பச்சரிசி ஓலை பக்கோடா

தேதி: April 9, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - ஒரு கப்
பொட்டுக்கடலை - 8 ஸ்பூன்
சோடா உப்பு - 2 சிட்டிகை
டால்டா - 2 டீஸ்பூன்
ஓமம் - ஒரு ஸ்பூன்
பெருங்காயப்பவுடர் - அரை ஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 கை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு


 

பச்சரிசியை 2 மணி நேரம் நீரில் ஊற வைத்து, வடித்து, இடித்து சலிக்கவும்.
பிறகு அதை வெறும் வாணலியில் வறுக்கவும்.
சற்று பழுப்பு நிறம் வந்ததும் இறக்கி ஆற வைக்கவும்.
பொட்டுக்கடலையை மாவாக்கவும். தேங்காயை பூந்துருவலாகத் துருவிக் கொள்ளவும்.
அனைத்துப் பொருட்களையும் தேவையான உப்புடன் கலந்து பிசைந்து சூடான

எண்ணெயில் ஓலை பக்கோடாவாக பிழியவும்.


மேலும் சில குறிப்புகள்