பீட்ரூட் சட்னி

தேதி: July 21, 2010

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

சிறிய பீட்ரூட் --1
வெங்காயம் --1
தக்காளி --1
வர மிளகாய் --2 or 3
புளி -- சிறிதளவு
எண்ணெய் --ஒரு மேஜைகரண்டி
உப்பு --தேவையான அளவு
தேங்காய் --2மேஜைகரண்டி


 

பீட்ரூட் வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கி வைக்கவும்
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் நறுக்கி வாய்த்த காய் மிளகாய் புளி உப்பு அனைத்தையும் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி
தேங்காய் போட்டு வதக்கி ஆறவைத்து அரைக்கவும்

சுவையான பீட்ரூட் சட்னி ரெடி


தோசையுடன் சாப்பிட ரொம்ப அருமையா இருக்கும்

மேலும் சில குறிப்புகள்


Comments

nasreen மேடம்,
சட்னி ரொம்ப வித்தியாசமா இருக்கு
மேலும் பல நல்ல குறிப்புகள் தர மனமார்ந்த வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஹாய் கவி நலமா கருத்துக்கு ரொம்ப நன்றி செய்து பார்த்துடு சொல்லுங்கபா அப்புறம் என்ன மேடம் சொல்லி நீங்க சின்ன பெண்ணக பாகுரிங்கள நஸ்ரின்னே சொல்லுங்க

பீட்ரூட்ல சட்னி கூட செய்யமுடியும் என்று உங்க குறிப்பு
பார்த்ததும் தான் தெரிந்தது நல்ல குறிப்பு. வாழ்த்துக்கள்..

ஹாய் கோமு அக்கா நலமா ?பீட்ரூட் சட்டினி ரொம்ப நல்லது டெய்லி தேங்காய் சட்னி சாப்பிடுவதற்கு இது போல் சாபிட்டால் ரொம்ப நல்லது எனக்கு பீட்ரூட்

பொரியல் அவளவ பிடிக்காது அதனால சட்டினியா செய்து சாப்பிடறது எப்படியாவது காய் உள்ள போன சரிதான் நீங்களும் செய்து பார்த்துடு சொல்லுங்க

உங்கள் பிண்ணுடம் கண்டு ரொம்ப சந்தோசம் ரொம்ப நன்றி

நஸ்ரின் எப்படி இருக்கீங்க? உங்களுடைய பீட்ரூட் சட்னி வித்தியாசமா இருக்கு இன்ஷா அல்லாஹ் செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ஹாய் பர்வீன் நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க ?ரொம்ப சந்தோசம் செய்து பார்த்துடு சொல்லுங்க