பிஷ்நெட் ஒயரை கொண்டு மீன்கள் செய்வது எப்படி?

தேதி: July 22, 2010

5
Average: 4.2 (9 votes)

 

பிஷ்நெட் ஒயர்
ஸ்டாஃப்ளர்
சம்கி

 

பிஷ்நெட் ஒயரை 14 செ.மீ அளவில் இரண்டு துண்டுகள் நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
இரண்டு ஒயரையும் தனித்தனியாக சமமாக மடக்கி எடுத்துக் கொள்ளவும். மடக்கிய ஒயரில் ஒரு ஒயரை கையில் எடுத்துக் கொண்டு, அதன் மேல் மற்றொரு ஒயரை படத்தில் இருப்பது போல் சொருகி கொள்ளவும்.
இப்போது முதல் ஒயரின் அடிப்பகுதியை இரண்டாவது ஒயரின் மேல் சற்று விலகி இருப்பது போல் வைக்கவும்.
இரண்டாவது ஒயரின் அடிப்பகுதியை முதல் ஒயரின் உள்ள துளையில் விட்டு நான்கு ஒயர்களையும் ஒரே சீராக இழுக்கவும்.
பிறகு ஒயரை பின்புறமாக திருப்பி வெளியில் நீட்டியிருக்கும் நான்காவது ஒயரை அதன் உள்வழியாக பாதியளவு விட்டால் அந்த இடத்தில் சிறிய துளை போன்று இருக்கும். அந்த துளையில் வெளியில் நீட்டியிருக்கும் முதல் ஒயரை விடவும். இப்போது நான்காவது மற்றும் முதல் ஒயரை மட்டும் இழுக்கவும். (அடுத்த படத்தின் விளக்கத்திற்காக இதில் எண்கள் இட்டு காட்டப்பட்டுள்ளது)
ஒயரை முன்பக்கமாக வைத்து இரண்டாவது ஒயரை மடக்கி பிடித்துக் கொண்டு, அந்த துளையில் மூன்றாவது ஒயரை விடவும். (படத்தில் இருப்பது போன்று)
இப்போது நான்காவது ஒயரை, மடக்கி வைத்திருக்கும் இரண்டாவது துளையில் விட்டு பிடித்துக் கொள்ளவும். பார்க்க மூன்று துளைகள் இருப்பது போன்று இருக்கும்.
முதல் ஒயரை மேல்வழியாக நான்காவது துளையில் விட்டு அடிவழியாக கொண்டு வந்து மூன்றாவது துளையில் விடவும்.
இரண்டு பக்கங்களிலும் இருக்கும் இரு இறக்கைகளை பிடித்து மெதுவாக இழுத்து பிறகு இறுக்கமாகி கொள்ளவும்.
பின்பு இறக்கைகளின் அடியில் ' v ' வடிவில் நறுக்கி விடவும். இரு பக்கத்திலும் உள்ள இரண்டு இறக்கைகளையும் சேர்த்து ஸ்டாஃப்ளர் பின் போட்டுக் கொள்ளவும். மீனின் தலைப்பகுதியில் சம்கி அல்லது கண்களை பெவிக்கால் தடவி ஒட்டவும்.
இதுப்போல் விரும்பிய நிறத்தில் நிறைய மீன்கள் செய்து க்ளாஸ் ஸ்ட்ரா அல்லது மணிகளில் கோர்த்து நிலைமாலை போல் செய்து கதவுநிலையில் மாட்டிவிடலாம். இந்த குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. தனலெட்சுமி அவர்கள்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அழகான மீன் செய்து இருக்கீங்க வாழ்த்துக்கள்

நீ என்னை மறந்தாலும்,நான் உன்னை மறவேன்


அப்பா! கண்ணுக்கே குளிர்ச்சியாயிருக்கே!ரொம்ப அழகா இருக்கு.

(ஹையா! அன்பு ஆம்ஸ் & ரம்யா மேடத்துக்கு முன்னாடி வந்துட்டேனே!)

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

தனலெஷ்மி

அருமையான மீன்:)

என் தையல் டீச்சரும் இது சொல்லி கொடுத்துற்காங்க!
ஆனா எனக்கு அப்ப புரியல:(
உங்க தெளிவான விளக்கங்களால் தெளியவடைந்தேன்.

நன்றி.!!!

மேலும் இது போல் நிறைய கைவேலைகளை பகிர்ந்துக்கொள்ள வாழ்த்துக்கள்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஃபிஷ்னெட் ஒயரில் மீன் செய்யும் விதம் படங்களுடன் தெளிவாக
விளக்கிச்சொல்லி இருக்கிரீர்கள். நன்றி பாராட்டுக்கள்.

அழகு மீன்... சின்ன வயசுல அம்மா செய்து குடுப்பாங்க பள்ளியில் குடுக்கும் க்ராஃப்ட் வேலையை. அதில் இதுவும் அடக்கம்....!!! :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கும் சின்னக் காலத்தில் செய்த நினைவு வருகிறது. ;)

‍- இமா க்றிஸ்

தனலட்சுமி மேடம்,
மீன் ரொம்ப அழகா இருக்கு
இது போலே அம்மாவும் செய்து இருக்காங்க
வாழ்த்துக்கள் மேலும் பல குறிப்புகள் தர மனமார்ந்த வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஹாய் தனலெட்சுமி மேடம் எப்படி இருக்கீங்க? உங்க மீன்ங்கள் ரொம்ப அழகாயிருக்கு. வாழ்த்துக்கள்.

மீன்களை சாப்பிடனும் போல் இருக்கிறது.

shagila

Hi,

I tried to make the fish as per your instructions. After the 2nd step i cant understand and proceed. Just the knot only i made. after that confused with how u hold the back side and numbered the wires.so please help me in finishing that.

Thanks.

Be good,do good.

HI friend,

Please answer to my doubt.... am very eager to make the fish.....

Thanks

Be good,do good.

Hi Dhanalakshmi,

Are you checking arusuvai.com...I asked a doubt..pls explain that..If others also know,pls help me in this...

Admin,
can u pls help me to get the answer from our friends...

Be good,do good.

கௌரி,

தனலட்சுமி குறிப்பு கொடுப்பாங்க. ஆனா இங்க வரது இல்லை.

இன்னொரு முறை மெது..வா இதே மாதிரி நம்பர் போட்டு பொறுமையா செய்து பாருங்க, நிச்சயம் சரிவரும். உங்களுக்காக நானும் செய்து பார்த்துட்டு வரேன். ;)

முக்கியமான வார்த்தையா தலைப்புல போட்டா... அட்மின் சொல்லாமலே நாங்க உதவிக்கு வருவோம். ;) அப்புடியே தமிழ்ல தட்டப் பாருங்க. இந்த த்ரெட்ல போனா தட்டலாம் - http://www.arusuvai.com/tamil_help.html

‍- இமா க்றிஸ்

கெளரி ஆரம்பத்தில் செய்யும் போது கொஞ்சம் குழப்பமா இருக்கும். மீண்டும் ஒரு முறை இமாம்மா சொன்னது போல் செய்து பாருங்க. நான் முயற்சி செய்து பார்க்கும் போது கஷ்டமா இருந்துச்சு, 2,3 தடவை செய்ததும் நம்ம என்ன பிழை செய்து இருக்கோம் கண்டுப்பிடிச்சி சரி செய்துட்டேன். இப்போ இந்த பிஷ் நெட் ஒயர் மீன் ஈஸியா இருக்கு நிறைய செய்து வைத்திருக்கேன்.

இமாம்மா உங்கள் ஊரில் இந்த ஒயர் கிடைக்குமா. நீங்க ஒரு க்ராஃப்ட், பேக்கிங் ஒயர்ல பூ செஞ்சு காண்பிச்சு இருப்பீங்க. அதுல முயற்சி செய்து பார்க்கலாம்.

எனக்கு இந்த ஒயர் தெரியல. இங்க வேற பேர் இருக்கும் என்று நினைக்கிறேன்.
ம்.. ;) அதே பாக்கிங் ஒயர்லதான் இப்போ பண்ணினேன். சரி வந்துது.

‍- இமா க்றிஸ்

சரியா வந்துடுச்சா. அதே ஒயர்ல கிளி செய்து பாருங்க. இங்க எல்லாம் சிலர் வீட்டில் இந்த ஒயர்ல மீனும், கிளியும் செய்து வால் ஹேங்கிங் மாதிரி செஞ்சு மாட்டி வைச்சு இருப்பாங்க.
http://www.arusuvai.com/tamil/node/10049 இந்த லிங்குல யாழினி டவுட் கேட்டு இருக்காங்க.

super ithu seira murai enaku kastamaha iru ku theilva solvingala?pls

I love my mahir

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta