தோழனுக்கு எழுதிய மடல் - ஆமினா

தோழனுக்கு எழுதிய மடல்

சிறுவயதில்
காலில் பட்ட என் காயத்தை-உன்
பிஞ்சு விரல் தடவுதலால்
மருந்திட்டாய்!

சாலை கடக்க
நான் தயங்கிய போது-என்
கைபிடித்து அழைத்துச்சென்று
விதிகளையும்
கற்பித்தாய்

பாடம் எழுத
மறந்த என்னை
ஆசிரியர் அடிக்க-நீயும்
என்னுடன் சேர்ந்து
அழுதாய்

பருவவயதில்
என் மனம் கொண்ட
தடுமாற்றத்தை-உன்
அழகிய வார்த்தைகளால்
நேர்வழிக்கு அழைத்துச்
சென்றாய்

தெருவில்
யாரோ என்னை கேலி செய்ய-நீ
ஓடி வந்து எனக்காக
சண்டையிட்டாய்

அம்மா வாங்கி கொடுக்க
மறுத்த ஆடையை-உன்
சேமிப்பில் சேர்த்ததொகையால்
வாங்கி தந்து
என் கண்ணீரை
துடைத்தாய்

நம் நட்பை பலர்
கொச்சைபடுத்திய போது
“வருடங்கள் பல கழிந்த பின் பார்”-என
சவால் விட்டாய்

என் காதலை
ஆதரித்தது மட்டுமின்றி-நீ
அனைவரின் சம்மதத்தையும்
பெற்று தந்தாய்

என்னவன் கைகளில்
என் கையை கோர்த்துவிட்டு-நீ
ஏனோ ஒரு மூலையில்
சிறுபிள்ளையாய்
அழுதாய்

அந்த அழுகையின் பிண்ணனி
நம்முடைய பிரிவா?
அன்றுடன் நம் நட்புக்கு
முற்றுப்புள்ளியிட
உன்னால் முடிந்ததா?
பிரிவின்
வலியை உணர்தல்-உன்
தோழிக்கு இயலாத காரியம் என
உனக்கு தெரியாதா?

நண்பா!!
என் தாயின் மடியில்
சாய்ந்த நாட்களை விட-உன்
தோளில் தலை சாய்த்த
நாட்கள் அதிகம்

என் தந்தையின் கைபிடித்து
நடந்த பாதைகளை விட-உன்
கை கோர்த்து சென்ற
தூரம் அதிகம்.

என் தோழனின்
அன்புக்கு-இந்த
கோடிகள் ஈடாகாதே!!
எத்தனை உறவுகள்
வந்த போதும்-அவன்
அன்புக்கு இணையாகாதே!!

விழிகளை கட்டி
வனத்தில் விடவா-உன்
நட்பை
கொடுத்தாய்?

இந்த நட்புக்கு
அர்த்தம் கிடைத்தது-உன்
ஒழுக்கத்தால்!
இந்த உறவுக்கு
முழுமை கிடைத்தது-உன்
நடத்தையால்!

என்றென்றும்
என் அருகில் இருக்க-நீ
ஒப்புக்கொள்!
அந்த வானத்தையும்
என்னால் வளைக்க
முடியும்

என் ஒவ்வொரு
பாத சுவடுகளுக்கும் பின்-உன்
காலடி படியும் என
உறுதி சொல்!
சாதிக்க முடியாத
எதையும் என்னால்
ஒரேமுறையில் வென்றுவிட
முடியும்

உயிரே!!
உயிர் போகும் முன்பாவது வா!
நாவில் நீர் வற்றி
இமை மூடும்
தருவாயிலாவது வா!

ஏழேழு ஜென்மங்களை
கடந்தும்
தொடர வேண்டும்
இந்த பந்தம்!

இப்படிக்கு,
உன் வருகைக்காக
கையில் உயிரை ஏந்திய
நிலையில்.
உன் உயிர் தோழி

- ஆமினா

Comments

மடல் ரொம்ப நல்லாயிருக்கு. சீக்கிரம் தோழர் வர வாழ்த்துக்கள்

அருமை....சூப்பரா இருக்கு! இது கற்பனையா அல்லது நிஜமா என்று தெரியவில்லை. நிஜமாக இருந்தால் விரைவில் திரை விலக வாழ்த்துக்கள்.

நட்புடன்
நாகை சிவா

"Follow your heart and your dreams will come true."

ஆமினா,
உங்க கவிதை ரொம்ப நல்லா இருக்கு. கதைகள் மட்டுமின்றி கவிதையிலும் கலக்குறீங்க. உங்க எழுத்துக்கள் சூப்பர். வாழ்த்துக்கள்.

ஆமினா மேடம்,
கவிதை மனதை தொட்டு விட்டது
ரொம்ப அருமையா இருக்கு...
கவிதையிலும் கலக்குறீங்க..
மேலும் நல்ல கவிதைகளை எழுதுங்க வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஆமினா எப்படி இருக்கீங்க?சூப்பர் ஆமினா,கதையிலும் கவிதையிலும் கலக்குறீங்க.சூப்பர்,வாழ்த்துக்கள்

சூப்பர்.தொடர்ந்து எழுத வாழ்துக்கள்!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஆமினா ரொம்ப அழகா எழுதிருக்கிங்க. இது கற்பனையா நிஜமா தெரியவில்லை. அப்படி ஒரு நண்பன் யாருக்கும் இவ்வுலகில் கிடைக்க வாய்ப்பில்லை. இலட்சத்தில் ஒருவருக்கே கிடைக்கும். ஆமினா தங்கள் கவிதை நிஜமெனில் நீங்கள் இலட்சத்தில் ஒருவா். தோழரே விரைவில் வருக......

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஆமினா..இந்த கவிதை ரொம்பவே நெகிழ்ச்சியா இருந்தது..சூப்பர்...

Madurai Always Rocks...

ஆமினா சூப்பர் நீங்க எழுதியிருக்கும் கவிதை. தொடர்ந்து கவிதையும், கதைகளும் எழுத வாழ்த்துக்கள்.

ஆமினா மேடம்,
கவிதை கலக்கலாக இருக்கு..... கண்ணில் ஒரு கண்ணீர் வந்தது.... உங்களின் அந்த தோழன் யாரு??? அவருக்கு வணக்ககள் அல்லது கற்பனை கவிதையா????

விழிகளைக்கட்டி
வனத்தில் விடவா- உன்
நட்பைக்
கொடுத்தாய்?
அருமையான வரிகள்.
பாராட்டுக்கள் மேடம்.

இது போல் தான் ஆமினா நான் என் நன்பனை தேடுகிறேன்
என் மணவழ்க்கையை முன்நின்று நடத்தியவன் இன்று எங்கோ இருக்கிறான்

கவிதை மிக அருமை

அருமை, என் கண்களில் நீர் வழிந்தது இந்த கவிதையை படித்ததும், எனக்கும் ஒரு தோழன் உள்ளான், கவிதையை பார்த்ததும் அவனுடன் ஒரு நிமிடம் உரையாடிவிட்டுதான் இந்த பதிவையே போடுகிறேன், நல்ல கவிதை, வாழ்த்துக்கள்.

அன்புடன்
பவித்ரா

நன்றிகள் பல

என் கவிதையை விரைவில் வெளியிட்ட அட்மின் அண்ணாவிற்க்கு நன்றிகள் பல.

உங்களின் இத்தகைய பணிகள் தான் பல சாதனையாளரை உருவாக்குகிறது.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கீதா சங்கர்

என் கவிதைக்கு முதல் வாழ்த்து உங்களிடமிருந்து தான் வந்துள்ளது. பாராட்டியதற்கு வாழ்த்துக்கள்.

தோழர் சீக்கிரம் வர இறைவனிடம் எனக்காக பிராத்தியுங்கள்:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நாகை சிவா

ரொம்ப நன்றி சிவா. இது கொஞ்சம் கற்பனை கலந்த உண்மை. திரை விலகும் போது கண்டிப்பாக உங்களிடம் சொல்கிறேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹர்ஷா
நன்றி ஹர்ஷா. உங்க ஊக்கங்கள் தான் என்னை இந்த அளவுக்கு மாற்றியுள்ளது. தொடர்ந்து உங்க கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளுங்க!

மீண்டும் ஒரு முறை நன்றி.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நன்றி கவிதா

என் ஒவ்வொரு படைப்பிலும் உங்க ஆதரவை கண்டு மகிழ்ச்சி. என்னால் தான் உங்கள் பல சமையல் குறிப்புகளையும் கருத்து சொல்ல இயலவில்லை.(சில பொருட்கள் இந்த ஊரில் கிடைக்காததும் ஒரு காரணம்)
ஆனால் நீங்கள் பலருக்கும் ஊக்கம் தருவதை கண்டு சந்தோஷம்.

தொடர்ந்து உங்க ஆரதவை தரவும்:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பானு அலி

நல்லா இருக்கேன் பானு. பாராட்டுக்களுக்கு நன்றி பா. தொடர்ந்து என் கதை,கவிதைக்கு உங்க பாராட்டுக்கள் வேண்டும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வாழ்த்துக்கு நன்றி அண்ணா,,,!
உங்க அளவுக்கு முடிலன்னாலும் என் அளவுக்கு முயற்சி செய்து தொடர்ந்து எழுதுகிறேன்.

நன்றி:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ராதா

மிக்க நன்றி கவிதா!

அத்தகைய நண்பன் கிடைத்ததால் லட்சத்தில் ஒருத்தியானேன்.

அவனை தொலைத்ததால் நானும் சராசரி மனுஷி ஆகிவிட்டேன்:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஒரு கவிதையே என் கவிதையை பாராட்டும் போது உடலெல்லாம் புல்லரிக்கிறது. உங்க அளவுக்கு எனக்கு வார்த்தை தெரியாது. என்னால் முடிந்த அளவுக்கு உயிர்கொடுத்துள்ளேன்.

பாராட்டிற்கு நன்றி ஆனந்தி.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வினோஜா

நன்றி பா. தொடர்ந்து படிக்க,ரசிக்க நீங்க ரெடின்னா நாணும் ரெடி தான்:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

//கண்ணில் ஒரு கண்ணீர் வந்தது//

இந்த வரியை என் கவிதைக்கு கிடைத்த வெற்றியாய் விருதாய் நினைக்கிறேன். அந்த நண்பரை சந்தித்தால் உங்கள் வணக்கங்களை கண்டிப்பாக சொல்கிறேன்:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கோமு
அந்த வரி தான் எனக்கும் பிடித்த வரி. அடிக்கடி முணுமுணுக்கும் வரியும் கூட.
நன்றி. உங்க பாராட்டிற்கு.

புதுசா என்ன மேடம். அப்பறம் நானும் கோமு அம்மா,கோமு மாமின்னு சொல்லுவேன்(தமாஷுக்கு)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

இத்தகைய நட்பு ஒவ்வொருவர் வாழ்விலும் கண்டிப்பாக உண்டு இல்லையா?

இரு ஆண்களின் நட்பு தான் கடைசிவரை நீள்கிறது. ஏனோ பெண்களுக்கு அத்தகைய வாய்ப்பு கிடைப்பதில்லை.

உங்கள் நட்பு மீண்டும் உயிர் பெற வாழ்த்துக்கள்.

பாராட்டுக்கு நன்றி:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நன்றி பவி.

அந்த கண்ணிர்,உங்கள் மனதில் ஏற்படும் சிறு கலக்கங்களும் தான் என் கவிதைக்கு கிடைத்த வெற்றி:)

பாராட்டிற்கு நன்றி பவி.....

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

///உங்க அளவுக்கு முடிலன்னாலும் என் அளவுக்கு முயற்சி செய்து தொடர்ந்து எழுதுகிறேன்///
(நீங்க கேளியா சொல்றிங்களோ இல்லை உண்மையா சொல்றிங்களோ..பரவாயில்லை)
என்ன ஆமினா மேடம் இது?என் அளவுக்கு உங்க அளவுக்குனு சொல்றிங்க?அளவுன்னா எத்தனை லிட்டர்?இறைவனின் முன்னால் எல்லோரும் சமம் திறமை உட்பட.ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வோரு திறமை!
ஒரு ஆறு மாதத்திற்க்கு முன்னால் நான் நினைத்து பார்க்க வில்லை இப்படி கதை எழுதுவேன் என்று...உங்களிடமும் எல்லாத் திறமையும் இருக்கிறது..அது என்னைவிட அதிகம் குறைவு என்று சொல்வதிற்கில்லை.கீப் ரைட்டிங்.ஆல் தி பெஸ்ட்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஆமினா..

உங்களின் மடல்.. உண்மையாகவே அருமை.. ஒரு ஒரு திறமையாக வெளிப்படுத்தி கொண்டிருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹாய் ஆமினா கவிதை சூப்பரா இருக்குபா உண்மை கலந்த கற்பனையa ஆமினா உங்கள் தோழர் விரைவில் கிடைக்க என் வாழ்த்துக்கள்