அரட்டை 2010‍ பாகம் 1

ஹலோ ! என்ன பாக்கறீங்க... நானும் எல்லா இடத்திலும் போய் பாக்கறேன்... நான் போற இடத்துக்கு நண்பர்கள் போவதில்லை.. அவங்க வந்து போனா ஒரு 10 நாள் கழிச்சி தான் எனக்கே தெரியுது... அதனால் கொஞ்சம் அரட்டையை தொடங்கறேன்... முன்ன மாதிரி ( எப்ப முன்ன மாதிரின்னு கேக்காதீங்க... ) என் ராசி எப்படின்னு பாக்கலாம்...
எனக்கு தெரிஞ்சு இப்ப இந்த இழை இல்லை...

கரெக்டா வந்து அட்டென்டென்ஸ் போடணும்.. இல்லைன்னா வனி கைல பிரம்போட வருவாங்க...

என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ.. இந்த இழை மட்டும் காணாம போயி அதையும் என்னை தேட வைக்காதீங்க....

ஹாய் இலா எப்படி இருக்கீங்க அரட்டை இழை ஆளாளுக்கு ஓபன் பண்ற மாத்ரி இருக்கு .
பாப்ஸ் கூட ஒன்னு ஓபன் பண்ணின மாதிரி இருந்தது அதுக்குள்ள நீங்க :)
வாங்க எப்படி இருக்கீங்க ?

ஹலோ இலா,
நீங்கள் நலமா? ரொம்ப‌ நாளாச்சு உங்க‌கிட்ட‌ எல்லாம் பேசி! அவ்வ‌ள‌வு ஏன்? நான் அறுசுவைக்கு ப‌திவு போட்டே ரொம்ப‌ நாளாச்சு. சம்மர் ஹாலிடேஸ் என்பதால், பசங்களை அழைத்துக்கொண்டு ஒரு சின்ன ஊர்சுற்றல் ‍ வெஸ்ட்கோர்ஸ்க்கு, அதான்!

அப்புற‌ம், உங்க‌ளுக்கு எப்ப‌டி போகுது? வொர்க் பிஸியா, இல்லை ஓகே‍வா இருக்கா? என‌க்கு இப்ப‌ ஒரு 10 ‍ 15 நாளா, கொஞ்ச‌ம் டைட்டா இருக்கு. இன்னைக்கு நான் ஆபீஸுக்கு லீவு. அதான், ஒரு இரண்டு மூன்று இடங்களில் இன்னைக்கு என் ப‌திவை பார்க்க‌லாம்.

நிறைய‌ இழைக‌ளை அப்ப‌ப்ப‌ நேர‌ம் கிடைக்கும்போதெல்லாம் வந்து விஸிட் அடிச்சிட்டே இருப்பேன். ஆனால் நினைத்த‌ப‌டி பதில் ப‌திவுதான் போட‌ முடியாம‌ல் இருக்கு. தோழிக‌ள் யாரும் த‌வ‌றா நினைக்க‌ வேண்டாம். கொஞ்ச‌ம் ப்ரீயான‌தும் க‌ட்டாய‌ம் வ‌ருகிறேன். ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

ஹாய் அனாமிகா! நான் நல்லா இருக்கேங்க.. நீங்க எப்படி? அட.. எனக்கு தெரியலைமா... அங்க தேடி போயி இங்க வர சொல்லறேன் :))
ஒரு ஆர்வக்கோளாறு தான் ..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் சுஸ்ரீ! எப்படி இருக்கீங்க?? குழந்தைகள் நலமா? சம்மர் ஹாலிடேஸ் எப்படி போகுது.. ஹீட்வேவில இருந்து தப்பிக்க என்ன செய்யறீங்க...என்னால‌ சுத்த‌மா முடிய‌ல‌... க‌ல‌ர் (??!!) வேற‌ கூடிகிட்டே போகுது :((

வெஸ்ட் கோஸ்டா... எங்க ?? அப்படியே மிட்வெஸ்டுக்கு ஒரு ஸ்டாப் ஓவர் செய்து இருக்கலாமே(விஸ்கான்சின்/ஷிகாகோ)... போன வாரம் நானும் ஊர் சுத்தல் தான்.. நம்ம அருசுவை தோழி அமர் அக்பர் ஆன்டனி பார்த்தேன்... எல்லாம் எட்டி பாத்துட்டே போயிட்டா எப்படி.... எனக்கு லைஃப் நல்லாவே பிசியா போகுது... சம்மர் சீக்கிரம் போயிட போகுதேன்னு ஓடறேன்...
வாங்க நேரம் கிடைக்கும் போது...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..


பெரியவாளுக்கு நமஸ்காரம்,சின்னவாளுக்கு ஆசீர்வாதம்.
அன்பு ஆம்ஸ்,(என் மேல் கோபமாயிருக்கும்) செல்ல செண்பகா,இலா,அனாமிகா,சுஸ்ரீ,ரம்யா மேடம்,சீதாலஷ்மி மேம்,கோமு மேம்,அட்மின் சார்,(என் தமிழ் எழுத்துதவி)ஆஷிக் சார்,அப்பறம்(என் ரசிகர் மன்ற பொருளாளர்)பொன்.செந்தில் குமார்,ஜெசுதாசன் சார் மற்றும் அறுசுவை.காம் அன்பர்கள் அனைவருக்கும் GOOD MORNING!!!!!

பி.கு:
எழுந்திண்ட ஒடனே GOOD MORNING சொல்லனும்னு பாத்தா எங்க ஊர்ல காத்தாலேயே (4.20) கரண்ட் பேடுத்து.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

நல்லாருக்கீங்களா? வீட்ல எல்லாரும் சவுக்கியமா??? குட் மார்னிங் எனக்கு சொல்லாம என்னை டீல்ல விட்டுடீங்களே மா..... ஓகே ஓகே நாளைக்காது மறக்காம சொல்லிருங்க...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.


ஒன்க்கு சொல்ல மறந்துட்டேன்பா.சாரி............

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

அன்பு இலா,

நானும் நினைச்சேன், ஏன் இன்னும் யாரும் அரட்டை அரங்கம் தொடங்கலை, முன்பெல்லாம் கரெக்டாக ஆரம்பிச்சு, 100 பதிவு ஆனதும் அடுத்த இழை , என்று சூப்பராக இருக்குமேன்னு. இந்தத் தலைப்பைப் பார்த்ததும் யார் ஞாபகத்துக்கு வந்தாங்க தெரியுமா, மழலைத் தமிழில் எல்லோரையும் நலம் விசாரிப்பாங்களே, நம்ம பிரபாதாமு, அவங்கதான். அவங்களும் இன்னும் மற்ற எல்லாத் தோழிகளும் வருவாங்கன்னு எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு மோகனா

காலை வணக்கம், நல்லா இருக்கீங்களா?

என்னையும் நினைவு வச்சு குட் மார்னிங் சொல்லி இருக்கீங்க, இதோ நானும் வந்து ஒரு வணக்கம் சொல்லிட்டேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

மோகனா மாமி, என்னையும் மறந்துட்டேளே. அனைத்து அறுசுவை தொழிகளுக்கும் எனது இனிய காலை வணக்கம், இன்றைய பொழுது இனியதாக அமைய வாழ்த்துகள்.
அப்படியே, இன்றைய சாகசங்களையும் இன்றைய ஸ்பெஷலில் போட மறந்துடாதீங்க

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்