கொஞ்சம் மூளையை கசக்குங்க-பகுதி 3

"ஓடப்பாராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகிவிடால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம்மாறி ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ"

அய்யய்யோ..இது புதுசா ஏதோ கவிதை சம்பந்தபட்ட த்ரெட் இல்ல....கொங்சம் வித்தியாசமா இருக்கட்டுமேனுதான்...
பகுதி மூன்றுக்கு சகோதர சகோதரிகள் அனைவரையும் அன்போடு அழைப்பது உங்கள் அன்பு அறிவிப்பாளன் மு.ஷேக் முகைதீன்

ராதாஹரியின் கேள்வி:

மூன்று ஆட்டோ டிரைவா்கள் காப்பி குடிக்க கடைக்குச் செல்கின்றனர்... முவரும் ஆளுக்கு ஒரு காப்பி குடித்துவிட்டு 15 ரூபாயை பேரரிடம் கொடுக்கின்றனர். பேரர் அதை முதலாளியிடம் கொடுத்ததும்.. முதலாளி ஆட்டோ டிரைவா்கள் தன் நண்பர்கள் என்று சொல்லி 5 ரூபாயை அவா்களிடமே திருப்பிக் கொடுத்துவிடும்படி கூறுகிறார். ஆனால் பேரர் ஆளுக்கு ஒரு ரூபாயை அவா்களிடம் கொடுத்துவிட்டு மீதி 2 ரூபாயை தான் எடுத்துக்கொள்கிறார்.

ஆக இப்போது ஆட்டோ டிரைவா்கள் ஒரு காப்பிக்கு 4 ரூபாய் வீதம் 12 ரூபாய் கொடுத்துள்ளனர். பேரர் எடுத்த 2 ரூபாயை சேர்த்தால் 14 ரூபாய் தான் வருகிறது. அப்போ மீதி 1 ரூபாய் எங்கே?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நீங்க இதை ஏன் புதிர் மற்றும் விளையாட்டுகளில் தொடங்காமல் பொது பிரிவுல தொடங்கியிருக்கீங்க, அதனாலதான் எல்லாரும் பகுதி- 2 லயே புதிர்களை போடறாங்க, முடிந்தால் அட்மின்கிட்ட சொல்லி இதை அங்கே (புதிர் மற்றும் விளையாட்டுகளில்) மாற்றுங்க.

அன்புடன்
பவித்ரா

தேங்ஸ் பா
நான் புதிர் மற்றும் விளையாட்டுக்கள் போய் தேடிப் பார்த்தேன்.. அங்க இல்ல.. அதான் இதுலயே பதிவு போட்டேன்... நேத்தே நான் பார்த்தேன். பகுதி 3 தொடங்கியாச்சுனு.. ஆனா தேடிக்கிடைக்கல... ஷேக் அண்ணா சாரி (எத்தன டைம் சாரி கேப்பேனோ..........)

ஓகே இங்க கன்டினியு பண்ணலாம்........

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

விடை
12 ரூபாயில் பேரருக்கான 2 ரூபாய் டிப்ஸ் அடங்கியுள்ளது.

அன்புடன்
பவித்ரா

அந்த 1 ரூபாய் எங்கப்பா போச்சு.. கேள்வி அது தானே....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மூணு பேருக்கும் சேர்த்து முதலாளி 10 ரூபாய் வாங்கினாரா? வாங்கினார் :)

அப்போ மீதி எவ்வளவு 5ரூபாய். 2ரூபாய் பேரருக்கு டிப்ஸ் போயிடுச்சா அப்போ மீதி எவ்வளவு 3 ரூபாயா? அதை மூணு பேரும் பிரிச்சு எடுத்துக்கிட்டாங்க 15 ரூபாய்க்கு கணக்கு சரியாயிடுச்சா.
முடீயல :(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அந்த 12 ல பேரரின் 2 ரூபாய் அடங்கும், அப்போ மீதி 3 ரூபாய்தானே அக்கா

அன்புடன்
பவித்ரா

ம்ம்ம்... கரெக்ட்மே கரெக்கிட்டு........

அப்பால அத முன்னாடியே பவிக்கண்ணு சொல்லிச்சு... ஆனா சரியா கணக்கு போட்டு சொல்லனுமில்ல.....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

1 - - - 2 - - - - - - - - - - - -
! - - - ! - - - - - - - - - - - -
! - 3 - ! - - - - - - - - - - -
!======!====== 7 - - - - - - - -
! - - - ! - - - - - - - - - - - -
! - 4 - ! - - - - - - - - - - - -
!======!====== 8 - - - - - - - -
5 - - - 6 - - - - - - - - - - - -

இந்த புதிர் அக்சுவலா தீக்குச்சிகள் வைத்து சொல்லுவாங்க. இங்க கொடுத்திருக்கும் படத்தில் எட்டு குச்சிகளை கொண்டு ஒரு மீன் இருப்பதா கற்பனை பண்ணிக்கோங்க. கட்டமா இருப்பது மீனின் உடல். கேள்வி என்னன்னா இரண்டே குச்சிகள மாற்றி வைத்து ஒரு directionla போற மீனை வேறொரு directionla மாற்றனும். (சேர்க்க கொடுத்தா படம் சரியா வருமான்னு தெரியலையே, வந்த ட்ரை பண்ணி பாருங்க). சின்ன சின்ன கோடுகளை தண்ணியா consider பண்ணிக்கோங்கப்பா. (யாரும் திட்டாம இருந்தா சரி). இது சிறு வயதில் மூளையை கசக்கி நாங்க கண்டுபிடிச்ச விடை. குறிப்பிட்டதற்கு ரொம்ப நன்றி reem.

இதுவும் கடந்து போகும்.

கடைசி வரியை திருத்தி எழுதுங்கள்.எழுத்து பிழை தவறான அர்த்தமாகிறது.

மேலும் சில பதிவுகள்