இன்றைய தலைப்பு

இனிய காலை வணக்கங்கள் அனைவருக்கும்,இன்றைய தலைப்பு நகை அடகு வைப்பது குறித்து, நகை அடகு வைப்பது நன்றா? அல்லது விற்று விடுவது நன்றா? இன்றைய காலக்கட்டத்தில் இப்படி ஒரு வினாவா? என்று தாங்கள் கூறுவது,தெரிகிறது.என் கணவர் கூறுகிறார்.விற்றால் வட்டி மிச்சம்,அதில் புதிய நகை வாங்கலாம் என்று,நான் கூறுகின்றன். அது முடியாது.ஏனென்றால் வாங்க நினைக்கும் போது வேறு செலவு வந்துவிடும். எனவே வட்டி கட்டியாவது,நகையை மிட்டு விடலாம் என்று. தோழிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.

அன்பு ருக்ப்ரியா

நகைகளை பாங்க்ல அடகு வைக்கலாம். இந்தியாவில் எல்லா நேஷனைலைஸ்ட் வங்கிகளிலும் வட்டி ரொம்ப ரொம்ப குறைவு. 12% வருடத்துக்கு. மாதம் 1%தான் வட்டி. அப்ரெய்ஸர் சார்ஜ், போன்றவையும் ரொம்ப கம்மிதான். மாதா மாதம் ரெகுலராக வட்டியுடன் ஒரு சின்ன தொகை அசலுக்குக் கட்டினாலும் போதும். வெளியில் தனியாரிடம் கடன் வாங்கினால், வட்டி கட்ட கொஞ்சம் டிலே ஆனால் அந்த வட்டிக்கு ஒரு வட்டி கணக்கு போட்டு வாங்குவார்கள். பாங்க்ல நீங்க 10 ரூபாய் கட்டினால் கூட அதை வரவு வைத்துக் கொள்வார்கள். 20-25 வருடங்களுக்கு முன்னால் ஜுவல் லோன் தர ஆரம்பித்த புதிதில், அக்ரிகல்சர் லோன் மட்டும்தான், அதுவும் நில டாகுமெண்ட்ஸ், பட்டா நம்பர் என்று ஏகப்பட்ட டிடெயில்ஸ் தரணும். வாரத்தில் 2 நாள்தான் லோன் தருவார்கள். டோக்கன் ஸிஸ்டம், மக்கள் க்யூவில் நின்று நகை லோன் வாங்கினார்கள். இப்போ அப்படி எந்த சிரமமும் கிடையாது. எல்லா வேலை நாட்களிலும் ஜுவல் லோன் கிடைக்கிறது. வங்கிகளில் கூவிக் கூவி இந்த கடன் வசதி தர்றாங்க. வங்கிகளுக்கும் நகைக் கடன் தருவது மிகவும் சேஃப் ஆன விஷயமாக இருக்கு. இன்றைய தங்கத்தின் மதிப்பில், மூன்றில் ஒரு பாகம் கடனாக கிடைக்கும். இன்றைக்கு தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 1671 என்றால் 10 கிராம் தங்கத்துக்கு(16710 மதிப்புள்ள நகைக்கு) கிட்டத்தட்ட 5500 ரூபாய் லோன் கிடைக்கும். இதற்கு வட்டி என்று பார்த்தால் மாதம் 55 ரூபாய்தான் வரும்.

ஒரு வருடத்துக்குள் நகைக் கடனை அடைத்து, நகையைத் திருப்பணும். சரி, அப்படி முழுவதும் கட்ட முடியலை, ஓரளவுதான் அசலும் வட்டியும் கட்டியிருக்கீங்க என்றால், திரும்பவும் அந்த லோனை புதுப்பித்துக் கொள்ள முடியும்.(இதற்கு உங்க கிரெடிட் ஹிஸ்டரி நன்றாக இருக்கணும்)

ஒரு உதாரணம் சொல்கிறேன். 31/7/2009 அன்று தங்கம் ஒரு கிராம் விலை என்ன தெரியுமா? 1369 ரூபாய்தான். அந்த நேரத்தில் 10 கிராம் தங்கத்தின் பேரில் ஜுவல் லோன் வாங்கியிருந்தீங்க என்றால் உங்களுக்கு 4500 ரூபாய் கிடைத்திருக்கும். மாதம் 100 ரூபாய் இந்த லோன் கணக்கில் கட்டியிருக்கீங்க என்றால் ஒரு வருடத்தில் வட்டி தவிர்த்து அசலுக்கு 500 ரூபாய் கட்டியிருந்திருப்பீங்க. (இதெல்லாம் உத்தேசமான கணக்குதான்). இப்போ ஒரு வருடம் கழித்து, அதே லோனை RENEW செய்தால் உங்களுக்கு கிடைக்கும் லோன் தொகை 5500 ரூபாய்!. இதில் பழைய கடனுக்கு உண்டான பாக்கித் தொகை 4000 ரூபாயை கழித்துக் கொண்டு, உங்க கையில் 1500 ரூபாய் தருவாங்க. ஏனென்றால் தங்கத்தின் விலையேற்றம் அப்படி இருக்கு.

சரி, இதையே நீங்க தங்கத்தை விற்பதாக எடுத்துக் கொள்வோம். 916 மார்க் உள்ள தங்கம் என்றால்தான் நல்ல விலைக்குப் போகும். பெரிய நகைக் கடைகளில் தங்கத்தை விற்று, பணம் வாங்கிக் கொள்ள முடியாது. பழைய நகையைக் கொடுத்து, புதிய நகை மட்டுமே வாங்கிக்க முடியும். அதனால் கொஞ்சம் சிறிய நகைக் கடைகளில்தான் விற்க முடியும். அவங்க தங்கத்தின் தரம் பார்த்து, மிகக் குறைந்த பட்சமாக பத்து சதவிகிதமாவது அன்றைய விலையில் குறைத்துத்தான் எடுத்துக் கொள்வார்கள். 2009ல் 10 கிராம் தங்கத்தை 12000 ரூபாய்க்கு விற்கிறீர்கள் என்றால், 2010ல் அதே அளவு தங்கம் வாங்க உங்களுக்கு கிட்டத்தட்ட 17000 ரூபாய் தேவைப்படும். நீங்கள் பாங்க்ல கட்டும் வட்டியையும் தங்கத்தின் விலை வித்தியாசத்தையும் கம்பேர் செய்து பாருங்கள்.

புதிதாக தங்கம் வாங்க முடியலைன்னாலும் பரவாயில்லை, இருக்கும் தங்கத்தை விற்கவே விற்காதீங்க. அதுவும் மிக சுலபமாக குறைந்த வட்டியில் தங்கத்தின் பேரில் கடன் வாங்க முடியும் என்னும்போது ஜுவல் லோன் வசதியை பயன்படுத்திக் கொள்வதுதான் சிறந்தது.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

இந்த தலைப்பை பார்த்தேன்... லோன் போடுறது பெஸ்ட்'னு தோணுச்சு, ஆனா அதை விளக்கமா சொல்ல தெரியல. யாராது பதில் சொல்வாங்கன்னு பார்த்துட்டு இருந்தேன். சீதாலஷ்மி... உங்க விளக்கம் சூப்பர். கணக்குல புலி'யா இருக்கீங்க. நான் கணக்கில் ரொம்ப வீக் ;(.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சீதம்மாவிற்கு, வணக்கம்,எனது கருத்திற்கு விளக்கமாக விடையளித்தமைக்கு மிக்க நன்றி.

சீதால்ஷ்மி மேடம் சொன்ன பிறகுதான் விழயங்களைத்
தெளிவாகப்புரிந்து கொள்ள முடிந்தது..

ஹாய் தோழீஸ் ,ப்ளீஸ் எனக்கு கொஞ்சம் பதில் சொல்லுங்க ,நாங்க ஒரு லேன்ட் வாங்கிருந்தோம் ,அதுக்கு கூட்டு பட்டா இருக்கு,தனி பட்டா apply பண்ணிருகோம் ,கூட்டு பட்டா மட்டும் போதுமா ? கூட்டு பட்டா value இல்லையா ? தனி பட்டா எவ்ளோ நாள்ல கிடைக்கும் ,கூட்டு பட்டா வெச்சு bank loan எடுக்க முடியுமா ?

லதா, நீங்க‌ இவ்ளோ கேள்வி கேட்டும் எனக்கு எந்த‌ கேள்விக்கும் பதில் தெரியலனு நினைக்கும் போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. நம்ம‌ தோழிகள் பதில் சொல்றாங்களானு பார்ப்போம்..

- பிரேமா

ஒன்னும் பிரெச்சனை இல்லை பா .தெரிஞ்சா சொல்ல போறேங்க ,don't feel dear

உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்லலாமா?
தனி பட்டா கிடைக்க சர்வேயர் வந்து இடத்தை அளந்து கூட்டு பட்டாவில் உள்ள எல்லோரும் Sign போட்டால் தான் சீக்கிரம் கிடைக்கும்.
கூட்டு பட்டா மட்டும் வைத்து நிறைய பேங்க்ல் லோன் கொடுக்க மாட்டார்கள்.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

தாராளமாக சொல்லலாம் அபி , சர்வேயரை நாம் தான் கூபிடவேண்டுமா இல்லனா குறிப்பிட்ட தேதியில் அவர்களே வருவார்களா (நாங்கள் தனிபட்டாக்கு apply பண்ணிருகோம்) apply செய்து பனிரெண்டு நாட்கள் ஆகிறது .நமக்கு அவர்கள் inform ஏதாவது செய்வார்களா ?

பதிவுத் துறையில் பணம் தான் எல்லாமே.நாம் பணம் கொடுத்தால் சீக்கிரம் வேலை முடியும்.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

மேலும் சில பதிவுகள்