இன்று ஆடி 18ம் பெருக்கு அதன் விசேஷ்ங்களை சொல்வோமா

இன்றைய நாளில் எது செய்தாலும் அது பெருகும் என்று சொல்வார்கள்

நாகவளர் இதை சொல்வதால் என்னை தவறாக என்ன வேண்டாம். மதம் சார்ந்த பதிவுகள் கூடாது என அட்மின் அண்ணா முதலிலேயே சொல்லியுள்ளார்.

இந்த தலைப்பின் கீழ் மற்ற மதத்தவர்கள் பேச முடியாது(இதை பற்றி தெரியாததால்) பங்கேற்க மாட்டார்கள். எனவே இதை மதம் சார்ந்த பதிவாக தான் எடுத்துக்கொள்வர். எனவே இதை பற்றி பேச வேண்டாம் என்பது என் வேண்டுகோள்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அப்படியா எனக்கு தெரியாது. மன்னிக்கவும்

நாகவளர் ஆடி 18 இன்று விஷேசம் என் கணவர் பிறந்த நாள்ப்பா, இதை இந்த தலைப்பில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், நாகவளர் நன்றி, இந்த தலைப்பு நீங்க என்னக்காக ஆரம்பிச்சதா நான் நினைத்து கொள்கிறேன்ப்பா

சிரித்த முகமும் தெளிவான வார்த்தையும் ஒரு பெண்ணின் அம்சம்

உங்க கணவருக்கு அறுசுவை சார்பில் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்

அன்புடன்
பவித்ரா

pavithraa mikka nanRi,

சிரித்த முகமும் தெளிவான வார்த்தையும் ஒரு பெண்ணின் அம்சம்

அனைவருக்கும் ஆடிபெருக்கு நல்வாழ்த்துக்கள்.
எங்கள் ஊரில் ஆடிபெருக்கு மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும். அன்றைய தினம், புதிதாக தொழில் தொடங்குவர், புது மனை வாங்குவார்கள், புது வாகனம் வாங்குவார்கள், தங்க நகைகள் வாங்குவார்கள், திருமணத்திற்கு புடவை எடுப்பது, பத்திரிகை அடிப்பது , தாலி செய்ய குடுப்பது போன்ற நல்ல காரியங்களையும் இன்று துவங்குவார்கள். புது மன தம்பதிகள் ஆற்றங்கரைக்கு சோறு கட்டிக்கொண்டு சென்று, பழங்கள், மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, காதலகருகுமணி, காபரிசி எல்லாம் வைத்து சாமி கும்பிட்டு புது தாலி பெருக்கி கட்டி கொள்வார்கள். ஆற்றங்கரை செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே புது தாலி பெருக்கி கட்டி கொள்வார்கள், அல்லது நூலில் மஞ்சள் தடவி சாமி கும்பிட்டு கட்டி கொள்வார்கள், கன்னி பெண்களுக்கும் கட்டி விடுவார்கள். திருமண முடிந்த பின் மாலைகளை அன்று தான் ஆற்றில் கொண்டு விடுவார்கள். அன்றைய தினம் செய்யும் நல்ல காரியம் எல்லாம் மென்மேலும் பெறகும் என்று நம்பிக்கை. விவசாயிகள் புது நெல்லு விதைபாங்க. விதைநெல் வைத்து சாமி கும்பிடுவார்கள். நாங்களும் மாலை ஆடிபெருக்கு celeberate பண்ண போறோம்.

அன்புள்ள ஆமினா

admin மத உணர்வுகளை தூண்டும் பதிவுகளை தான் வேண்டாம் என்று சொன்னாரே தவிர விசேஷ நாட்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதையும்
அந்நாளின் சிறப்பை தெரிந்து கொள்வதையும் வேண்டாம் என்று சொல்லவில்லை

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

கார்த்திகாராணி இப்படித்தான் தீப விளக்குப் பகுதியும் ஆரம்பித்து சுலோகம் மந்திரம் எனப்போயிற்று. விஷேஷங்களுக்கான வாழ்த்துக்களோடு நிறுத்திக் கொள்வோமே! அதில் என்ன கஷ்டம்?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கார்த்திகா ராணி

http://www.arusuvai.com/tamil/node/15739?page=6

நீங்கள் மூத்த உறுப்பினர்.நீங்கள் சொல்வது சரியாக தான் இருக்கும். நானும் வாழ்த்து சொல்ல வேண்டாம் என சொல்லவில்லை. மத உணர்வு தூண்டும் பதிவுகள் அண்ணா வேண்டாம் என்பதையும் அறிவேன்.

மேல் உள்ள லிங்க்’ல போய் பார்க்கவும். நான் சொன்னதின் அர்த்தம் புரியும்:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

hi pa unga paiyan peru enna pa apparam soniya eppo urukku poittu varangalam freeya irukkumbodu vangapa

அன்புள்ள ஆமினா நீங்கள் குறிப்பிட்ட link இப்பொழுது தான் பார்த்தேன். வாழ்த்து சொல்வதற்கும் அந்த நாளின் சிறப்பை சொல்வதற்கும் தான் பதிவு போட்டேன். தமிழர்களின் காலம் காலமான கொண்டாட்டத்தையும் சொல்வதற்கு தான் ஆசைப்பட்டேன். ok lets finished, and no more discussion on this topic. forget all and keep enjoying.

dear admin if im wrong im sorry and pls ignore me.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

மேலும் சில பதிவுகள்