அரட்டை அரங்கம் பாகம் 9

அரட்டை அரங்கம் பாகம் 9

ஷேக் அண்ணா நான் அடுத்த பாகம் ஆரம்பிச்சுட்டேன். உங்கள காலையில இருந்து கூப்பிடுறோம் ஆளைக்காணோம். நீங்கள் வராத காரணத்தினால் நான் ஆரம்பிக்கிறேன். தவறாக இருந்தால் ஸாரி.....

எல்லாரும் வந்து அரட்டைய ஆரம்பிங்க பார்ப்போம். மெகா சீரியல் பகுதி -- 9 இங்கு ஆரம்பம்.
<!--break-->

ஆசிக்

நான் ஏதாவது தப்பா பேசிட்டேனா? சும்மா விளையாட்டுக்கு சொன்னதை ஏன் சீரியஸா எடுத்துக்குறீங்க?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அண்ணா

எனக்கு பையனே (4வயது) இருக்கான். மருமகனுக்கு தான் நீங்க பாட்டு பாடனும்.

அப்பாடி இன்னைக்கு எனக்கு 2 அண்ணன் கிடைச்சிருக்காங்க.... ஏற்கனவே தவமணி அண்ணா இருக்காரு..

அது யாருண்ணா 4வது அண்ணன்?

அண்ணா என்று கூறிவிட்டு எதற்கு ராதா ஹரி மேடம் எல்லாம்... ராதா என்றே அழைக்கலாம்.

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஆஷிக் அண்ணா ஏன் சீரியஸாகிட்டீங்க...

ஆமினா மனது புண்பட்டிருந்தால் எப்பவோ சொல்லிருப்பாங்க. அவுங்க அப்படி எல்லாம் நினைத்திருக்கமாட்டார்கள்.

நீங்க யாருடைய மனதையும் புண்படுத்தல. சொல்ற விஷயத்தை கொஞ்சம் கேலியோட சொல்றீங்க அவ்வளவுதான். அது ஒரு வேளை புதிதாக வந்தவா்களுக்கு சிறிது கஷ்டமாக இருந்திருக்கலாம். மற்றபடி அறுசுவையின் அனைத்து உறுப்பினா்களுக்கும் தங்களது கேலியும் கிண்டலும் தெரிந்ததே...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

எனக்கு எல்லாருமே தங்கச்சிதான்....அதுக்காக தங்கச்சி தங்கச்சினு ஓவரா வார்த்தைக்கு வார்த்தை பாசமழையெல்லாம் பொழியத்தெரியாது. எல்லாம் மனசுக்குள்ளே இருந்தா போதாதா என்ன?
இதுனாலதான் இப்பவெல்லாம் நான் Computer ஐ தவிர்த்து அதிகம் பேச ஆசைப்படல
நன்றி:ஆஷிக்

நான் யாரையும் எப்பவுமே குறை சொல்ல மாட்டேன். அது எனக்கு பிடிக்கவும் செய்யாது.நாம் அவங்க அவங்களுக்கு தெரிந்தவரையில் சரியா இருந்துக்கவேண்டியதுதான்.நாம் ஒவ்வொருத்தர்கிட்டே ஒவ்வொரு மாதிரி பழகுவோம்.எல்லார்கிட்டேயும் ஒரே மாதிரி பழகமுடியாது அது சும்ம டுபாக்கூர்.
எப்படி பழகுனாலும் அன்பும் நட்பும்தான் முக்கியம்.இதில் சர்ச்சை என்றால் மாத்தியோசிக்கனும் சரிதானே..
அன்புடன்
ஆஷிக்

எனக்கு நிறைய அண்ணன்ப்பா
காணாம் போன தவமணி அண்ணன்
கவிஞர் ஷேக்
பில் கேட்ஸ் ஆஷிக் அண்ணா,

ஆஷிக் அண்ணா, ஆமி பாவம்,

இதுல எல்லாருக்கும் மிக மிக பெரியவர் நம்ம தலை அட்மின் தான் ஹி ஹி ஹி

அன்புடன்
பவித்ரா

ஆமினா ஆஷிக் அண்ணா

என்னால் தேவையில்லாமல் உங்கள் இருவருக்கும் மனஸ்தாபம் வந்துவிட்டதா? நான் தான் காரணம் என்றால் மன்னித்துவிடவும். நான் ஏதோ விளையாட்டுக்கு கூறப்போக அது வேறு எதிலோ போய் முடிந்துவிட்டது.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி


ஆடி வெள்ளியும் அதுவுமா என்ன வார்த்தை சொல்லிட்டெள்!
அப்படிஎல்லாம் பேசபடாது.பேசினா நான் புது கவிதை சொல்லி
ஒங்களை பயமுரித்திடுவேன் தெர்யுமோ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

அவசரமான எச்சரிக்கை
அனைவரும் கேளுங்கள்
மாமி என்ற புலவி வந்துட்டாங்க
எல்லோரும் விடு ஜூட்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

இன்னுமா இந்த உலகம் என்னை நம்புது?
என்னை கவிஞன் என்று சொன்ன தங்கை ப்வித்ராவுக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஒ போஒடூஊஊஊஊஊஉ

உபயம்;மாமீஈஈஈஈஈஈஈஈஈஈ

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்