இன்றைய ஸ்பெஷல் டாபிக்

இன்றைய ஸ்பெஷல் என்றதும் எல்லோரும் சமையலுன்னு நினைத்தீர்களா? அப்படின்னா ஏமாந்துட்டீங்கப்பா,
நானும் ஒரு இழை தொடங்கலாம்ன்னு தோணிச்சு, அதனாலதான்.
தினமும் நமக்கு நாமே செய்த ஏதாவது ஒரு செயல் மிகவும் பெருமையா இருக்கும் இல்லையா? அந்த மாதிரி தினமும் செய்வதில் பிடித்ததை நாம் நம் அறுசுவை தோழிகளுடன் பகிர்ந்து கொள்ளதான் இந்த இழை. தயவு செய்து இங்கும் உங்களது பதிவுகளை வந்து போடுங்கோகோகோகோ

ஹாய் பவி

நான் கவனிக்கலையே!

இப்ப தான் போய் பாக்குறேன். நன்றி பா. எங்களுக்கு தெரிஞ்ச ஏஜண்ட் மூலமாவே ஆன்லைன் பேமெண்ட் ப்ரீமியம் பத்தி தெரிஞ்சுக்கிட்டோம்.

10 நிமிஷம் பயணம் பன்ணாவே எல்.ஐ.சி இருக்கு. அதுனால நேரடியாவே கட்டிட்டிருக்கோம் பா. உங்க பதிலுக்கு மிக்க நன்றி!

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹாய் ஃப்ரைடே வா இருந்தும் இன்று என்ன ஹஸ் ஆபிஸ் போய் இருகாங்க என்னக்கு ரொம்ப கோவமா வருது அதுதான் இன்றைய ஸ்பெஷல்

என்னப்பா இது, என் இழையில் என் பதிவுதான் ஜாஸ்தியா இருக்கு, சரி, என் இன்றைய ஸ்பெஷல் இன்னிக்கு ராத்திரி சமையல் இல்லை, ஹோட்டல் டிப்பன், ஜாலி

அன்புடன்
பவித்ரா


ஆடி வெள்ளியோனோ........ அம்பாளுக்கு பானகம் நேவேத்யம்.........
காத்தால: இட்லி, தே.சட்னி,இட்லி சம்பார்

மத்யானம்:முருங்கக்கா சம்பார்(எங்காத்து கொல்லேலயே மரம் இருக்கே),தக்காளி ரசம்.,புடலங்கா கறி.

ராத்திரி:இட்லி,மோர் சாதம்,சாம்பார்.

அப்பறம்.................... என் தம்பி ஆம்படயாள் வந்து நேக்கு ”வெத்தல சீவல்’’
கொடுத்துட்டு போனா..........

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி, எல்லாமே எனக்கு ரொம்ப பிடித்த உணவு, சாப்பிடணும் போல இருக்கு,

அன்புடன்
பவித்ரா

இன்றைய ஸ்பெஷல்,
நான் இன்னிக்கு எங்க அம்மா அப்பாவை பார்க்க்ப்போறேன், ஹேப்பி 2 நாட்கள்,

அன்புடன்
பவித்ரா

என்னோட இன்றைய ஸ்பெஷல்,நான் ஒரு எக்ஸாம் எழுதியிருந்தேன், அதுல பாஸ் அயிட்டேன்ப்பா, இன்னிக்கு தான் ரிஸல்ட் வந்தது, ஸோ எனக்கு ஒரு இன்கிரிமென்ட் உண்டு, ஆஹா, enjoy

அன்புடன்
பவித்ரா

இன்றைய ஸ்பெஷல் டாபிக்

இந்த இழையை கொண்டு வர எவ்வளவு வேர்வை சிந்த வேண்டியுள்ளது? நல்லா தூங்கிருச்சு:(

நான் பாஸாயிட்டேன்.(பெரிய கலெக்டர் படிப்பு படிச்சு பாஸாயிட்ட மாறி பில்டப்ப பாரு)

இது தான் என் இன்றைய ஸ்பெஷல்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எதுல பாஸானீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா, இல்லை இழையை மேலே கொண்டு வருவதிலா, நான் ஆரம்பித்த இழையை எழுப்பியதற்கு நன்றி. நான் எழுப்ப நினைப்பேன், ஆனால் என்னுடைய பதிவு மட்டுமே இருக்கும், அதனால் நானும் விட்டு விட்டேன்.

அன்புடன்
பவித்ரா

எதுல பாஸானீங்க. ஸ்வீட் எடு கொண்டாடு. கொஞ்சம் விவரமா சொல்றது.

பவித்ரா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். ஆஹா நமக்கு எல்லாம் ஒரு ட்ரீட் இருக்கா அப்போ இடத்தை சொல்லுங்க பவி கரைக்டா வந்துடுறேன்.

மேலும் சில பதிவுகள்