தூத் பேடா

தேதி: April 9, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பால் - ஒரு லிட்டர் (கொழுப்பு நீக்கப்படாத , கெட்டியான பால்)
சர்க்கரை - 250 கிராம்
கார்ன் ஃப்ளோர் - ஒரு தேக்கரண்டி
ஏலப்பொடி - அரைத் தேக்கரண்டி
பிஸ்தா - ஒரு மேசைக்கரண்டி(தோல் எடுத்து நறுக்கினது)


 

ஒரு கனமான பாத்திரத்தில் பாலை விட்டுக் காய்ச்சவும். அது நன்கு சுண்டி, மூன்றில் ஒரு பாகமாக வற்ற வேண்டும்.
இப்பொழுது, கார்ன் ஃப்ளோரை ஒரு மேசைக்கரண்டி குளிர்ந்த பாலில் கலந்து அதில் சேர்க்கவும்.
கட்டி தட்டாமல், கை விடாமல் கிளறவும். மாவு வெந்ததும், சர்க்கரையைச் சேர்க்கவும்.
அடிப்பிடிக்காமல் தொடர்ந்து கிளறவும்.
சர்க்கரை நன்றாகப் பூத்து வந்ததும் இறக்கி, ஏலப்பொடியைக் கலந்து பாத்திரத்திலேயே வைத்திருக்கவும். அடிக்கடி கிளறி விடவும்.
சிறிது நேரத்தில் இறுகத் தொடங்கும். அப்பொழுது 25-30 உருண்டைகள் பண்ணவும்.
ஒவ்வொரு உருண்டையாக எடுத்து, தூத் பேடா வடிவில் கையால் தட்டி, நடுவில் லேசாக அமுக்கி விட்டு, நறுக்கின பிஸ்தாத் துண்டை வைத்து அழுத்தவும்.


சற்றே பொறுமையுடன் செய்தால் வீட்டிலேயே எளிதாகச் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்