புவி வெப்பமயமாதலை குறைக்க முயற்சிக்கலாமே!

ஹாய் ப்ரெண்ட்ஸ் புவி வெப்பமயமாகுதுனு எல்லாரும் கவலை படுரோம். அதை முழுவதுமாக தடுக்க நிச்சயமாக நம்மால் முடியாது. ஆனால் நம் ஒவ்வொருவராலும் அதை கண்டிப்பாக குறைக்க முடியும். அதற்கு பல வழிகள் உள்ளன.
1. தண்ணீர் சிக்கனம்
2. மின்சார சிக்கனம்
3. எரிபொருள் சிக்கனம்
4. ப்ளாஸ்டிக் உபயோகம் குறைப்பது
இது ஏற்கனவே தெரிந்தது தானே இதற்கு ஒரு இழையானு கேக்குறீங்களா? இந்த நான்கு சிக்கன முறைகளிலும் உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்க. சிறு துளி தான் பெரு வெள்ளம். இது பணத்துக்கு மட்டும் இல்ல. புவி வெப்பமயமாதலுக்கும் பொருந்தும்.
எனக்கு தெரிந்த ஒரு சின்ன டிப்ஸ். அரிசி கழுவின தண்ணீரில் காய், கறிகளை கழுவலாம். இதனால் தண்ணியும் மிச்சம்.. சத்துக்களும் குறையாது.
அருகில் நடக்க கூடிய தொலைவில் உள்ள இடங்களுக்கு வண்டி வேண்டாம். இதனால் எரிபொருள் மிச்சம். உடலுக்கும் நல்லது.
உங்க வீட்டில் எதும் விழா என்றால் ப்ளாஸ்டிக் டீ கப் பதிலாக பேப்பர் கப் உபயோகிங்கள்.
இப்ப எல்லாம் நிறைய ப்ளாஸ்டிக் தட்டுக்கள் அழகாக வருகிறது. அதை கண்டு மயங்காமல் சில்வர் பொருட்களையே பயன் படுத்துங்க
இத போல எரிபொருள், மின்சாரம், ப்ளாஸ்டிக் உபயோக சிக்கனங்களை சொல்லுங்க என் புத்திசாலி தோழிகளே

இந்த தலைப்பில் ஏற்கனவே இழை இருந்தால் தோழிக்ள் தெரிவிக்கவும்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

வாகனங்கள் உபயோகத்தை குறைத்தாலே இந்த பிரச்சனையை ஒரளவாவது குறைக்க முடியும்.சைக்கிள் உபயோகத்தை அதிக படுத்தலாம்.உடல் பயிற்சியும் ஆச்சு எரிபொருள் சிக்கனமும் ஆச்சு.பள்ளிகலில் சுற்றுபுறசுழல் பற்றிய விழிப்புண்ர்வு மாணவர்கலிடையே ஏற்படுத்தவேண்டும்
.மரங்கள் நட வேண்டும்.


மொதல்ல ஒங்களுக்கு ஒரு தாங்க்ஸ்.(மொழி பெயர்ச்சி பண்ணத்துக்கு)
மொதல்ல நான் வர ஒத்தாசை பண்ணிய எல்லாருக்கும் தாங்ஸ்.(பக்தை கவனிக்க)

சரி விஷயத்துக்கு வரேன்.
(கால்லெலதான் நெனச்சேன்! நீங்க சொல்லிட்டிங்கோ!)
நமக்குள்ள என்ன ஒத்துமை பாத்தேளா!

என்னால முடிஞ்சது யூஸ் அண்டு த்ரோ பிளாஸ்டிக் பைக்கு நோ சொல்லிடுவேன்.
என் ஹெண்ட் பேக்ல எப்பவுமே 2 மஞ்ச பை இருக்கும்

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஹாய் REEM மற்றும் மாமி (எ) மோகனா ரவி.. (அட்மின் அண்ணா இந்த காபி, பேஸ்ட்க்கு உதைக்க வருவாங்களோ :) நலமா? பதிலுக்கு முதலில் இருவருக்கும் நன்றி. எதுக்கு மாமி தங்க்ஸ் எல்லாம் சொல்லின்டு இருக்கெள். நமக்குள்ள ஒத்துமைய நெனச்சா மனசுக்கு சந்தோஷமா இருக்கறது.
டாபிக்கை விட்டுடாதேல். நான் ஆரம்பிச்சா என்ன நீங்க ஆரம்பிச்சா என்ன தொடர வேண்டியது உம்ம பொறுப்பு. ஒருத்தரையும் விட்டுடாதீங்கோகோகோ.
எல்லாரையும் வழி சொல்ல சொல்லுங்கோ.

நமது வருங்கால் சந்ததிகள் வாழ சுகம் தர முடியாவிட்டாலும் புவி வெப்ப மயமாதலால் சோகம் தராமல் இருப்போம்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

ஃபாத்தி

நல்ல தலைப்பு..
1.என்னோட ஓட்டு எப்பவும் மரம் நடுவது தான். ;-)

2.அலுவலகத்தில் தேவை இல்லாமல் காகிதத்தை பயன்படுத்துவது, ப்ரின்ட் எடுப்பது போன்றவற்றை தடுக்கலாம்.

3.கடைகளில் கிடைக்கும் ப்ளாஸ்ட்டிக் பையை பயன்படுத்தாமல் எங்கு சென்றாலும் ஜூட் பிக் ஷாப்பர் பேக் எடுத்து செல்லலாம் .

4.ப்ளாஸ்ட்டிக், பேப்பர்ஸ்,பாட்டில், மின்சார சம்மந்தப்பட்ட பொருட்களை மறுசுழற்சிக்கு அனுப்பலாம்.

5.எரிப்பொருள்களை அதிகமாக பயன்படுத்தாமல் இருக்க முடியாதே ;-(.. முடிந்த வரை வாக்கிக், சைக்ளிங் மூலம் பக்கத்து கடைக்கு சென்று வரலாம்.

6.வாகன எஞ்சின்களை சரியான முறையில் சர்வீஸ் செய்து பயன்படுத்துவதால் தேவையில்லாத புகையை குறைக்கலாம்.

7.வீட்டில் பயன்படுத்தும் ஹீட்டர்களை 120 டிகிரி F க்கு கீழே பயன்படுத்தலாம்.

8.மழைக்காலம் தவிர மற்ற காலத்தில் வெளிக்காற்றில் துணிகளை உலர்த்துவதால் தேவையற்ற மின்சாரம் சிக்கனம் ஆகும்.

9.மற்ற மின்சார சம்மந்தப்பட்ட பொருட்களை ஆஃப் செய்ய மறக்காமல் இருத்தல். பயன்படுத்தாத் போது ப்ளக்கை கழட்டி விடுவது. ஃப்ளூரஸன்ட் பல்ப் பயன்படுத்தலாம்.

10.தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தலாம்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

டிப்ஸ் ரம்யா எப்படி இருக்கீங்கப்பா? நலமா? சூப்பர் டிப்ஸ் குடுத்துட்டீங்க. ரொம்ப தாங்க்ஸ். உங்க அறிவை இன்னும் முடிஞ்ச அளவுக்கு இங்க கொட்டுங்கோ பாக்கலாம். :)ரம்யா ஃப்ளூரஸன்ட் பல்ப் என்றால் என்ன? கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா? நாங்கள்ளாம் கொஞ்சம் ட்யூப் லைட் ஆக்கும்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

டிப்ஸ் ரம்யா "மின்சாரம் சிக்கனம்" கம்ப்யூட்டர் தேவை இல்லாமல் யூஸ் பண்றத குறைக்க நம்ம அரட்டை பாகத்தை மாதம் ஒன்னுனு குறச்சுடலாமா? :-) ஆஹா எல்லாரும் கம்போட வர்றாங்கப்பா. நான் கெளம்புறேன்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

1. தண்ணீர் மிச்சம் மிகவும் முக்கியம், சில பேர் பல் துலக்கும் போது பைபில் இருந்து தண்ணீர் தேவையில்லாமல் வரும், அதற்கு ஒரு மக் வைத்து உபயோகபடுத்தலாம்
2. குப்பைகளை தூக்கி எறியும் போது, அதற்காக உள்ள இடத்தில் எறிய வேண்டும், ஒருவர் ஒரு இடத்தில் குப்பையை கொட்டினால் உடனே, எல்லாரும் அங்கே குப்பை கொட்ட தொடங்கிவிடுகிறோம், இந்த செயலை தவிர்க்க வேண்டும்.

அன்புடன்
பவித்ரா

ஃபாத்தி

ஓடி வந்து அடி வாங்கிக்கோனா வாங்கிக்கப் போறேன். அதுக்காக இப்படி மானத்தை எல்லாம் வாங்கக் கூடாது.. ;-(
இப்படி கேள்வி கேட்பீங்கனு தெரிஞ்சிருந்தா பதிவே போட்டுருக்க மாட்டேன். ;-(

நார்மல் பல்பில் டங்ஸ்டன் இழை சூடாவதன் மூலம் வெளிச்சம் கிடைக்கிறது. அதனால் மின்சாரம் அதிக அளவில் சூடாக்க செலவிடப்படுகிறது.

ஃப்ளூரசன்ட் பல்ப் சிறியதாக , சுருள் வடிவிலும் விற்கப்படும் ஒன்று. இது பாஸ்பரஸ் கோட்டிங் உட்புறம் அமையப் பெற்றது. இரண்டு எலக்ட்ரோட்க்கு நடுவே உள்ள மெர்குரி வேப்பர்ஸ் மின்சாரத்தில் உட்படும் போது அல்ட்ராவைலட் போட்டோன்ஸ்களை வெளிவிடும். அது பாஸ்பரஸ் கோட்டிங்கில் இன்ட்ராக்ட் செய்து வெளிச்சத்தை கொடுக்கும்.
இது குறைவான ஹீட்டை கொடுக்கிறது. 15 வாட் ஃப்ளூரசன்ட் பல்ப் 60 வாட் சாதாரண பல்புக்கு இணை. மேலும் இது 4 லிருந்து 6 முறை சாதாரண பல்ப்பை விட மின்சாரத்தை சிக்கனபடுத்துகிறது.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)


ரம்யா நன்னா சொன்னாங்கோ!
அவங்க சொன்னா மாறி எங்காத்ல வாசல்ல மஞ்ச அரளி மரமும் கொல்லேல முருங்க மரமும் வெச்சுருக்கொம்.
இன்னைக்கு எங்காத்ல முருங்க காய் சாம்பார்தான்.
என் ஒதவியாள் அம்மா எனக்கும் ரெண்டு கொடுங்கோனு கேட்டு வாங்கிண்டு போனா. இப்போ சீசனே இல்லயாம். கடேல கிலோ 32 ரூபாயாம்.
’பச்சை கொடுத்தா பாவம் போகும்’னு என் மாமியார் அடிக்கடி சொல்வார்.
கொடுக்கறதுல இருக்கற சந்தோஷம் வேற எதுலயும் இருக்காது.

எங்காத்ல ஃப்ளூரசன்ட் பல்ப் போட்டிருக்கோம்.
அதுல வெளிச்சம் நன்னாருக்கும்.

நாங்க 6 வருஷத்துக்கு மின்னாடி இப்போருக்ற ஆத்துக்கு குடி வந்தோம்.
அப்போ எங்களுக்கு 500அடி ஆழத்லதான் தண்ணி இருந்தது ஆனா இப்போ எத்தனை அடி ஆழத்ல இருக்கும்னு நெனைக்கிறேள்.யோசிங்கோ அப்பறமா சொல்றேன்.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்