அறுசுவை தமிழ் கவிச்சங்கம்

இந்த த்ரெட்டை ஆரம்பம் செய்வதற்கான நோக்கம் யாதெனில் அறுசுவையில் இப்போது நிறைய கதாசிரியர்கள்.கவிஞர்கள் உருவாகி வருகின்றனர்..பொதுவாய் அதிகம் வரும் கதைகளுக்கும் கவிதைகளுக்கும் விமர்சனங்கள் குறைவு.ஏதும் தவறாக நினைத்துக் கொள்வார்கள் என்ற பயம் இருக்கலாம்..
அதை போக்கும் முகமாக நம்மில் யாராவது ஒருவரை அல்லது இருவரை விமர்சனக்குழு அங்கத்தினாராக இருந்து கதைகளில் உள்ள நிறை குறைகளை சுட்டிக்காட்டி அவர்களது படைப்புக்கள் வருங்காலங்களில் சிறந்ததாக அமைய உதவலாம் என்று நினைத்தேன்...இதில்யாரை விமர்சனக் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கலாம் என்று உங்கள்து கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.(கண்டிப்பாக வனிதா அக்கா,ஆமினா போன்று எல்லாத் துறையிலும் சிறந்தவர்களாக இருந்தால் நன்றாயிருக்கும் என்பது என் எண்ணம்)
மேலும் கதை கவிதை அனுப்புவது பற்றிய விவாதங்களை இங்கே தொடரலாம்...

நட்புடன்
ஷேக் முகைதீன்

நன்றி பவித்ரா....என்னை புரிந்து கொண்டதற்கு

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

///இப்படி சொல்றேன்னு தவறாய் நினைக்கவேண்டாம்..இந்த இழை உங்கள் சுயநலத்துக்காக அமைத்து கொண்ட மாதிரி தோனுகிறது..எந்த உருவாக்கமும் படைபபவர்கள் அவர்கள் ஆக்கங்களுக்கு உரிய பாராட்டோ ,விமர்சனகளோ கட்டாயம் விரும்புவார்கள்.ஆனால் நாமாக எதையும் கேட்டு பெற்றால் நம் சுயமதிப்பீட்டை இழக்க சந்தர்ப்பம் இருக்கு..உங்கள் ஆக்கங்களின் குறைகளை நீங்க சொல்லுங்கல்னு பலதடவை அறுசுவை நண்பர்களிடத்தில் சொல்லிருக்கிங்க..அதை நான் கவனிச்சுருக்கேன்..ரசிப்பு தன்மை இருப்பவங்க கட்டாயம் நீங்க சொல்லாமலே உங்கள் கதை அல்லது கவிதை படித்து அவர்கள் தம் கருத்துகளை பதிவு பண்ணிருக்காங்க..அப்போ அது உங்களுக்கு திருப்தியா இல்லையா?////
பாராட்டுதலை மட்டும் எல்லோரிடமும் நான் வலிய சென்று கேட்டிருந்தால் நீங்கள் சொல்வதுபோல் சுயமதிப்பீட்டை இழக்க வாய்ப்பு உள்ளது..ஆனல் நான் கேட்டது பாராட்டுதலை அல்ல...விமர்சனம்ந்தான்....எனக்கு இந்த குண்டுசட்டியில் குதிரை ஓட்டுவதில் நம்பிக்கையில்லை...
விதை ஒன்று ,அரும்பு,மலர்,மொட்டு,காய்,கனி என்றே படிபடியாய் பரிணாமம் அடைகிறது..ஆனால் அது வளர்வதற்க்கு தண்ணீர் தேவை...
ஒரு படைப்பாளியின் வளர்ச்சி அவன் கற்பனையிலும் எழுத்தில் மட்டும் இல்லை..விமர்சனத்தில்தான் அவன் தன்னை,தனது குறைகளை பார்த்துக் கொள்கிறான்..

பெண்கள் கொஞ்சம் மென்மையானவர்கள் அதனால்தான் எதையும் எளிதில் ஜீரணிக்க அல்லது தாங்க இயலாது..ஆண்கள் அப்படியல்ல...

முதல் தடவையாக நான் இப்போதுதான் சிறிது மனதால் காயம் அடைந்தேன்....

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

இன்னொன்று தெரியுமா ஆனந்தி மேடம்..நீங்கள் கூர்ந்து கவனித்தால் நான் அதை எல்லோரிடமும் அப்படி கேட்பதில்லை..நன்கு பழக்கமானவர்களிடம்தான் அப்படி கேட்பது வழக்கம்...
நண்பர்களிடம் அவ்வாறு கேட்பதற்கு எனக்கு உரிமை உள்ளது என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது...நான் உங்களிடம் அப்படி இதுவரை கேட்க்கவில்லை என்று நினைக்கிறேன்..அப்படி கேட்டிருந்தால் உங்களையும் சகோதரி அல்லது நண்பராக நினைத்ததால்தான் இருக்கும்..நன்றி!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஷேக்...

//முதல் தடவையாக நான் இப்போதுதான் சிறிது மனதால் காயம் அடைந்தேன்// - நிச்சயம் மற்றவர் விமர்சனத்தை தாங்கும் மனநிலை உங்களிடம் இல்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா மேடம்..ஆனந்திமேடம் அப்படி சொன்னது விமர்சனம் அல்ல...என் சுயமதிப்பு என்ற ஆணிவேருக்கே அபாய சங்கு அது!
விமர்சனம் சொல்லி நான் வருத்தப்படதாய் இதுவரை செய்தி இல்லை...
ஏன் யாரும் உங்களை அப்படி சொன்னால் அதை ஏற்றுக் கொள்வீர்களா?ஆமாம் நீங்கள் எப்படி எனக்கு விமர்சனத்தை தாங்கும் மனநிலை இல்லை என்று சொல்கிறீர்கள்?விளக்கம் தேவை

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

இந்த கருத்துக்களையே உங்களுக்கு காயமாக படும்பட்சதில் வேறு விமர்சனங்கள் எப்படி தாங்கி கொள்வீங்க? முதலில் ஒன்னு புரிஞ்சுக்கோங்க ஷேக்..இங்கே பெரும்பாலும் கதை..கவிதை பதிவு போடுபவர்கள் முதல் முதலில் முயன்றதாக இருக்கும்..professional பெரும்பாலும் இல்லை..அவர்களுக்கு இருக்கும் திறமைகளுக்கு அங்கீகாரம் அறுசுவை கொடுக்குது..இங்கே நாம் விமர்சனம் கமிட்டி மெம்பெர்ஸ் போட்டு பண்ணுவதற்கு நோபெல் பரிசுக்காகவோ..ஞான பீட பூமி விருதுக்கு பரிந்துரை செய்யவோ அல்ல னு நீங்க புரிஞ்சுக்கணும்..நிறைய debue எழுத்தாளர்கள் அறுசுவையில் இருக்காங்கனு புரிஞ்சுக்கோங்க..நீங்க என்கிட்டே தனிப்பட்ட முறையில் கேட்கவில்லை என்பதற்காக நான் கோவித்து இதை சொல்ல வில்லை..அறுசுவை என்பது பொதுவான ஒரு தளம்..சுய விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது..உங்கள் விருப்பங்களை உங்கள் சொந்த blog இல் முயன்று பார்க்கலாம்..எனக்கும் கூட காய படுத்தனும் சொல்லவில்லை திரு.ஷேக்..நாளைக்கு நானே இப்படி பண்ணினால்..நீங்கள் விமர்சனம் செய்ய உரிமை எல்லாம் பார்க்க்க மாட்டேன்..
நீங்கள் விரும்பும் உங்கள் லட்சியம் அடைய வாழ்த்துக்கள்..
அன்புடன்,
ஆனந்தி..

Madurai Always Rocks...

மற்றவர் விமர்சனத்தை தாங்கின்ற மனநிலை இல்லாத ஒருவன் "நிறைகளை மட்டும் சொல்லவேண்டாம் குறைகளையும் சேர்த்து சொல்லுங்கள் என்று சொல்வானா?அதென்ன நீங்கள் எது சொன்னாலும் சரி என்ற எண்ணமா உங்களுக்கு?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

//இதற்குமேல் இந்த இழையில் யாரும் தொடர வேண்டாம்..இதை இப்படியே விட்டுவிடலாம்....//

இழையை ஆரம்பித்தவரே, இவ்வாறு சொன்ன பிறகு எதற்காக இதில் பதிவுகள் இட வேண்டும், எதுவானாலும் அட்மின் அண்ணா வரட்டுமே, நமக்குள் வாக்குவாதங்கள் வேண்டாம் என்பது என் தாழ்வான கருத்து,

அன்புடன்
பவித்ரா

///எந்த உருவாக்கமும் படைபபவர்கள் அவர்கள் ஆக்கங்களுக்கு உரிய பாராட்டோ ,விமர்சனகளோ கட்டாயம் விரும்புவார்கள்.ஆனால் நாமாக எதையும் கேட்டு பெற்றால் நம் சுயமதிப்பீட்டை இழக்க சந்தர்ப்பம் இருக்கு.///
இங்கே இது வெறும் கருத்துகளாக தோன்ற வில்லை எனக்கு..இதுதான் சுயமதிப்பீட்டை உரசி பார்க்கிற உத்தி...உன்கதை மோசம் என்று சொன்னால் கூட ஒன்றும் தோனாது எனக்கு...
நண்பர் ஒருவரிடம் மற்றோரு நண்பர்"மச்சான் என் கதைக்கு நிறைகள் மட்டும் சொல்லாதடா..குறையும் சேர்ர்த்து சொல்"என்று சொல்லும்போது அடுத்தவர் "நாமாய் யாரிடமும் சென்று குறைகள் கேட்டால் அது சுயமதிப்பீட்டை இழக்கச் செய்கிற காரியம் என்று சொல்வானா?"சரி மச்சான் அதெனாலென்ன சொல்லிட்டா போச்சு என்பான்"
ஏனென்றால் எல்லோரிடமும் அதை கேட்க முடியாதல்லவா?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்