அரட்டை அரங்கம் பாகம் 9

அரட்டை அரங்கம் பாகம் 9

ஷேக் அண்ணா நான் அடுத்த பாகம் ஆரம்பிச்சுட்டேன். உங்கள காலையில இருந்து கூப்பிடுறோம் ஆளைக்காணோம். நீங்கள் வராத காரணத்தினால் நான் ஆரம்பிக்கிறேன். தவறாக இருந்தால் ஸாரி.....

எல்லாரும் வந்து அரட்டைய ஆரம்பிங்க பார்ப்போம். மெகா சீரியல் பகுதி -- 9 இங்கு ஆரம்பம்.
<!--break-->

உங்கள் மழலையை ரசித்தால்.. என்ன நீங்க!!
இங்கு ஒருவரும் உங்களைத் திட்டவில்லை. சாப்பிட்டு விட்டு வாங்க. காத்துக் கொண்டு இருக்கிறேன்.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

சொல்லுங்க அமினா மேடம்,
நீங்க சொல்ல்றதை கேட்க காத்துக்கொண்டிருக்கிறேன்

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

தமிழ் தப்பாக இருந்தாலும் தமிழிலேயே பதிவு செய்வதற்கு வாழ்த்துக்கள். உங்களுக்கு அந்த துணையெழுத்து போடறதுதானே பிரச்சினை

'க' ன்னு எழுத ka டைப் பண்ணுவீங்கள்ல. 'கா'னு எழுத kaa ன்னு டைப் பண்ணுங்க. இதுபோல்தான் மற்ற எழுத்துக்களுக்கும். புரிஞ்சுதா இல்லேன்னா தயங்காம கேளுங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

தமிழரசி

'ர்’ பிரச்சனை எதனால் என்று கொஞ்சம் புரிகிறது. அ,ஆ இதுல உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது. ஏன்னா அதுக்கு துணைக்கால் தேவையில்லை. கா,சா போடுவதில் தான்னே சிக்கல்!

'க' என்றால் ka போடுவீங்க சரிதானே!
'கா' என்றால் kaaஅதாவது டபிள் போடனும்.
அதுபோல் தான் மற்ற எழுத்துக்களுக்கும். நீங்கள் அதை போட தெரியாமல் தான் ’ர்’ போடுறீங்கன்ணு நினைக்கிறேன்.சரியா?
வேறுபிரச்சனை என்ன என்று சொன்னீங்கன்னா நான் உதவி பண்ணுவேன். எந்த எழுத்துக்கள் உங்களுக்கு பிரச்சனையா இருக்குன்னு சொல்ல முடியுமா?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆஷிக் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. உங்கள் கிண்டலும் கேலியும் சம்பந்தப்பட்டவர்கள் மனம் புண்படாமல் இருந்தால் நல்லா இருக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

தமிழ்! இம்ப்ரூவ்மெண்ட் தெரியுது....விடாதீங்க கமான் கீ ப் இட் அப்...
கிண்டல் பன்னியதால் வைராக்கியம் வந்துருச்சு பாருங்க.
மீண்டும் வாங்க
அன்புடன்
ஆஷிக்

//ஆமினாவிடம் நீங்கள் வம்பிழுப்பதை பல முறை படித்து சிரித்திருக்கிறேன்.//
என்ன ஒரு ரசனை. ஒரு ஆளை இன்னொரு ஆள் வம்பிழுக்குறத பாத்து இவங்கல்ளாம் சிரிக்கிறாங்களாம். என்ன கொடுமைடா சாமி.....

//ஆமினா எனக்கு இன்னொரு அண்ணன் கிடைச்சாச்சு//
உங்கலுக்கெல்லாம் அந்த அதிஷ்ட்டம் உடனே கிடைக்குது. நானும் பல தடவ ஆஷிக் அண்ணா அப்படின்னு கூப்பிட்டு பாத்துட்டேன். தங்கச்சின்னு சொன்னா வம்பிழுக்க முடியாதேன்னு வாயிலிருந்து வார்த்தையே வரல. கழுவின மீனில் நழுவின மீன் தான்:)

அண்ணான்னு கூப்பிட்டா தான் அண்ணா வா? கல்யாணம் ஆகி 5 வயசுல ஒரு குழந்தைக்கு அப்பாவை அண்ணான்னு கூப்பிடாம தம்பின்னு கூப்பிட்டா தான் ஆச்சர்யமே!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

OK AMINA, வம்பு இழுத்தது தப்புதான், அதுக்காக ராதாவ கோவிச்சுக்காதீங்க,
தப்பு நான் செய்ததுதான், இனி அது நடக்காது
GOOD BYE: ஆஷிக்

ஆமினா நான் மட்டும் இல்லை. இங்க ஒரு கூட்டமே படிச்சு சிரிச்சுகிட்டு தான் இருக்கு. அட்மினும் இதில் அடங்குவார் என்று நினைக்கிறேன். நம்ம என்ன பதிலுக்கு ஒன்னும் சொல்லாமலா போகப்போறோம். அப்பப்ப வந்து பதிலடி கொடுத்துகிட்டு தான இருக்கீங்க. ஊர் மானத்த காப்பாத்த வேண்டாமா.....

ஆஷிக் அண்ணா ஒருவா் மிகவும் அலுத்துப்போகிறார். சீக்கிரம் வந்து பதில் சொல்லுங்க......

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஹாய் ராதா ஹரி மேடம்..இதெல்லாம் ஒரு பிரச்சினையா?அறுசுவையில் மொத்தம் நான்கு அண்ணன்மார்கள் உள்ளனர் என்னையும் சேர்த்து...சோ டோன்ட் வோரி..இன்றிலிருந்து நீங்கள் என்னோட தங்கை....
தங்கச்சிக்கு சீமந்தம் தவிக்குது
ஏன் பந்தம்
உள்ளுக்குள்ள ஆனந்தம் உறுத்துது ஆதங்கம்
அம்மாடி தங்கச்சி
அண்ணன் மனம் புன்னாச்சி

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்