இன்றைய ஸ்பெஷல் டாபிக்

இன்றைய ஸ்பெஷல் என்றதும் எல்லோரும் சமையலுன்னு நினைத்தீர்களா? அப்படின்னா ஏமாந்துட்டீங்கப்பா,
நானும் ஒரு இழை தொடங்கலாம்ன்னு தோணிச்சு, அதனாலதான்.
தினமும் நமக்கு நாமே செய்த ஏதாவது ஒரு செயல் மிகவும் பெருமையா இருக்கும் இல்லையா? அந்த மாதிரி தினமும் செய்வதில் பிடித்ததை நாம் நம் அறுசுவை தோழிகளுடன் பகிர்ந்து கொள்ளதான் இந்த இழை. தயவு செய்து இங்கும் உங்களது பதிவுகளை வந்து போடுங்கோகோகோகோ


இன்னிக்கும் ரம்யா மேடம்,பட்டி-ட்வெண்டி நடுவரையும் காணும்.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி, அது காணும் இல்ல காணோம், தமிழ் தெரியலைனா என் டியூஷன் வாங்க சரியா? கட்டணம் எதுவும் இல்லை உங்களுக்காக இலவசம். ஹி ஹி ஹி

அன்புடன்
பவித்ரா


எப்ப ஆரம்பிக்க போறேள் தமிழ் பாடத்தை?

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

உ மாமி, நான் ரெடி நீங்க ரெடியா

அன்புடன்
பவித்ரா


ரொம்பதான் குசும்பு ஒங்களுக்கு. ஏதோ வெரல் ஸ்லிப்பாயிடுத்து. இல்ல நான் கேக்கறேன் தப்பா எழுதினா நேக்கு மார்க்க கொறச்சு அட்மின் சார் போட்டுடுவாரா என்ன?நேக்கு வ்ர்ர கோவத்துக்கு...............

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

வர்ற் கோவத்துக்கு, இன்னும் இன்னும் நான் உங்ககிட்ட நிறைய எதிர்ப்பார்க்கிறேன் உ மாமி,come on

அன்புடன்
பவித்ரா

உ மாமி, என்ன மாமி பதிலையே காணோம் பயந்துட்டீங்களா?

அன்புடன்
பவித்ரா

இன்னைக்கு விடிய விடிய ஆமி சாரல்ல நனச்சுட்டே தூங்கினா!
(கரண்ட் இல்லாததுனால வாசல்ல போய் தூங்குனேன்)

மொதல்ல ஈபி காரன திட்டிட்டே இருந்தாலும்,அங்கே போய் படுத்ததுக்கப்பறம் அதே ஈபி காரன வாழ்த்துனேன். கரண்டே வரக்கூடாதுன்னு...

ஏசில கிடைக்கத சுகம் நேற்றிரவு கிடைத்தது தான் ஆமியின்
இன்றைய ஸ்பெஷல்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா


அப்பப்பா!என்ன அவசரம்!நானே தமிழ்-ல தப்பில்லாம தட்டச்சு பண்ண தேடி தேடி அடிக்கறேன். நீங்க என்னடன்னா உ மாமி உ மாமின்னு கூப்டுண்டேருக்கேளே!
ஒங்களுக்கு பதில் போடரதுகுள்ளே கரண்ட் போயிடுறது.கம்யூட்டர் ஸ்டர்க்கறது.நான் என்ன பண்வேன்.

பி.கு;
அப்பாடா! ஒரு வழியா தமிழ் பண்டிட்-க்கு பதில் போட்டாச்சு

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

என்ன மாமி கோச்சுன்டேளா? கோச்சுக்க பிடாது மாமி

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்