அரட்டை 2010 பாகம் 4

அரட்டை 2010 பாகம் 3 160க்கு மேல ராக்கெட் வேகத்துல போனதுனால வெற்றிகரமாக நான்காம் பாகம் வந்துள்ளோம். போன அரட்டையில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் நன்றிகள் பல.

இந்த அரட்டை 2010 பாகம் 4 ஐயும் சிறப்பித்து தாருங்கள். எல்லாரோடைய சுவாரசியமான அரட்டையை இங்கே தொடங்குங்கள்......!

நம்ம அரட்டைய பாத்து வராதவங்களும் வரனும் :)

வாங்கோ,வாங்கோ......

அடுத்த பாகத்தை தொடங்கிட்டேன். எல்லாரும் வந்து கலந்துக்கோங்கோ! இந்த அரட்டை ஊத்திக்கிட்டா இலா என்னைய கம்பெடுத்து அடிச்சுருவாங்க!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா


அப்பப்பா! என்ன ஸ்பீட்! வந்தாச்சு................வந்தாச்சு................

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

வாங்க வாங்க எல்லோரும் எங்க போயிடீங்க வந்து உங்க பதுவுகளை அரமிபிங்களாம்...... உங்கள் எல்லோருக்கும் காலை வணக்கம் நான் போய் சமைத்துவிட்டு வருகிரேன் அதுக்குள்ள எல்லோரும் வந்து பதில் போடுங்க, தோட்டக்கலை இழை ரொம்ப சுறுசுறுப்பா போகுது இமா மேடம்,பிரபா மேடம், ஆமி,மாமி, பவி,பாதிமா,கல்பனாசரவணண்,சோனிய,சாந்தனி....... எல்லோரும் வாங்கவாங்கவாங்க.....................


என் ஒதவி ஆள் மினியம்மா பேசறெங்கறா...............

இன்னாமே ஆமினா எப்புட்க்கிறேமே?

இன்னா ஸ்பீடா போய்கினுக்கீது நம்ம ’த்ரெட்’டுமே.

வுட்டா ஒலகத்த தாண்டி பூடும் போலிக்கீத

போறும்டீ............. போறும் அவாள்லாம் பயந்துட போறா..............

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி மினியம்மாவ கேட்டேன்னு சொல்லுங்க!

எல்லார்கிட்டையும் தாத்தா அட்ரஸ் கேக்குரேள், மொதல்ல உங்க முகவரி கொடுங்க! உங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்க வரணூம்!

உங்கள் பாக்கனும் போலவே தோனுது. என் ஆத்துக்காரர் நீங்க நேத்து செந்தில் கடிக்கு விட்ட கடியை ரொம்பவே ரசிச்சார்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமா, எல்லாருக்கும் ஒம்பதரை மணிகே
எப்டித்தான் ஃப்ரீ டைம் கிடைக்கிரதோ. வீட்ல நல்ல அர்ச்சனை வாங்கிண்டே
அரட்டை அடிக்க வரீங்களா?

கோமு
இது பொறாமையின் குரலா?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

இது பொறாமை இல்லீங்க. நம்ம அறுசுவைல எந்த ஆமைகளுக்கும்
இடம் கிடையாது. இதுஒரு கையாலாகாத்தனம். எல்லாமே டேக் இட்
பாலிசிதான், இருக்கணும் இல்லியா?

ஹாய் பிரண்ட்ஸ் நான் புதிய உறுப்பினர் என் பெயர் அனிதா என்னையும் உங்கள் தோழியாக ஏற்று கொள்வீர்களா அரட்டை 2010 என்றால் என்ன நானும் இதில் கலந்து கொள்ளலாமா பதில் ப்ளீஸ்

பொன்னி(jusvyn)
இப்ப உங்கள அறிமுகம் செய்யும் போது பாத்தேன். நானே கேக்கலாமென எண்ணினேன். நீங்களே சொல்லிட்டீங்க!

சொன்னபடியே சண்டே வந்து கரேக்டா சொல்லிட்டீங்க. :)

இனி நாங்களும் அதையே செஞ்சுருவோம். நன்றி ட்ரை பண்ணதுக்கு....

ஹாய் அனிதா....
வருக...வருக.... மற்ற பயனுள்ள இழையில் சொல்லநினைத்த அரட்டைகளை அங்கே சொல்லாமல் இங்கே சொல்லல்லாம்.

இப்போதைக்கு இது தான். போகபோக நீங்களே புரிஞ்சுக்குவீங்க!
(உங்கள் அரட்டை மற்றவர்களை சந்தோஷப்படுத்தவேண்டும். சுவாரசியமாக்க வேண்டும். தூங்க வைக்க கூடாது என்பது தான் அரட்டை 2010 -ன் ரூல்ஸ்.:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்