தாத்தாவுக்கு என்ன வாங்கலாம்....

தோழிகளே..... நான் சவுதியில் இருக்கிறேன்... இந்த மாத இறுதியில் இந்தியா செல்கிறேன்... என் தாத்தாவுக்கு என்ன வாங்கி போவது என்று குழப்பமாக இருக்கிறது... அவருக்கு வயது 89. இதுதான் இங்கு வந்து முதல்முறை நான் ஊருக்கு போவது... அதனால் அவருக்கு நல்ல உபயோகமான பொருள் ஏதாவது வாங்கி கொடுக்க ஆசை... நல்ல ஐடியாக்கள் கொடுங்களேன்...

என் கணவரிடம் கேட்டால் வாக்கிங் ஸ்டிக் என்கிறார்... எனக்கு ஸ்வெட்டர் தான் தோன்றுகிறது... வேறு ஏதாவது நல்ல பொருளாக உங்களுக்கு தோன்றினால் சொல்லுங்களேன்..... ப்ளீஸ்......

ஹாய் வித்யா, என்னுடைய கசின் சிஸ்டர் பேர் கூட வித்யா தான். நான் விஷயத்திற்க்கு வருகிறேன். உங்களுடைய தாத்தாவிற்க்கு உங்களுடைய கணவர் விருப்பப்படி வாக்கிங் ஸ்டிக்கும், உங்களுடைய ஆசைப்படி ஸ்வெட்டரும் வாங்கிக் கொள்ளுங்கள். அப்படியே அங்கு கிடைக்கும் வித்தியாசமான தின்பண்டங்கள் வயதானவர்களுக்கு தகுந்தபடி இருந்தால் வாங்கிக் கொடுங்கள். ஏனென்றால் நம் வீடுகளில் வயதானவர்களுக்கு அவர்களின் நலன் கருதி சாப்பாடு விஷயத்தில் நிறைய கட்டுப்பாடுகள் இருக்கும்.

முதியவர்கள் வயது ஆக ஆக குழந்தைகளை போல சாப்பிட ஆசை படுவார்கள். அதனால் தாத்தா நன்றாக இருக்கும் போதே அவர் ஆசைபட்டதை சாப்பிட கொடுத்து மகிழ்விக்கலாம். எனக்கு தெரிந்ததை நான் சொன்னேன் வித்யா. தவறு இருந்தால் மன்னிக்கவும். எனக்கு தாத்தா இருந்தாலும் நான் இப்படித்தான் வாங்கி தருவேன். ஆனால் எனக்கு தாத்தா இல்லை. இந்த வயதில் அவர்களுக்கு பொருட்கள் மேல் பெரிய அளவில் விருப்பமும், நாட்டமும் இருக்காது.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பனா சொன்னது போல்தான் நானும் சொல்வேன். ;)

தாத்தாவிடமே கூட கேட்கலாம். அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டு அறிந்து வாங்கிக் கொடுத்தால் நீங்கள் தன் விருப்பதிற்கு மதிப்புக் கொடுக்கிறீர்கள் என்கிற சந்தோஷமும் அவருக்கு இருக்கும்.

பரிசுகள் எல்லாவற்றையும் விட, அங்கு தங்கி இருக்கும் நாட்களில் அவர்களோடு எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பது முக்கியம். அதுதான் வயதானவர்களை அதிகம் மகிழ்ச்சிப் படுத்தும். முடிந்தால் வெளியே அழைத்துப் போங்கள்.

‍- இமா க்றிஸ்


நேக்கு தாத்தாகிடேருந்து மொதல்ல ஆசிர்வாதம் வாங்கி தாங்கோ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

நன்றி கல்பனா... நானும் உங்க சிஸ்டர் மாதிரிதான்... :-) நீங்கள் எதுவுமே தவறாக சொல்லவில்லை... உங்கள் பதிலுக்காகத்தானே இழையே ஆரம்பிப்பது.... நீங்கள் சொன்ன தின்பண்டங்கள் நல்ல ஐடியா.... அதனால எல்லாத்தையும் வாங்கி கொடுத்துவிட வேண்டியதுதான்.... அவங்க சந்தோஷப்படறத பார்ப்பது தானே நமக்கு சந்தோஷம்.....

வித்யா பிரவீன்குமார்... :)

நன்றி இமா.... உங்களுக்கு தான் நம்ம வீட்டு பெரியவங்களை பத்தி தெரியுமே.... எப்பவாவது எதாவது வேணும்னு கேட்பாங்களா..... :-) தாத்தாகிட்ட கேட்டேன்.... நீ வா உன்னை பார்த்தாலே போதும் னு சொல்றாங்க....

அதுக்காக நாமளும் அப்படியே போக முடியுமா..... கண்டிப்பா நீங்க சொல்லுறது 100% உண்மை.... அவங்க கூட இருக்கறது மட்டும் தான் அவங்களுக்கு இப்ப சந்தோஷம்.... அவருக்கு ப்ளைட்டில் போகணும் என்று ஆசை.... இந்த முறை அதை தான் ப்ளான் பண்ணி வெச்சிருக்கோம் நானும் என் கணவரும்..... ;-)

வித்யா பிரவீன்குமார்... :)

கண்டிப்பா தாத்தாவோட ஆசீர்வாதம் நம்ம எல்லாருக்குமே உண்டு.... 89 வயது முடிய போகுது... So எல்லாருக்குமே தாத்தா மாதிரிதான் அவங்க.... இந்த மாதிரி வயசுல பெரியவங்க நம்ம கூட இருந்து வழிகாட்டுவதே கடவுள் அருள் என்றுதான் சொல்லணும்....

வித்யா பிரவீன்குமார்... :)

வித்யா எனக்கு தெரிஞ்சு பெரியவங்க தைலம் ஆசைபடுவாங்க,செண்ட்,ட்ரஸ்,ஷால் இதுமாறி வாங்கிட்டு போங்கோ!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா


நீங்க எல்லருக்கும் பதில் சொலறச்சே நேக்கு பதில் சொல்வேளோனு நெனச்சேன்.எந்த ஊர்ல் தாத்தா இருக்கர்னு சொன்னா நான் நேரயே வந்து ஆசிர்வாதம் வாங்கிப்பேனோல்லியோ?

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

எங்க வீட்லயும் தாத்தா இருக்காங்க. மாமி வரீங்களா நல்லா ஆசிர்வாதம் கிடைக்கும். அவருக்கு சாப்பாடு சாப்பிட்டதும் ஏதானும் டிட்,பிட்ஸ் வேனும்
கொறிக்க. ஆனா வீட்டில் தடா. வயசாச்சு. வயத்துக்கு ஒத்துவராது என்று
ஏதேதோ காரணங்கள். ஒருனாள் அவரை ஏ.ஸி. காரில் கோவிலுக்கு கூட்டி
போனோம். ரொம்ப சந்தோஷமா எஞாய் பண்ணினார். ஆனா திரும்ப வரும்
போது அவருக்கு ஏ.ஸி. சூட் ஆகாம த்லைசுத்தி, வாமிட் வந்து என்று ரொம்ப
சிரமப்பட்டுட்டார். இனிமேல எனக்கு ஏ.ஸி. வண்டிலாம் வேண்டாம்மா. நான்
வீட்லயா டி.வி. பாத்துண்டு சிவனேன்னு இருந்துடரேனுட்டார், நல்ல பக்தி
சி.டி. க்கள் வான்கி கொடுத்தா அவங்க வீட்லயே சந்தோஷமா பார்த்துண்டு
இருப்பாங்க. ஒரு வயசுக்குமேல ட்ராவல் பண்ணுவதுகூட அவ்ங்களால
முடியாம ஆயிடரது.

நன்றி ஆமினா.... தைலம் கண்டிப்பா வாங்கிக்கறேன்.... ஷால் கூட நல்ல ஐடியா தான்... நன்றி... :-)

வித்யா பிரவீன்குமார்... :)

மேலும் சில பதிவுகள்