கெம்பு பச்சை கற்கள் பற்றி சொல்லுங்கள்

எனக்கு கெம்பு பச்சை நகை செய்ய ஆசை. ஆனால் அதை பற்றிய நாலேஜ் இல்லை. இந்த கற்கள் கிராம் கணக்கில் வாங்கனுமா, இல்லைஎன்றால் காரட் கணக்கிலா.எவ்வளவு விலை இருக்கும்.கம்மல் necklass செய்ய எவ்வளவு தேவை படும். இந்த கற்களுக்கும் ஜாதகம் பார்த்துதான் அணியவேண்டுமா.

சுந்தரி அக்கா
எனக்கு தெரியலக்கா, நான் இப்போதான் கேள்விபடறேன்.

அன்புடன்
பவித்ரா

இந்த கேள்வியை நான்கு மாதங்களுக்கு முன் நான் கேட்டது.இதை பற்றி யாருக்கும் தெரியவில்லை என நினைக்கிறேன்.அதனால் தான் பதிலே யாரும் போடவில்லை.இந்த நாலு மாதத்தில் இந்த கற்கள் பற்றி நான் தெரிந்து கொண்டதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.கெம்பு என்றால் ரூபி,பச்சை என்றால் எமரால்ட்.ஆந்திராவில் இந்த கற்கள் வைத்த நகைகளை பெண்கள் விரும்பி அணிகிறார்கள்.இது காரட் கணக்கில் தான் விற்கிறார்கள்.ஒருகிராம் கற்கள் வாங்கினால் அதில் 6 காரட் உள்ளதாக கணக்கு.ரூபி,எமரால்ட் பல ஷேட்களில் வருகிறது.இது அணிய ராசி பார்க்க அவசியமில்லை.இவ்விரண்டு கற்களும் ஒரே விலையில் தான் விற்கப்படுகின்றன.ஒரு காரட் ரூபி,எமரால்ட் கற்கள் 450 ரூபாயிலிருந்து விற்கப்படுகின்றது.இவை வித விதமான வடிவங்களிலும் நகைகளில் பதித்து கொள்கிறார்கள்.அடுத்த தடவை ஏதாவது நகை செய்யும் போது இந்த கற்களை பயன்படுத்தி செய்து கொள்ளுங்கள் தோழிகளே பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது.(தங்கம் விற்கும் விலையில் நகை செய்வது பற்றி கூறுகிறாளே என நீங்க திட்டுவது காதில் விழுகிறது. விடு ஜுட்)

இதன் நிறம் பற்றி கூறமறந்துவிட்டேன்.ரூபி டார்க்மெரூன்,பிங்க்,சிகப்பு போன்ற கலர்களிலும்,எமரால்ட் விதவிதமான பச்சை ஷேட்களில் இருக்கிறது.

சுந்தரி அதான் சுகன் ஒரு நல்ல செய்தி சொல்லி இருக்காங்களே டிசம்பர் மாதத்தில் தங்கம் விலை குறைய போகுதுனு அப்போ செய்துடலாம்.
சுந்தரி நீங்கள் சொல்லும் கற்களை பற்றி தெரியாது ஆனால் நீங்கள் சொல்வதை பார்த்தால் டான்ஸ் புராம்லலாம் போட்டுகிட்டு வருவாங்களே temple jewellery அதுவா இல்லை அது வேறா?

நீங்க சொல்வது சரிதான் temple jewelleryயில் பதித்திருக்கும் அதே கற்கள் தான்.ஆனால் அது கொஞ்சம் ஹெவி நகைகள்.சிம்புலா நாம் செய்யும் நெக்லஸ்,ஹாரம்,கம்மல் ,வளையல் அனைத்திலும் இந்த வகை கற்களை பதித்துக்கொள்ளலாம்.அருமையாக இருக்கும்.நான் மாங்காய் மாலையில் இக்கற்களை பதித்து செய்துகொண்டேன் அழகாக இருக்கிறது.

ஆனால் சுந்தரி எப்போதுமே தங்கமாக வாங்கினால் தான் சுந்தரி அதை திருப்பி கொடுக்கும் போது மதிப்பு அப்படியே இரூக்கு அல்லது கூட குறைத்தல் வரும். கல் நகைகளுக்கு அவ்வளவாக விலை போவதில்லை அதனாலேயே கல் நகைகளில் காசை போட மனசு வரமாட்டேங்குது. எனக்கு அந்த கற்களில் சிவப்பு அல்லாமல் மெரூன் அல்லாமல் ஒரு கலர் இருக்கும் ஒரு மாறி பிங்க் என்று நினைக்கிறேன். அது ரொம்ப பிடிக்கும். பார்க்கலாம் தங்கம் விலை குறைந்ததும் தான் ஏதாவது யோசிக்கனும் சுந்தரி.

மேலும் சில பதிவுகள்