தீப விளக்கு ஏற்றுவது பற்றி பேசுவோம்

நாம் சாமிக்கு தீபம் ஏற்றிய பின் விளக்கு அதுவாக எரிந்து முடியணுமா?அல்லது நாம் குளிர வெக்கணுமா?

ஹாய் usakaveri நலமாப்பா? தீபம் நாம் தான் குளிர வைக்கனும். ஏற்றி 10 நிமிடம் கழித்து குளிரவிடவும்.

அதுவாக எரியக்கூடாது.

இப்படி தான் எங்கள் வீட்டில் பொரியவர்கள் சொல்லுவார்கள்.

மற்ற தோழிகள் என்ன சொல்லுகிறார்கள் என்று கேட்ப்போம்!

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

வணக்கம் பிரபாதாமு
நலமா?வெகு நாள் ஆகிவிட்டது உங்களுடன் பேசி.என்னெ ஞாபகமிருக்கிறதா?
விளக்கிற்கு 2திரி போடணும் என்று சொல்லுகிறார்கள்.அப்படியா?


ஊருக்கு மின்னாடி வெளக்கேத்தினா ஒசந்த குடி ஆவான்னு
என் மாமியார் அடிக்கடி சொல்வா.நான் காத்தால 5 மணிக்குள்ளயும்
சாயங்காலம் 5 மணிக்குள்ளயும் வெளக்கேத்திடுவேன் தெரியுமோ?

அப்பறம் வெளக்கு ஏத்தினதும் அதுக்கு பால்,கல்கண்டு,கிஸ்மிஸ்,பழங்கள் இப்படி எதுவும் இல்லேனா பானகம் வெச்சாவது நேவேத்தியம் பண்ணனும்.பானகம் அம்பாளுக்கு ரொம்ப புடிக்கும்.

வெளக்க நாமதான் ‘குளிர’ வைக்கணும்.அதா குளிர படாது. ’பூ’வால குளிர வெக்கலாம். இல்லேனா ‘விசிரி’ய கொண்டு விசுரலாம்.
இதெல்லாம் என் மாமியார் நேக்கு சொன்னது.
நான் இதைதான் ஃபாலோ பண்ணிண்டு வரேன்.

சாயங்காலம் வெளக்கேத்தினதும் ‘விளக்கே திரு விளக்கே’ ஸ்லோகம் சொல்லறது ரொம்ப விசேஷம்.
வெளக்கு ஏத்தி அரை மணிநேரமாவது அது எரிஞ்சுண்டிருக்கனும்.
’வெளக்கு எரிய எரிய வீடு நெறயும்’னு என் மாமியார் சொல்வா.
நல்லெண்ணேலதான் வெளக்கு ஏத்தனும்.கடலை எண்ணெய்,சன் ஃப்ளவர் ஆயில்
இதுலயெல்லாம் வெளக்கேத்த படாது.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...


காவேரி,
குத்து வெளக்குக்கு ஒரு முகமும் ஏத்தலாம்,இரண்டும் ஏத்தலாம்.இரண்டு திரி போட்டு
ஏத்தினா ரொம்ப நல்லது.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

நான் விளக்கேற்றிய பிறகு விளக்கின் விளிம்பின் வெளியே எண்ணெய் சிறிதாக கீழே விழுகிறது.ஏன் அப்படி?
நாம் period ஆன பிறகு எத்தனாவது நாளில் விளக்கேற்றலாம்?தினமும் விளக்கேற்றுவீர்களா?கறி சாப்பிட்டு அந்த நாளில் விளக்கேற்றலாமா?


//நான் விளக்கேற்றிய பிறகு விளக்கின் விளிம்பின் வெளியே எண்ணெய் சிறிதாக கீழே விழுகிறது.ஏன் அப்படி?//

சில குத்து விளக்கேத்தும் போது இந்த மாறி ப்ரச்சனை வ்ர்ரது சகஜம்தான்.
நீங்க ஒன்னு பண்ணுங்கோ.ஆணிக்கு போடற நட்டுன்னு கேட்டா கடேல தருவா.
அதை திரிய போட்டுட்டு அதுக்கு மேல நட்ட போட்டு ஏத்தினா எண்ணெய் சொட்டாது.(நட்டு பித்தளைல இருந்தா ரொம்ப நல்லது)

//நாம் period ஆன பிறகு எத்தனாவது நாளில் விளக்கேற்றலாம்?தினமும் விளக்கேற்றுவீர்களா?கறி சாப்பிட்டு அந்த நாளில் விளக்கேற்றலாமா?//

period ஆனதுலேந்து 5ஆம் நாள் எண்ணை தேச்சு குளிச்சுட்டு அப்பறம் விளக்கு ஏத்தலாம்.
நம்மால் ஏத்த முடியாத ’அந்த’ 4 நாளும் வேறு யாரையாவது ஏத்த சொல்லலாம்.நாங்க ’பிராமின்’. அதனால கறி சாப்பிடறதில்லை.
எங்காத்ல தினமும் வெளக்கேத்துவோம்.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி

ரொம்ப அழகா சொல்றேளே..... எப்படி மாமி காத்தால 5 மணிக்கு எழுந்துக்கறேள். எனக்கு முடியல மாமி. என் ஆத்துக்காரா் ஆபிஸ் விட்டு வர்றதே 10 அல்லது 11 மணி ஆயிடுறது. அதனால துாங்க 12 ஆயிடுறது. எனக்கும் டெய்லி காத்தால சீக்கிரம் எழுந்துக்கனும்னு ஆசையா இருக்கு.... இவ்ளோ சீக்கிரம் எழுந்துண்டு எப்படி உங்களால மேனேஐ் பண்ண முடியறது. நைட் சீக்கிரமாவே துாங்கிடுவேளா...... எனக்கு கொஞ்சம் சொல்லிக்கொடுங்கோ மாமி....... நீங்க சொன்ன எல்லாத்தையும் பாலோ பண்ணின்டு இருக்கேன் நானும். ஆனா இந்த காத்தால 5 மணி தான் முடியமாட்டேங்குறது. advice pls mami

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மோகனா மாமி நீங்க காத்தால எழுந்து விளக்கேதும் பொழுது ஸ்லோகம் சொல்லுவிங்கனு சொன்னேள் அந்த ஸ்லோகம் பற்றி கூறுங்கள், விளக்கை வீட்டு வாசலிலும் ஏற்ற வேண்டுமா? இல்லை உள்ள எத்தினா போதுமா?

அன்புடன்
நித்யா

விளக்கே திருவிளக்கே வேதமுடன் நற் பிறப்பே
ஜோதி விளக்கே ஸ்ரீதேவி பெண்மணியே
அந்தி விளக்கே அலங்கார நாயகியே
காந்தி விளக்கே காமாட்சி தாயாரே
பசும் பொன் விளக்கு வைத்து பஞ்சு திரி போட்டு
குளம் போல நெய்விட்டு கோலமுடன் ஏற்றினேன்
ஏற்றினேன் நெய் விளக்கு எந்தென் குடி விளங்க
வைத்தேன் திருவிளக்கு மாளிகையில் நான் விளங்க
மாளிகையில் ஜோதியுள்ள மாதாவை கண்டு கொண்டேன்
மாங்கல்ய பிச்சை மடி பிச்சை தாரும் அம்மா
சந்தான பிச்சையுடன் தனங்களையும் தாரும் அம்மா
பெட்டி நிறைய பூஷணங்கள் தாருமம்மா
பாட்டி நிறைய பால் பசுவை தாருமம்மா
அல்லும் பகலும் என் அண்டையிலே நிலுமம்மா
சேவித் தெளிந்து நின்றேன் தேவி வடிவம் கண்டேன்
வஜ்ர கிரிடம் கண்டேன் வைடுரி மேனி கண்டேன்
முத்து கொண்டை கண்டேன் முழு பச்சை மாலை கண்டேன்
சபரி முடி கண்டேன் தாழ் மடல் சூடக் கண்டேன்
பின்னல் அழகு கண்டேன் பிறை போல நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவும் கண்டேன்
கமல திரு முகத்தில் கஸ்தூரி பொட்டும் கண்டேன்
காலில் சிலம்பு கண்டேன் காலாழி பீஃலீ கண்டேன்
மங்கள நாயகியே உன்னை மனம் குளிர கண்டு மகிழ்ந்தேன்
அன்னையே அருந்துணையே அருதில் இருந்து காரும் அம்மா
வந்த வினை அகற்றி மகா பாக்யம் தாரும் அம்மா
தாயாரே உந்தன் தாழடியே சரணம் என்றேன்
மாதவே உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்
தந்தையும் தாயும் நீயே தற்காக்கும் ரட்சகி நீயே
அன்பருக்கு உதவும் நீயே ஆதாரமும் நீயே
உன்னை உறவாக நம்பி உற்றாரை கைவிட்டேன் தாயே
சந்தான சௌபாக்யம் தந்து சத்துக்கள் சேவை எனக்கு அளிப்பாய்
பக்தியுள்ளமனம் எனக்கு தந்து பரதேவி கிருபையுடனே அருள்வாய்

மாமி இந்த பாட்டு சரியா? இது தானே நீங்க சொன்ன திருவிளக்கு ஸ்லோகம். என் அம்மா இந்த பாட்டு பாடிருக்கா....

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி


ஒங்களைதான் என் மாமியாரா நெனச்சு நேத்தைக்கெ சமையல் செய்யபேட்டென்.

எங்க மாமியார் சொன்னாப்லயே ரொம்ப அழகா அந்த ஸ்லோகத்தை சொல்லிட்டேளே!

ரொம்ப சமத்து!

ஆனா இதை சாயாங்காலம் வெளக்கேத்தும் போதுதான் சொல்லணும்னு சொல்லிருக்கா.
மத்தபடி காத்தால வெளக்கெத்திட்டு ‘ச்ர்வே லோகான் ஸுகினோ பவந்து’னு 3 தரம் சொல்லிட்டு ‘சர்வ ம்ங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாத்கே சரண்யே த்ரி அம்பிகே நாராயணி நமோஸ்துதே’னு சொல்லி ந்மஸ்காரம் பண்ணுங்கோ.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்