ஒரு இழை தொடங்கலாம்ன்னு தோணிச்சு, அதனாலதான்.
தினமும் நமக்கு நாமே செய்த ஏதாவது ஒரு செயல் மிகவும் பெருமையா இருக்கும் இல்லையா? அந்த மாதிரி தினமும் செய்வதில் பிடித்ததை நாம் நம் அறுசுவை தோழிகளுடன் பகிர்ந்து கொள்ளதான் இந்த இழை. தயவு செய்து இங்கும் உங்களது பதிவுகளை வந்து போடுங்கோகோகோகோ
.இன்றைய ஸ்பெஷல்
இன்று காலையிலிருந்தே மூட் சரியில்லை எனக்கு. வீட்டில் யார் எது பேசினாலும் கோபம் கோபமாக வந்தது.எல்லாவேலையும் முடித்துவிட்டு அறுசுவையில் அமர்ந்த பிறகுதான் மனது லேசானது.இது தான் என் இன்றைய ஸ்பெஷல்.
சுந்தரி அக்கா
ஹலோ சுந்தரி அக்கா,இப்ப கோபம் தணிந்து விட்டதுதானே. எப்படி இருக்கீங்க?
உங்களுக்கு அறிவுரை சொல்லும் அளவிற்கு எனக்கு வயதில்லை, ஆனாலும் எதற்கும் கோபப்படாதீர்கள். அது நம்ம உடம்புக்குதான் கேடு விளைவிக்கும். கோபம் வரும்போது ஒரு நிமிடம் அமைதியாக அமர்ந்து, "இதுவும் கடந்து போகும் என்று சொல்லுங்கள்". மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள். ஏதோ எனக்கு தெரிந்ததை சொன்னேன்.
அன்புடன்
பவித்ரா
அன்பு தங்கை பவி
நீ எழுதியது சரிதான்.ஆனால் சில சமயங்களில் என்னையும் மீறி டென்ஷன் ஆகி விடுகிறேன். இனி நீ சொல்வது போலே முயற்சிக்கிறேன்.வயதில் சிறியவர்கலானாலும் அவர்கள் சொல்வது நியாயம் என்றால் கேட்கும் பழக்கம் என்னக்கு வுண்டு நன்றி பவித்ரா
சுந்தரி அக்கா
தங்கைன்னு சொல்லிட்டு நமக்குள்ள எதுக்கு நன்றியெல்லாம்
அன்புடன்
பவித்ரா
சுந்தரி அர்ஜூன்
சுந்தரி அர்ஜூன்
இங்கே தான் இருக்கீங்களா?
ரொம்ப நாளா பதிவு பாக்க முடில? எங்கேயாவது போய்ருந்தீங்களா?
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
pls bahrain friends yaravadu irukingala pls
yaravadu bahrain friends irukingala pls enakku inga thania irukka romba bore adikkudu pa ps
kuttireyama-பக்ரைன் தோழிகள்
பக்ரைன் தோழிகள்இருக்காங்களே!!!
இது பற்றி ஒரு டாபிக் கூட வந்துச்சு!!
மன்றத்துல தேடி பாருங்க
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
ஹாய் ஆமீனா
எப்படி இருக்கீங்க. வுங்கள் குழந்தை கணவர் நலமா.நான் எங்கேயும் போகவில்லை .வீட்டில் கொஞ்சம் பிசி. கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் அறுசுவையில் வுங்கள் அனைவரது பதிவை படித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.அட்மின் அவர்கள் வீணான அரட்டை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.அதனால் தான் எனக்கு தெரிந்த தகவல் மட்டும் பதிவு செய்கிறேன்.நீங்கள் தான் சகலகலாவல்லியாயிற்றே.வுங்கள் பதிவை தொடர்ந்து படித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.ஆமீனா வுங்கள் நட்புக்கு நன்றி.
சுந்தரி
//நீங்கள் தான் சகலகலாவல்லியாயிற்றே//
இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல?
எங்கள் வீட்டில் எல்லாரும் நலம்.
மீண்டும் ஏதாவதொரு முக்கிய பதிவில் சந்திக்கலாம்.
(இங்கேயும் அரட்டை ஆரம்பிச்சுற கூடாதே)
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
இன்றைய ஸ்பெஷல்
அருசுவை நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்று பிர்க்கங்காய் கூட்டு செய்தேன் ரொம்ப நன்றாக வந்தது. இதுதான் இன்றைய ஸ்பெஷல்.