சாரீஸ் பிஸினஸ்

தோழிகளே ! நான் ஏற்கனவே இந்த இழையை போட்டிருந்தேன். ஒருவரும் எனக்கு பதிலளிக்கவில்லை. எனக்கு வீட்டில் இருந்து சாரீஸ் பிஸினஸ் பண்ண ஆசையாக உள்ளது. அதற்க்கு எவ்வளவு முதல் போடலாம்? கஸ்டமர்ஸ் எப்படி பிடிப்பது? அதில் உள்ள நெளிவு சுளிவுகள் என்ன? விளக்க வாருங்கள் தோழிகளே ! இதிலும் பதில் இல்லாவிட்டால் இனி நான் ஏது இழை போட போவது இல்லை.


இருங்கோ, ஒங்களுக்கு ஆமினா எப்படியும் பதில் சொல்வார்.

நேக்கு இதை பத்தி ஒன்னும் தெரியாது.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

கல்பனா
எனக்கு இதில் பெரிதாக அனுபவம் இல்லை. இருப்பினும் தெரிந்ததை வைத்து சொல்றேன்.

முதலில் 10 சேலை வாங்கி அக்கம் பக்கம் உள்ளவர்களீடம் விற்பனை செய்யுங்கள். ஒரு சேலைக்கு 150 கூட சொல்லி விக்கலாம்.அவர்கள் பேரம் பேசுவதில் 50 ரூபாய் குறைக்கலாம். குறைத்ததும் சந்தோஷத்தில் வாங்குவார்கள்.

நீங்கள் இதை விற்பனை செய்யும் பொருட்டே அடுத்த நிலை பற்றி யோசிக்கவேண்டும்.

நீங்கள் சேலை வாங்குவதை மொத்த கடைகளில் வாங்கினால் விலை குறைவாக வாங்கி அதிக விலைக்கு விற்கலாம்.

எங்க வீட்டு பக்கத்து வீட்டு அம்மா இது போலவே வியாபாரம் செய்கிரார்கள், ஆடி தள்ளுபடிக்கு மதுரை,சென்னையில் 10,000 ரூபாய்க்கு துணி வாங்கி அந்த வருடம் முழுவதும் விற்பார்கள். நல்ல லாபம் கிடைக்கும்.

அதுபோல் விலை அதிகமுள்ள துணிகள் என்றால் வாங்க சிரமமாக இருக்கும். அத்தகைய துணிகளுக்கு தவணை முறையில் கொடுக்கலாம். இந்த தவணை முறையால் வாடிக்கையாளரை எளிதாக கவரலாம். அடுத்தடுத்து சேலை வாங்க அவர்களை தூண்டும்.

யோசிச்சுட்டு அடுத்த பதிவில் மிச்சத்தை சொல்றேன்.
நீங்க சீதா மேடத்திடம் கேட்டால் உங்களுக்கு இதைவிட அதிக யுக்திகள்,முறைகளை சொல்வார்கள்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹாய் கல்பனா எப்படி இருகிங்க. என் சித்தியும் இந்த பிசினஸ் தான் செய்தாங்க. அவங்க டீச்சராகவும் வேலை பார்த்து கொண்டு இந்த பிசினசும் செய்தாங்க. எனக்கு தெரிந்ததை சொல்ரேன் தவறாக இருந்தா மன்னிதுடுங்க. சாரீஸ் மட்டும் இல்லாமல் எல்லா ரெடிமேட்சும் வைக்கலாம். மொத்தமாக காசு வாங்குவதை விட கடனுக்கு கொடுக்கலாம், அதாவது என் சித்தி ஒரு சின்ன காடு கொடுப்பாங்க, அதில் வாரம் வாரம் காசு கட்டுரது மாதிரி போட்டு இருக்கும்., வாரம் வாரம் காசு வாங்கும் போது அதில் வரவு, மீதி என்று காசு வாங்கி கொண்டு சைன் போட்டு கொடுப்பாங்க. பொதுவா வீட்டில் பிஸ்னஸ் செய்தா முதல்ல கொஞ்சம் டல்லாதான் இருக்கும். அதன் பிறகு அதிக லாபம் கிடைக்கும். எங்க சித்தி ஒரு கடைல ( அவங்களுக்கு தெரிந்த கடையில்) மொத்தமாக வியாபாரத்திற்க்கு என்று சொல்லி வாங்கி வந்து அதை லாபம் போட்டு விற்ப்பாங்க. அதாவது 100 ரூபாய்க்கு ஒரு டிரஸ் வாங்கினா தை 150க்கு கொடுப்பாங்க, ஏன் என்றால் அது தவனை முறை. நல்ல லாபம் கிடைக்கும். கஸ்டமர் கிடைப்பது உங்கள் கைல தான் இருக்கு. அதாவது நீங்க கொடுக்கும் துணி நல்லாதாக இருந்தால் கண்டிப்பாக கஷ்டமர் தேடி வருவாங்க. வேர நினைவு இருந்தால் பிறகு சொல்கிரேன்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

மோகனா மாமி. நான் ஒங்கள விட சின்னவ மாமி. நீங்க சின்னவாளுக்கு இப்படி மரியாதை கொடுப்பது எல்லாம் வேணாம் மாமி. அடியேய் கல்பனான்னா நான் வந்துட்டு போறேன். உங்களுக்கு என்னோட அம்மா வயது இருக்கலாம்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அமீனா நீங்களே ஒரு அனுபவக்கடல் தான். உங்களுக்கு அனுபவம் தேவையே இல்லை. இருந்தாலும் பயனுள்ளவற்றை மற்றவர்களிடம் இருந்து கிரகித்து இங்கு எனக்கு அதை அளித்தமைக்கு மிக்க நன்றி அமீனா. நான் ஒரு 10,000 ரூபாயில் ஒரு புடவை எடுத்து வைத்துள்ளேன் உங்களுக்காக ரூ.12,000/- க்கு தருகிறேன். எப்ப வந்து வாங்கிக்கறீங்க?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஐய்யோ மோகனா மாமி பெரியவங்களா. சாரி எனக்கு தெரியாது. நான் ஏதோ சின்ன பொன்னு என்று நினைத்தேன். சாரி மாமி. நான் எப்போது செல்வி அம்மா, இமா அம்மா என்று தான் பெரியவங்கள கூப்பிடுவேன், அவங்களும் தன் மகா மாதிரி என் கூட பேசுவாங்க, அதிலும் செல்வி அம்மா ரொம்ப கேர் எடுத்து எனக்கு மருந்து எல்லாம் அனுபி வைத்தாங்க. ரொம்ப நல்லவங்க. உங்களையும் அம்மானி கூப்பிடுரேன். மோகனாம்மா. இன்று தான் ஆதித்யால தில்லான மோனாம்பாள் படம் பார்த்தேன்.:))

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹலோ சோனியா, நான் நல்லா இருகேன். நீங்க எப்படி இருக்கீங்க? நீங்க சொன்ன அறிவுரை எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சோனியா. நானும் அதுபோல கார்டு முறையை பின்பற்றுகிறேன். மிக்க நன்றி.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பனா என் பட்ஜெட் எப்பவும் 500 தாண்டியது இல்ல.யாராவது ஒசியா கொடுத்தா வாங்கிக்குவேன். நீங்க கொடுங்களேன்.முதல் வியாபார ராசிக்கு!

அட்ரஸ் சொல்றேன். அனுப்பி விட்டுருங்க ஓசிக்கு!

(அனுபவக்கடல்னு சொல்லி என் தலைல பெரிய ஐஸ்கட்டிய வச்சுட்டீங்களே! ஆஷிக் பாத்தா அனுபவபொதகுழின்னு கிண்டல் பண்ணுவார்:(

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

என்ன கலபனா மேடம் இவ்வளவு பெரிய பிஸ்னஸ் ட்ரிக் சொல்லி கொடுத்து இருக்கோம் பிரியா ஒரு சாரி தர கூடாத, சுடிதாரா இருந்தா கூட பரவா இல்ல, நான் ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டேன். எனக்கு ஒன்னு அமினா அவங்களுக்கு ஒன்னு., என்ன ஓகே தான டீலா நோ டீலா.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

அமீனா, இது போல புடவை எடுக்கற காசு சேர்த்து வச்சு லக்னோல எத்தன வீடு வாங்கியிருக்கீங்க? பொய் சொல்லாம சொல்லுங்க. இன்கம்டாக்ஸ்ல இருந்து எங்க ஆளுங்க உங்க வீட்டுக்கு ரெய்டுக்கு வந்துட்டு இருக்காங்க? அட... என்ன பண்றீங்க? அங்கே எந்த வீட்டு பத்திரத்த ஒளிச்சு வைக்கறீங்க?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்