பணிவான, அன்பான வேண்டுகோள்

தோழிகளே ! உங்களிடம் ஒரு பணிவான, அன்பான வேண்டுகோள். இங்கே பல தோழிகள் தங்களுடைய சந்தேகங்கள், குறிப்புகள், அறிவுரைகள் என்று கேட்கிறார்கள். அதற்கு நம் தோழிகளும் சிரத்தை எடுத்து தங்களுக்கு தெரிந்தவற்றை எவ்வளவு பணி இருந்தாலும், தங்களுடைய பொன்னான நேரத்தை செலவிட்டு ஆர்வத்துடன் பதில் அளிக்கிறார்கள். அதற்கு குறைந்தபட்சம் நன்றி தெரிவிக்காவிட்டாலும் பரவாயில்லை. நீங்கள் கருத்துக்களை படித்தபிறகு பதிலாவது தரலாம் அல்லவா? நீங்கள் படித்து பயன் பெற்றீர்களா இல்லையா என்று தெரியாமலே போய்விடும். (நான் சொன்னது பதிலளித்த தோழிகள் தவிர்த்து) நான் கூறியதில் தவறு இருந்தால் உங்கள் சகோதரியாக நினைத்து என்னை மன்னிக்கவும்.

நல்ல விஷயம் தான் அனைவரும் கட்டாயம் இதனை பின்பற்றுவோம்.

நல்ல தகவலை தந்த கல்பனா சரவனுக்கு என் மனமார்ந்த நன்றி.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*


நான் பிரபாதமு சொல்லறத ஆமோதிக்கறேன்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

நன்றி மோகனா... :)

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*


நீங்களும் என்னை மாறி காத்தால சீக்கரமே எழுந்துண்டுவேளா!

என்னை காத்தால 4 மணிக்கு எழுந்து பல் தேச்சுட்டு வசல்ல சாணி கரச்சு போட்டுட்டு வெளக்கெத்தனம்னு எங்க மாமியார் சொலிருக்கா!

காத்தால 4.30 டு 6.00 வரை முகூர்த்தவேளையாமே!

நான் மாமியார் மெச்சிய மாட்டுபொண் தெரியுமோ?

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

நீங்க உங்கல பத்தி சொல்லுங்க மோகனா. நான் தெரிஞ்சிக்கிறோன்.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

நீங்க ஜயர்வாலா? நீங்க எங்க இருக்கிங்க? உங்க சொந்த ஊர் எதுப்பா.

நான் பிறந்தது சென்னை. வாழ போனது வேலூர் ( வாலாஜா ). இப்ப இருப்பது சிங்கப்பூர். நானும் என் கணவரும் தான் இருக்கோம்.

நீங்க இந்தியாவில் இருக்கிங்க என்று நினைக்கிறோன். சரியா என்று வந்து சொல்லுங்கப்பா.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*


www.arusuvai.com/tamil/node/13259?page no=4 க்கு போய் பாத்தேள்னா தெரிஞ்சிட போரது

ரொம்ப நாளா நேக்கு சிங்கப்பூர் வரனும்னு ஆசை!

ஒங்களுக்கு என் அருவயை தாங்கிக்கற தையிரியம் இருக்கா!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மோகனாரவி ,

காலை வணக்கம் பா. இப்பதான்பா பார்த்தேன் உங்க பயோடேடா. நீங்க அருப்புக்கோட்டைலயா இருக்கீங்க. எனக்கும் என் கணவருக்கும் சொந்த ஊர் அருப்புக்கோட்டை தான். உங்க கூட பேசுனதுல ரோம்ப சந்தோசம் பா

மீனா

கல்பனா நீங்கள் சொல்வது சரிதான் நாங்களும் அதை பின்பற்றுவோம்.............
அரட்டைக்கு வாங்க பேசுவோம்.
அன்புடன்
நித்யா

நல்ல ஆலோசனை. அனைவரும் ஏற்க கூடியது.

எனக்கு ஞாபகம் வந்ததுல,
பொன்னி என்ற ஜஸ்வின் ஹெல்ப் கேட்டாங்க. பதிவு போட்டதும் அதற்கு நன்றி சொல்லி அதை செய்து பார்த்துட்டு வந்து பதிலையும் சொல்லிட்டாங்க.

அப்படி சொல்லும் போது மனசு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. ஆர்வத்தை ஏற்படுத்துது. அது மாறி எல்லாரும் இருந்தா நல்லா இருக்கும்.

சில பகுதிகளில் அதிக நாட்கள் நீடிக்க கூடிய பிரச்சனைகளுகு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்ராலும் மற்றவர்களாவது சொல்லலாமே!

நன்றி தேவையில்லை..., அதன் விளைவுகளை,அவர்கள் அடைந்த நண்மைகளை பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சியாக இருக்கும்.

முக்கியமான விஷயம்:

தப்பா நெனைக்காதீங்க!
இந்த இழையை அரட்டை இழையாக மாற்ற வேண்டாம் என்பது என் அன்பான வேண்டுகோள்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்