2 வயது பெண் குழந்தைக்கு ஒரு கண்ணில் Infection

தோழிகளே ! என்னுடைய 2 வயது பெண் குழந்தைக்கு ஒரு கண்ணில் Infection ஆகி கண்ணில் இருந்து அழுக்கு வந்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு வைத்தியம் இருந்தால் சொல்லுங்கள்.

அருகில் தாய்ப்பால் கிடைக்கும் என்றால் போட்டுப்பார்க்கலாம். அது சுத்தமானது நல்லதும் கூட. குழந்தை, அதிலும் கண் என்பதால் வேறு வீட்டு வைத்தியங்கள் முயற்சி செய்ய வேண்டாம். டாக்டரிடம் காண்பிப்பதே நல்லது. மேலும் தாமதமும் செய்ய வேண்டாம்.
குறிப்பு: இது என்னிடைய சொந்தக்கருத்து. தோழிகளின் கருத்தும் ஏற்புடையதாக இருக்கலாம்.

Don't Worry Be Happy.

கல்பணா

சில சமயம் உடல் சூட்டிற்கும் கண் பொங்கும். தலையில் எண்ணெய் வையுங்கள்.சூடு இல்லாத பட்சத்தில் கண் என்பதால் டாக்டரை காண்பதே நல்லது..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஜெயலஷ்மி, ரம்யா ரெண்டு பேருக்கும் நன்றி. நானும் குழந்தைகள் விஷயத்துல ரொம்ப ரிஸ்க் எடுக்க மாட்டேன் பா. பின்விளைவுகள் தராத வீட்டு வைத்தியங்களை தான் செய்து பார்ப்பேன். நீங்க ரெண்டு பேர் சொன்னது போல பண்ணி பார்க்கிறேன். மீண்டும் நன்றி.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்