applying passport

Hi arusuvai friends,
I want 2 apply 4 passport.how 2 apply.where am i get that application form,any online apply is there?tell me that website

ஜெயா..

அப்லிகேஷன் நீங்கள் ஆன்லைன் ல் இருந்து எடுத்துக் கொள்ளலாம். அதில் தெளிவாக உங்களின் டீட்டைல்ஸ் ஃபில் செய்து, அப்பாயின்மெண்ட் ஃபிக்ஸ் செய்ய வேண்டும். நார்மலில் அப்ளை செய்தால் மார்க் சீட், ரேஷன் கார்ட் போன்றவை போதும். தட்கால் எனில் மூன்று டாக்மெண்ட் வெண்டும். உங்களின் ஊரில் உள்ள பாஸ்போர்ட் ஆபிஸ் பக்கத்திலேயே ஆன்லைனில் புக் செய்து தருவார்கள்.

see the link
http://www.passport.gov.in/

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நீங்க எந்த ஊர் என்று தெரியவில்லை. சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்கள் உள்ளன. அதை தவிர்த்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பாஸ்போட் செல் லும் உண்டு. இந்த இடங்களில் சென்று நீங்கள் விண்ணப்பிக்கலாம். விரைவு தபால் மூலமும் விண்ணப்பிக்கலாம். ஆனால் நேரில் செல்வது நலம். சாதாரணமாக எடுக்க வேணும் எனில் மாவட்ட பாஸ்போர்ட் செல் க்கு செல்வது நல்லது. மண்டல அலுவலகத்தில் கூட்டமும் அதிகம், நேரமும் அதிகம் எடுக்கும். உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும், விண்ணப்பமும் இங்கு கிடைக்கும் (தமிழ் / ஆங்கிலம்) - http://passport.tn.nic.in/

உங்களிடம் இருக்கும் அனைத்து ஆவணங்களையும் அசல் நகல் லுடன் செல்ல வேண்டும், போதுமான அளவு போட்டோவும் தேவை. விண்ணப்பத்தை மிகவும் கவனமாக பூர்த்தி செய்வதும் அவசியம் (எழுத்துப்பிழைகள் முக்கியமாக)

நட்புடன்
நாகை சிவா

"Follow your heart and your dreams will come true."

ஜெயவிசாலி, பாஸ்போர்ட் விண்ணப்பத்தை மிகவும் கவனத்துடன் பூர்த்தி செய்யுங்கள். உங்கள் சான்றிதழில் உங்கள் பெயரை எப்படி குறிப்பிட்டு இருந்தீர்களோ, அதே போல பாஸ்போர்ட் விண்ணப்பத்திலும் குறிப்பிடுங்கள். அதில் ஒரு புள்ளியை நீங்கள் மாற்றி போட்டாலும் தவறாகிவிடும். அதேபோல நீங்கள் பூர்த்தி செய்த ஆவணங்களை பாஸ்போர்ட் அலுவலகத்தில் பணிபுரிபவரிடம் கொடுத்து ஒருமுறை சரிபார்த்துக்கொண்டு விண்ணப்பத்தை கொடுங்கள். விண்ணப்பத்தில் தற்காலிக முகவரி, நிரந்தர முகவரி கேட்டிருப்பார்கள். அவற்றில் கூடுமானவரை இரண்டிலும் ஒரே முகவரி இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். வெவ்வேறு முகவரி தரும் பட்சத்தில் இரண்டு முகவரிக்கும் உரிய தக்க ஆவணங்களை எடுத்துச் செல்லுங்கள். மறக்காமல் ஜெராக்ஸ் காப்பியுடன் ஒரிஜினல் ஆவணங்களையும் கொண்டு செல்லுங்கள். என் குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் விண்ணப்பித்தபோது நான் இரண்டு முகவரி போட்டிருந்தேன். அவற்றிற்க்கு போதுமான ஆவணங்கள் இல்லாமல், பாஸ்போர்ட் பெற நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. நான் பட்ட சிரமங்களை நீங்கள் பட வேண்டாம். பாஸ்போர்ட் சீக்கிரமே பெற வாழ்த்துக்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.


சின்னவளுக்கு பாஸ் ஃபோர்ட் எடுக்க சென்ற போது நடந்ததிது.
அவ்ள் மார்க் ஷீட்டில் சின்ன தவறு இருந்துது.
நல்ல வேலையா நாங்க் எல்லா ஒரிஜினலும் எடுத்து போயிருந்ததால அவங்க கேட்டதை ஒடனே கொடுக்க முடிஞ்சது.
அதுவுமில்லாம பாஸ் ஃபோர்ட் ஃபில் பண்ண்ர்துகுன்னே அங்க ஒருத்தர் இரூக்கார்.
அவர் கிட்ட கொடுத்துட்டா போறும்.
அவரே ஃபில் பண்ணி கொடுத்துடுவார்.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

தோழி பாஸ் ஃபோர்ட்க்கு விண்ணப்பிக்குபோது பிறந்த சான்றிதழ் இல்லை. மாற்று சான்றிதழை கொண்டு விண்ணப்பிக்கலாமா.

thanks 4 ur reply friends.i'm n madurai,newly married, is residential proof certificate s necessary right?.my native place palani.here v've no ration card & voter id.what can i do friends?

இதை பற்றி எனக்கு ஒரு சந்தேகம், எனக்கு திருமணம் ஆகவில்லை, சோ என்னோட பாஸ்போர்ட்ல பவித்ரா ராமநாதன்னு இருக்கு வச்சிக்கோங்க, (ராமநாதன் அப்பா பேர்), திருமணம் ஆன பிறகு, என் கணவர் வெளிநாடுகளில் இருந்தால் நான் என் பாஸ்போர்டில் என் பெயரை பவித்ரா ராமநாதன்னுக்கு பதிலாக பவித்ரா ____________ன்னு மாத்திக்கனுமா (______ கணவர் பெயர்)

அன்புடன்
பவித்ரா

ஜெயா

நார்மலா அப்ளை செய்ய மார்க் சீட் போதும் ஏதாவது பேங்க் அக்வுன்ட் இருக்கா.. இருந்தாலும் சரி.. எவ்வளவு நாளில் பாஸ்போர்ட் வேண்டும்..? அவசரமில்லை எனில் நார்மலில் அப்ளை செய்யலாம். பேன் கார்ட் இருக்கா. இரண்டு வருடம் ஐ டி ஃபைல் செய்து இருந்தாலும் செல்லும்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

பவி

மாத்திகணும்னு அவசியமில்லை. உங்களுக்கு வேண்டுமெனில் மாத்திக்கலாம். அதற்கு என தனியாக ஃபார்ம் இருக்கு.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

பட் என்னோட தோழி ஒருவர் சொன்னார்கள், if v r going for our purpose like job no need of changing ur name, but when u r depend on your husband, u have to change like that, thats y i got a doubt regarding this yaar.

anyway thank u. sorry for typing in english

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்