புலி நகம்

அன்பு தோழிகளே,
புலி நகம் வையித்த செயின் அனிவது நல்லதா. அதனால் பயன் அடைந்தவர்கள் அனுபவஙளை கூறவும்..

நான் சொல்வதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்வீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் எப்படி எடுத்துக்கொண்டாலும் இதுதான் உண்மை.

புலிக்கு - கேடு
ஜோசியர்/குறிசொல்பவர்/குறவர், etc. - நன்மை (வருமானம்)
நமக்கு - ஒன்றுமில்லை (அதை அணிந்திருக்கின்றோமே நமக்கு நல்லதே நடக்கும் என்ற மனதைரியம் அல்லது தன்னம்பிக்கை சிலருக்கு ஏற்படலாம்).

இந்த பதிலுக்காக கோபித்துக்கொள்ளவேண்டாம்.

(இதுமாதிரி ஏன் எளிதில் கிடைக்காத பொருள்களை அவர்கள் அணியச் சொல்கிறார்கள் என்று நாம் யோசிக்க வேண்டும்)

அன்புடன்,
இஷானி

இஷானி சொல்வது போல எனக்கும் இதில் நம்பிக்கை இல்லை. புலிநகம், யானை முடி இப்படி எவ்வளவோ பொருட்களை விற்பனை செய்கிறார்கள். இதை வாங்கி மாட்டி விட்டு வீட்டில் இருந்துகொள்ளலாமே. ஏன் வீணாக வேலைக்குப் போகணும்? சும்மா அழகிற்காக வேணுமென்றால் அணிந்து கொள்ளலாம்.
வாணி

இப்படி அரிதாகக் கிடைக்கும் பொருட்கள் விலை அதிகமாக இருக்கும். அவற்றை அணிவதால் எம்மிடம் அரிதானதொரு பொருள் இருக்கிறது என்னும் சந்தோஷத்தைத் தவிர வேறு என்ன நன்மை இருக்கக் கூடும்!!. ;) 'பொடித்துக் கரைத்துக் குடிப்பதில் பலன் இருக்கிறது,' என்று சொன்னால் கூட கொஞ்சம் யோசிக்கிற மாதிரி இருக்கும். ;)

புலியைக் கொன்ற வீரர்கள் தங்கள் கழுத்தில் அணிந்து இருந்தால் அது நியாயம். எனக்கும் இது பற்றி அறிந்து கொள்ள ஆவல். பார்க்கலாம், யாராவது வந்து ஒரு நன்மை இருக்கிறது என்று சொல்லி விளக்கமும் சொல்வார்கள்.

‍- இமா க்றிஸ்

ஹாய் எல்லாரும் நல்லாருக்கீங்களா? அந்த காலத்துலல்லாம் மிருகங்களை வேட்டையாடறது ரொம்ப சாதாரணம் அப்ப அவங்கவங்க வேட்டையாடின புலிநகத்தை ஒரு ஞாவகத்துக்காக தங்கத்தோட சேர்த்து மாலையா பன்னி போட்டுக்கிட்டாங்க. நம்ம பழைய தமிழ் சினிமால நம்பியார்லாம் போட்ருப்பாங்க ஏன்னா அவர் பெரிய ஒரு பண்ணையாராதான் இருப்பாரு இல்லைன்னா மைனரா இருப்பாரு அதனாலயே அந்த புலிநகம் வெச்ச மாலைக்கு மைனர் சைன்னு ஒரு பேரு கூட இருக்கு. அது போட்ரது ஒரு பெருமைக்காக தானே தவிற வேற ஒன்னும் இல்லைங்கறது தான் என் கருத்து... மற்ற தோழிகள் என்ன சொல்றாங்கன்னு பாக்கலாம்... வினீகிட்ட கூட ரெண்டு புலிநகம் இருக்கு அத மாலையா பன்னி போடனும்னு அவங்களுக்கு ரொம்ப ஆசை... ஹாஹாஹா

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

புலிநகமா?! இன்னுமா மக்கள் இதையெல்லாம் நம்பறாங்க :(. மாட்டிக்கிட்டா கம்பி எண்ண வேண்டி வரலாம். புலி நம்ப தேசிய விலங்குங்கோ. அதுவுமில்லாம அழியும் நிலையில் இருக்கு. அதனால இப்போ அதை பாதுகாக்கும் முயற்சியில் இருக்கிறோம். அப்படி இருக்கும் போது புலியைக் கொன்று அதோட நகத்தை எடுத்து மாலையா போட்டுக்கறதா.... வேணாமுங்கோ.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்