கர்ப்பகால விமான பயணம் பற்றிய உதவி

முதல் குழந்தை பிறந்து ஐந்து வருடம் கழித்து கடவுளின் அருளால் மீண்டும் கர்ப்பமாக உள்ளேன். முதல் மாதம். நான் வசிப்பது ஆமெரிக்காவில் ஆனால் விசா பிரச்சனைக்காக இந்தியா சென்று மூன்று வாரங்களில் திரும்ப வேண்டும். எந்த மாதத்தில் பயணிப்பது. மூன்று வாரங்களில் திரும்பவும் பயணப்படலாமா? அறுசுவை உறுப்பினர் பலர் பிற நாடுகளில் இருப்பதால், தங்களின் இத்தகைய அனுபவம், அதற்கு எடுத்துக் கொண்ட வழிமுறைகளை தயவு செய்து பகிர்ந்து கொள்ளவும். இங்குள்ள மருத்துவர் இரத்த கொதிப்பு இல்லாவிட்டார் பிராயாணம் செய்யல்லாம் என்கிறார்கள்,
செல்வி தங்கள் பெண் பேறுக்காக லண்டனில் இருந்து வந்ததாக சொல்லிருந்தீர்கள், தேவா மேடம் பேறு காலத்திற்கு மூன் பறந்ததாக முன்பு எழுத்தியிருத்தீர்கள் Please share your experience with me. I can't avoid travel, because it is my Visa probelm.

முதலில் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

என்னைப் பொருத்தவரையில் இரண்டாவது trimester ரொம்ப பாதுகாப்ப்பானது. தவிர்க்க முடியாத காரணம், உடனே சென்றாக வேண்டுமென்றால் முதல் trimester -ல் செல்லலாம். மூன்றாவது trimester -ல் தவிர்ப்பது நல்லது.
எனக்குத் தெரிந்தது இவ்வளவுதான். மேலும், அனுபவமுள்ளவர்கள் வந்து பதில் அளிப்பார்கள்.

அன்புடன்,
இஷானி

நன்றி இஷானி. வலைத்தளம் இதைத்தான் கூறுகிறது. பார்ப்போம் அனுபசலிகள் என்ன சொல்றாங்க

வித்யா... வாழ்த்துக்கள்.

இஷானி சொல்வது போல் முதல் 3 மற்றும் கடைசி 3 மாதம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அப்படி அவசியம் என்றால் பயணம் செய்யுங்க. ஆனா உங்க உடல் நிலையை பார்த்துக்கங்க. நல்லா வசதியா பயணம் செய்ய வழி செய்யுங்க. உங்களுக்கு வாந்தி, வலி ஏற்படுமா, எத்தனை மணி நேரம் பயணம், எத்தனை மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டும் என்றெல்லாம் பாருங்க. முடிந்தவரை விமானத்தில் அடிக்கடி எழுந்து ஒரு சின்ன நடை போட்டுவிட்டு வந்து உட்காருங்க. இடுப்பு வலி ஏற்படாம இருக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பயண நேரம் கொஞ்சம் அதிகம், அதுதான் பயமாக உள்ளது. இங்கு லாஸ் என்சலிஸ்சில் இருந்து 22 மணி நேரம் குறைந்தது. உங்கள் signature நல்லா இருக்கு, எனக்கு பதில் சொல்வதைப் போல்
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

வித்யா மேடம்,
உங்கள் பிரச்சினை புரிகிறது
வனிதா மேடம்,இஷானி மேடம் சொல்வது தான் உண்மை
ஜாக்கிரதையாக சென்று வாருங்கள்
நீங்கள் அவ்வாறு பயணம் செய்வதாக இருந்தால் நீங்கள் செல்லும் விமானத்தில் தக்க மருத்துவ உதவிகள் பெறுவது எப்படி என்ற விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்
short ட்ரிப் வழிகளை தேர்ந்து எடுங்க..எனக்கும் nearest இன்டர்நேஷனல் டெர்மினல் losangeles தான் நீங்க எங்க இருக்கீங்க

என்றும் அன்புடன்,
கவிதா

நன்றி கவிதா. நான் இருப்பது Torrance. நீங்க எங்கே இருக்கீங்க.

வித்யா மேடம்,
நான் இருப்பது santabarbara
3 மணி நேரம் பயணம்னு நினைக்கிறன்
நீங்க இங்க வந்தீங்கன்னா வாங்க

என்றும் அன்புடன்,
கவிதா

வாழ்த்துக்கள் வித்யா,

நான் என் இரண்டாவது குழந்தை கருவுற்று 1 மாதத்தில் இந்தியா சென்று 3 வாரங்களில் திரும்பி வந்தேன். திரும்பவும் பிரசவத்திற்காக 30 வாரங்களில் இந்தியா சென்றேன். எது செய்வதை இருந்தாலும் உங்களின் மருத்துவரின் ஆலோசனை கேட்கவும். உங்களின் உடல்நிலை செரியாக இருக்கிறது என்றால் பயணிக்கவும். மேலும் பிரசவ நேரத்தில் பயணம் குறித்து அறுசுவையில் நிறைய கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. அதையும் பார்க்கவும்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

இந்தப்பதில் எனக்கும் மிகவும் உபயோகமா இருக்கு! எனக்கு போன மாதம் (ஜூலை 19,2010) ல் தான் மாதவிடாய் வந்தது. அநேகமா 25ல் இருந்து 28 நாட்களுக்குள் வந்திடும் இன்றுவரை இன்னும் வரலை(ஆகஸ்ட் 20,2010) அதனால எதுவும் சொல்லமுடியாமல் இருக்கு. அடி வயிறு பயங்காரமா நோகுது/வலிக்குது திருமணமாகி 4 மாசம் ஆகுது. அடுத்தமாதம் இந்தியா போவதாக இருக்கு!

கன்பர்ம் பண்ணிக்கலைன்னாலும் இந்தப்பதில் எனக்கே எனக்குன்னு கடவுள் கொடுத்தமாதிரி இருக்கு.

அறுசுவையில் இருக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் வணக்கம்.

அடிக்கடி என் கடவுச்சொல்லை மறந்துபோறதால் வரமுடியிறதில்லை!.

பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா'

தங்களின் ஆலோசனைக்கு நன்றி. மருத்துவரை கலந்து முடிவு செய்கிறேன்.

மேலும் சில பதிவுகள்