புதிதாக ஒரு company ஆரம்பிக்க கருத்தும் உதவியும் தாருங்கள் தோழிகளே

எங்களுக்கு ஒரு rice mill இருக்கிறது. எங்கள் வீட்டில் தற்போது 3 பேரிடம் Business Registration (BR) இருக்கிறது. எங்களுக்கு ஒரு Company தொடங்க வாய்ப்பிருப்பதால் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு idea இருக்கிறது. என் கணவரின் அண்ணா ஒரு Kist Agency யும் என் கணவர் ஒரு agency யும் தற்போது செய்து வருகிறார்கள். என் கணவரின் அண்ணா சொல்கிறார் தீப்பெட்டி அல்லது ஊதுவர்த்தி company நடத்தலாம் என்று. ஆனால் எனது idea எங்கள் rice mill இல் rice, மிளகாய் தூள், துண்டு மிளகாய், வறுத்த மல்லி தூள், மஞ்சள் தூள் எல்லாம் இருப்பதால் அவற்றை கொண்டு ஏதாவது business செய்யலாம் என்பது. தோழிகளின் கருத்தும் உதவியும் என்றும் எங்களுக்கு இருப்பதால் உஙளிடமும் உதவி கேட்கலாம் என்று வந்திருக்கிறேன்.


ஒடனே வாங்கோ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...


ரைஸ் மில்ல அரைக்கறத வெச்சு பிஸ்னஸ் பண்றது நல்லதுன்னு நெனைக்கறேன்.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

இனியொரு பணி செய்வோம் -ல பொய் சீதாலெட்சுமி மேம் கிட்ட கேளுங்க. சரியான வழி சொல்லுவாங்க.

அன்புடன்,
இஷானி


சரியான பதில். இதை இதைதான் நான் எதிர் பாத்தேன்.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

Thanks friends

Lalitha

lalitha
நர்ன் தமிழரசி
எப்பொழுதும் ஒரு துறையை தேர்ந்தெடுக்கும்பொது அதிக கவன்ம் தேவை .அந்த துறையில் எற்கனவெ அனுபவம் மிக்கவர்களிடம் பல முறை கேட்டு தெரிய வென்டும்.நீங்கள் கூரியிருக்கும் தொழில்கள் எர்கனவெ நிரைய பேர் branded ka செய்கின்ரனர்.என்வெ முதழில் அன்த பொருலை marketing செய முடியுமர் என பர்ருஙகள்.இல்லையெனில் தகுந்தமதிரி செயுங்கலென்.நிரைய தொழில் புத்த்கங்கள் கிடைக்கின்றன்.மற்றும் இண்ய் தள்த்தில் நிரய செய்திகள் உள்ளன.என்னுடய கருத்து நீங்கள் புதிய துறையினை தேர்ந்து எடுப்பது நலம்.ALL THE BEST FOR YOUR NEW BUSINESS

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

அன்பு லலிதா சுபானந்தன்

பிஸினஸ் ஆரம்பிக்கறதைப் பற்றிக் கேட்டிருக்கீங்க. முதலில் எனது வாழ்த்துகள்.

ஏற்கனவே சகோதரர்கள் அனைவருக்கும் நல்ல அனுபவம் இருக்கும்னு நினைக்கிறேன். இருந்தாலும் நீங்க கேட்டிருக்கறதால எனக்குத் தோன்றும் விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

ஊதுபத்தி, தீப்பெட்டி முதலியவற்றை உற்பத்தி செய்து, பின் விற்பனைக்கு அனுப்பப் போகிறீர்களா அல்லது FINISHED GOODS வாங்கி, DISTRIBUTE செய்யப் போறீங்களா?

மார்கெட்டிங் மற்றும் DISTRIBUTION என்றால் ரொம்ப யோசிக்கவே வேண்டாம். இரண்டுமே FAST MOVING மற்றும் ESSENTIAL பொருட்கள்தான். தாராளமாக உடனே ஆரம்பிக்கலாம்.

ஒரே பிராண்டுக்கு மட்டும் ஹோல் சேல் DISTRIBUTOR ஆக இருந்தால், லாபத்துக்கான மார்ஜின் நன்றாகவே இருக்கும். அல்லது ஒரே பொருள்-நிறைய பிராண்ட்கள் என்றாலும் கஸ்டமர்கள் நிறைய பேர் கிடைப்பார்கள்.

பொருட்களை ஸ்டோர் செய்து கொள்ள இட வசதி, சப்ளை செய்ய வாகனம் மற்றும் ஆட்கள் போன்றவற்றை கவனித்துக் கொள்ளுங்கள்.

நீங்களே MANUFACTURING UNIT ஆரம்பிக்கப் போறீங்க என்றால்,

ஃபாக்டரி ஆரம்பிக்கப் போதுமான இடம்,
மிஷினரிகள்,
பாதுகாப்பு ஏற்பாடுகள்,
தேவைப்படும் பணியாளர்கள்,
மூலப் பொருட்கள் எங்கிருந்து வரவழைப்பது, எத்தனை நாள் ஆகும்,
RAW MATERIALS TO FINISHED GOODS எத்தனை நாட்கள் ஆகும்,
ஆர்டர்கள் எடுப்பதற்கு மார்கெட்டிங் ஆட்கள்,
சப்ளை செய்வதற்கு உரிய போக்குவரத்து முறைகள்,
உங்களுக்கு மூலப்பொருட்கள் சப்ளை செய்கிறவர்களுக்கு நீங்கள் எத்தனை நாட்களுக்குள் பணம் கொடுக்க வேண்டும்,
உங்களுடைய கஸ்டமர்களுக்கு நீங்கள் கொடுக்க நினைக்கும் க்ரெடிட் வசதி, எல்லாவற்றையும் டிஸ்கஸ் செய்து, ப்ரொஜெக்ட் தயார் செய்து கொண்டு ஆரம்பியுங்கள்.

ரைஸ் மில் பற்றி உங்களுக்கு இருக்கும் ஐடியாவும் ரொம்ப நன்றாக இருக்கிறது.

உணவுப் பொருட்களுக்கு மட்டும் எப்பவுமே மார்க்கெட் சிறப்பாகத்தான் இருக்கும்.

பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு, மசாலாப்பொடி வகைகள், இவையெல்லாம் இன்று எத்தனை பிராண்ட்கள் வந்தாலும் நன்றாகவே விற்பனையாகின்றன.

கைபடாமல், அரைத்து, பாக் செய்கிற மிஷினரிகள் கிடைக்கின்றன. உங்கள் முதலீடு எவ்வளவு என்பதை முடிவு செய்து, பின் மிஷினரிகள் வாங்கலாம். அல்லது, பணியாளர்களைக் கொண்டும் சுத்தமான முறையில் பாக் செய்யலாம்.

நல்ல பாக்கிங், நீடித்திருக்கும் ஷெல்ஃப் லைப், இவையெல்லாம் மக்களைக் கவரும் மிக முக்கியமான அம்சங்கள்.

ஆர்டர்கள் எடுப்பதற்கு நல்ல மார்கெட்டிங் பணியாளர்கள் தேவை. சொன்ன தேதியில் பொருட்களை டெலிவரி கொடுக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

மார்க்கெட்டிங் பணியாளர்களை நிறைய FEEDBACK கலெக்ட் செய்து கொண்டு வரும்படி சொல்லுங்கள்.

அதாவது, ஒவ்வொரு கடைக்காரரும்(கஸ்டமரும்) ஒவ்வொரு விஷயம் சொல்லுவாங்க. அந்தக் கம்பெனியில் இத்தனை நாட்கள் க்ரெடிட் தருகிறார்கள், இந்தக் கம்பெனியில் விற்காத பொருட்களை இத்தனை நாட்களுக்குள் எடுத்துக் கொள்கிறார்கள், - இந்த மாதிரி.

இதைத் தவிர – END USERS எனப்படும் உபயோகிப்பாளர்கள் தரும் FEEDBACK ரொம்ப முக்கியம். நீங்கள் தரும் சமையல் பொருள் அவங்களுக்கு எந்த அளவுக்கு திருப்தியாக இருக்கிறது, இன்னும் என்ன மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள் என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். இதுவும் உங்கள் பிஸினஸின் முன்னேற்றத்துக்கு ரொம்ப உதவியாக இருக்கும்.

நீங்கள் தொடங்கும் பிஸினஸ் வெற்றிகரமாக நடப்பதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்!

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

லலிதா புதிய பிஸினஸ் ஆரம்பிப்பதைப் பற்றி யோசனை கேட்டிருந்தாங்க. எனக்குத் தெரிஞ்ச சில சிந்தனைகள இங்கே சொல்லியிருக்கேன். மற்ற தோழிகளும் அவங்களுக்குத் தெரிஞ்ச யோசனைகளை இங்கே லலிதாவுக்கு சொன்னால், அவங்க முடிவெடுக்க வசதியாக இருக்கும், இல்லையா?

ஏன் இதை சொல்றேன்னா, பாங்க் எக்ஸாம் பற்றி என்கிட்ட ஒரு தோழி கேட்டப்ப, நான் ஜெனரலாகத்தான் பதில் சொல்லியிருந்தேன். அதுவே இங்கே ஒரு தனி இழையில், பாங்க் வேலை வாய்ப்பைப் பற்றி அனுபவம் நிறைந்த தோழிகள், நல்ல நல்ல யோசனைகளை சொல்லியிருந்தாங்க. நிறைய இன்ஃபர்மேஷன் கிடைச்சுது.

அது போல இங்கேயும் நிறைய ஐடியாஸ் கிடைக்கும்னு நினைக்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

Thanks a lot friends

Lalitha

மேலும் சில பதிவுகள்