கொஞ்சம் அரட்டையை தள்ளிட்டு பட்ஜெட் போடுங்கப்பா ப்ளீஸ்

அன்புள்ள அறுசுவை அங்கத்தினரே. நான் இப்படி தலைப்பு கொடுத்ததற்கு யாரும் கோபப்படவேண்டாம். நம்ம அறுசுவை ல அரட்டை அபாரமா இருக்கு. பல திறமைசாலிகள் அதில் இருக்கறீங்க. உங்க ஆலோசனை எல்லாருக்கும் வேணும்னு தான் இப்படி தலைப்பு குடுத்தேன்.
சரி நான் விஷயத்துக்கு வர்றேன். பொதுவாகவே எல்லாருக்கும் தலைய பிச்சுக்க வைக்கிற விஷயம் என்றால் அது பட்ஜெட் தான். அதுவும் இப்ப விக்குற விலைவாசிக்கு சொல்லவே வேண்டாம். இதில் எப்படி வாடகை, கரண்ட் பில், போன் பில், கேஸ் போன்ற அத்தியாவசிய தேவைகளுடன் எப்படி பட்ஜெட் போடலாம்னு ஒரு சின்ன மாதிரி விளக்கம் கொடுத்தால் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்.
அனுபவசாலிகள் தயவு செய்து பதில் தரவும். எனக்காக மட்டும் அல்ல. நமது அறுசுவை தோழர்கள், தோழிகள் பலருக்கும் இது உதவியாக இருக்கும்னு நினைக்கிறேன்.
ஒழுங்கா வந்து போட்டி போட்டுகிட்டு சமத்தா இதுல பதில் போட்டுடனும். இல்லாடி ஆமினாஅக்கா கிட்ட சொல்லி எல்லாருக்கும் அடி குடுக்க சொல்லுவேன். :)


பட்ஜெட் போட்டு குடும்பம் நடதறாவாள பாத்திமா கூப்பிடராங்கோ!

நேக்கு ஆம்ஸ்கிட்டேருந்து நன்னா அடி விழபோறது.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

என்ன பா என் பேர் அடிபடுது.அதுவும் அடுத்தவங்கள அடிக்கிறதுக்கு!

அழகான தலைப்பு. பாராட்டாம இருக்க முடில.
வாழ்த்துக்கள்!
மத்தவங்க வரட்டும். வந்த பிறகு நான் என் பட்ஜெட் சொல்றேன்.

பி.கு-
இந்த தலைப்பை பாத்த பிறகு எனக்கே அரட்டைக்கு போக பயமா இருக்கு:(

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆஹா மாமி நேக்கு ரொம்ப சந்தோஷம். சமத்தா வந்துடேள். வெரி குட்.

ஆமினா அக்கா உங்க பேரை சொன்னதான் எல்லாரும் ஒழுங்க வந்து அடென்டன்ஸ் போடுவாங்க ( ஆமினா பேர சொன்னா சும்மா அதிறும் ல [ஹி ஹி ஹி ஹையோ ஹையோ]) அதான் அப்படி குடுதேன். :-) சீக்கிரம் வந்து பட்ஜெட் போடுங்கப்பா?

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

ஃபாத்திமா இதைப்பற்றி அனுபவசாலியான மனோகரி மேடம் நல்ல குறிப்புகள் கொடுத்திருக்காங்க. இந்த லின்க் பாருங்க
http://www.arusuvai.com/tamil/node/4454

சிக்கனமா இருக்க இந்த லின்க் பாருங்க
http://www.arusuvai.com/tamil/node/11838

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஃபாத்தி

நலமா?
அப்பாடா ஒரு வழியா வந்து ஒரு இழை ஆரம்பிச்சிடீங்களா ? பட்ஜெட் பற்றி ஏற்கனவே இருக்கு. நான் சொல்லனும்னு நினைச்சேன்.கவி சொல்லிட்டாங்க.. விஷயம் ஒன்னுமில்லாம பின்ன ஏன் பதிவு போட்டேனு கேக்றது தெரியுது ;).. நம்ம ஃபாத்தி தொடங்கினத பாத்துட்டு சும்மா போக முடியல அதான் .;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இதையும் பார்த்துடுங்க
http://www.arusuvai.com/tamil/node/4831

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஆஹா அருமை நான் தான் மனோஹரி மேடம் டிப்ஸை பாக்காம விட்டுடேன். அட்மின் அண்ணா மன்னிக்கவும். ரம்யா, கவி இருவருக்கும் மிக்க நன்றி.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

பட்ஜெட்
அருமையான தலைப்பு,
நான் எப்படி மெயின்டெயின் செய்வேன் என்றால், சம்பளம் வந்தவுடனேயே கரண்ட் பில் முதல் சமையல் தேவை வரை தேவை என்று கருதும் பணத்தை தனியாக வைத்து அதில் இருந்து தான் செலவு செய்வேன்.

மேலும், கம்ப்யூட்டரில், EXCEL SHEET-மாதாமாதம் மெயின்டெயின் செய்கிறேன். அதில் கையிருப்பு மற்றும் பேங்க் பேலன்ஸ் கூட தெரியும். அதை நானே reconcile செய்து பார்த்து விடுவேன்.

இன்னும் நிறைய இருக்கு, எல்லோர் பதிவையும் பாத்துட்டு பதில் போடறேன் பாத்திமா

அன்புடன்
பவித்ரா

ஹாய் பாத்திமா நல்லா இருகீங்களா? உங்க தலைப்பு ரொம்ப நல்ல தலைப்பு. எங்க வீட்ல என் கணவர்தான் பட்ஜெட் போடுவாங்க, எனக்கு மதாமாதம் ஆகும் செலவை கணக்கில் வைத்துக்கொள்வது தான் என் வேலை, அதற்க்கு நான்(Balance sheet) தயார் செய்துவிடுவேன், அதில் தினசரி ஆகும் செலவை அவ்வபோழுது எழுதி வைப்பேன், அவர் எனக்கு கொடுக்கும் பணத்தை செலவு செய்தது போக மீதிப்பணத்தை வரவில் வைத்து செலவு செய்வேன் ரசீதுகளை(all sorts of bills) பாத்திரமாக வைத்து அதை credit card bills வரும் பொழுது ரசீதை வைத்து சரிபார்போம். இதர (பெரிய செலவுகளை) என் கணவர் EXCEL SHEET யில் குறித்துக்கொள்வார். நான் Balancesheetai tally செய்து விட்டு போன மாதத்திற்க்கும் இந்த மாததிற்க்கும் சரி பார்த்து செலவு செய்வோம்.
அன்புடன்
நித்யா

மனோmadam கொடுத்துள்ளதில் சுருக்கமாக
வீட்டு வாடகை--25%

சாப்பாடு-15%
கரண்ட் போன் நெட்--15%
வாகனம் லோன் பெட்ரொல்--15%
மருத்துவம்-5%
ஷாப்பிங்-5%
சேமிப்பு -20%from ur income u can make budget.u can alter as u needed.

மேலும் சில பதிவுகள்