பெண் பார்க்கும் படலம்

தோழர் - தோழிகளே ! ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும், ஆணின் வாழ்க்கையிலும் மறக்கமுடியாத திருப்பம் என்றால் அது திருமணம் தான். அதற்கு அச்சாரம் போடுவது பெண் பார்க்கும் படலம் (பெற்றோர் முன்னிலையில் சைட் அடிப்பது ;)). வாழ்க்கையின் இந்த பொன்னான தருணத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. வயதாகி போனாலும் நம் பிள்ளை மற்றும் பேர குழந்தைகளிடம் சொல்லி குதூகலிக்கும் ஒரு அருமையான சம்பவம். தோழர் - தோழிகளே உங்கள் வாழ்க்கையில் அன்று நடந்த மறக்க முடியாத சம்பவங்களையும், நகைச்சுவை நிகழ்ச்சிகளையும் இங்கே பகிர்ந்துக் கொள்ளுங்கள். திருமணமாகாதவர்கள் அவர்கள் பார்த்த சம்பவங்களை இங்கே பகிரலாம். எஸ்கேப் ஆக முடியாது. :)

இது நமக்கு சம்பந்தம் இல்லைன்னு நினைச்சேன், ஆனா கடைசியில வச்சிட்டீங்களே ஆப்பு,

நான் இது வரைக்கும் பெண் பார்க்கும் நிகழ்ச்சியில கூட கலந்துகிட்டதே இல்லப்பா

இதுவரை பெற்றோர் முன்னிலையில் சைட் அடிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை (பெற்றோர் இல்லாமலும் அடிக்க மாட்டேன், நிஜமாத்தான்ப்பா), என்னோட அம்மா, அப்பா அவங்களை பெண் பார்க்க வந்தபோது, "திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா" என்ற பாடலை பாடினாங்களாம், அவ்வளவுதான் அப்பா க்ளீன் போல்ட் ஆயிட்டாரு, எப்ப அந்த பாட்டு கேட்டாலும் எனக்கு அம்மா ஞாபகம் வரும்.

அன்புடன்
பவித்ரா

எனக்கு அந்த மாதிரி குடுப்பனை எல்லாம் இல்லீங்க :( ஏன்னா, என்னவர் காங்கோல வேலை பார்த்துட்டு இருந்தார். பெண் பார்க்கவும் அவர் வரவில்லை. நிச்சயதார்த்தத்திற்கும் அவர் இல்லை. நிச்சயதார்த்தம் அன்று போனில் அவரிடம் " இன்று நமக்கு நிச்சயதார்த்தம் என்றேன். அதற்கு அவர், ஓஓஓ அப்படியா சொல்லவே இல்லை அப்படின்னு வடிவேலு பாணில சொல்லி, வாழ்த்து சொல்லி போனை வச்சுட்டார். இது தாங்க என்னுடைய மாப்பிள்ளைய பார்க்காத படலம்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பனா எனக்கு இந்த அனுபவம்லாம் இல்லை. யாரையும் பொண் பார்க்க அனுமதிக்கவில்லை. என் கணவர் வீட்டில் வந்தவர்கள் கூட என்னை நிச்சயதார்த்தத்தில் தான் பார்த்தார்கள். என் அம்மா,மாமி தான் எல்லாமுமே பேசுனதுனால எனக்கு அந்த சந்தர்ப்பம் ஏற்படல.

முகத்த பார்க்காமலேயே ஒத்துகிட்டாங்களா? அப்படின்னு உங்களுக்கு சந்தேகம் வரலாம்.
என் மாமியார் வீடு என் ஸ்கூல் எதிரில் இருந்ததால் அடிக்கடி சந்திச்சுக்குருவோம். அப்ப இருந்து இப்ப வரைக்கும் நாங்க ப்ரண்ட்ஸ் தான்)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பவி, அப்படி உங்க அம்மா அப்பாவ பார்த்து ரொமான்டிக்கா பாடினதுல நீங்க வந்து பிறந்துட்டீங்களா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

எதுவாயிருந்தாலும் நாம் தனியா டீல் பண்ணிக்கலாம், ஓகே.

அன்புடன்
பவித்ரா

எனக்கு இந்த மாதிரி அனுபவம் ஏற்படவேயில்லை. எங்க முறையில ஜாதகம்,இடம், பொருத்தம் பார்தபின்புதான் நிச்சயம் செய்வாங்க. பெண்வீட்டுக்கு மாப்பிள்ளை வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டுக்கு பெண்வீட்டாரும் போயி விருந்து சாப்பிட்டு கன்ஃபர்ம் செய்வாங்க. அந்த நேரத்துல தான் சம்பிராதயம் நடக்கும். எனக்கு அவர் துபாயில் என்பதால் அவர் இல்லாமலேயே நிச்சயம் எல்லாம் நடந்தாச்சு. அவருக்கு லீவு கிடைக்காம கல்யாணத்துக்காவது வந்துருவீங்களா என்று எங்க அப்பா ஃபோன் பண்ணிக் கேட்டாரு. திருமணம் ஞாயிறு என்றால் புதன் கிழமைதான் ஜவுளிக்கு முன்னாடி வீட்டுக்கு வந்தார். அப்ப கூட்டத்தோட கூட்டமாதான் என்னவரைப் பார்த்தேன். ஏன்னா எங்க சொந்தக் காரங்களும் அப்பதான் அவரைப் பார்கிறதுனால நான் ஒருத்தி இருக்கேன் என்பதையே மறந்துட்டாங்க. காபியாவது ஒண்ணாவது நான் ஒண்ணுமே கொடுக்கலை. அப்புறம் ஜவுளிக்கு நானும் கண்டிப்பா வருவேன்னு சொல்லி அந்தக் கும்பலில் நாங்க மீட் பண்ணிக்கிட்டோம்.
கல்யாணம் நிச்சயம் ஆனவுடன் நாங்க ஃபோன்ல பேசிட்டே இருந்ததினால நேர்ல பார்த்தபோது நல்லா ஜொள்ளுவிட்டு பார்த்ததுல கிக்கான அனுபவமா இருந்தது.

Don't Worry Be Happy.

அமீனா, பெண் பார்க்கும் படலம்லாம் ஒரு த்ரில் பா. நீங்க மிஸ் பண்ணிட்டீங்க. பெண் பார்க்கும் படலத்தில் என்னை என்னவர் மட்டும் தான் பார்க்கவில்லை. அவர் வீட்டை சார்ந்தவர்கள் எல்லோரும் வந்து பார்த்தனர்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹாய் கல்ப்ஸ் எப்படி இருக்கீங்க எனக்கும் இந்த அனுபவம் இல்லைப்பா ஏன்ன என் கணவர் என்னுடைய அத்தை பையன் ஆனா அப்ப அப்ப பார்த்து சைட் அடிக்குறது
யாராவது பாகுராங்கலானு பயமா வேற இருக்கும் ஆகா அதுவும் ஒரு இனிமைதான்

என்னோடது ரொம்பவே வித்தியாசமா இருந்துச்சு. நான் தான் முதல்ல மாப்பிள்ளை பார்க்க போனேன்.மாப்பிள்ளை அரசாங்க வேலைன்னு சொனனாங்க. எங்க அம்மா நேரில் போய் பார்க்கனுமுனு சொன்னாங்க ஆனால் எங்க அம்மா வெளியே அதிகமா போனதில்லை. விவரமும் அவ்வளவா தெரியாது. அதனால நானும் எங்க அம்மாவும் நேரில போய் பார்த்து அவங்க மேல அதிகாரிகிட்ட நானே விசாரிச்சேன். இவருக்கு வேலை நிரந்தரமானு. என்னவர் அடிக்கடி சொல்லுவரு உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா நான் இருக்கும் போதே அப்படி கேட்டனு.இப்ப நினைச்ச கூட சிரிப்பா வருது. எனக்கு அன்னன் கிடயது அதுனால தான் நானே நேரில போனேன் யாரும் என்னை தவறாக எண்ண வேன்டாம்.

அப்பா நீங்க பெண் பார்க்க போனப்ப நடந்த கதை சூப்பர் பா இப்பல்லாம் யார் பாட்டு பாடறாங்க. பவித்ரா உங்க அண்ணி இருக்காகளே உங்க அண்ணி அவங்கள பெண் பார்க்க போனப்ப எனக்கு முதுக மட்டும்தான் காமிச்சாக ஏன்னா அப்பா அம்மா மேல கோபமாம். இப்பொ கல்யானம் வேண்டாம்னு சொன்னாகளாம் அத அப்பா அம்மா கேக்கலியாம். அதனால எனக்கு முதுகு தரிசனம் மட்டும் தந்தாங்க. காபி கொடுத்துட்டு திரும்பி நின்னுகிட்டாங்க நிச்சயதார்த்தம் அன்றுதான் கோபம் இல்லாத உங்க அண்ணி தரிசனம் கிடைத்தது.

அன்புடன்
THAVAM

மேலும் சில பதிவுகள்