உதவுங்கள் plz

காலை வணக்கம் தோழிகளே,
நான் 7 மாத கர்பிணி, எனக்கு சில சமயம் வயிரு வலிக்கின்றது, எதனால் இவ்வாரு ஏற்படுகிறது. இதை எவ்வாரு போக்குவது?மற்றும் நான் ஒரு பக்கமாக தூங்கி எழுந்து உட்கார்ந்து மறு பக்கம் திரும்பி படுக்கும் போது Urine pass செய்யும் இடத்தில் அதிகமாக வலி ஏற்படுகிறது. எதனால் இவ்வாரு ஏற்படுகிறது. இதை எவ்வாரு போக்குவது?

வயிற்றுக்கு கீழே வலி என்றால் சூட்டினால் இருக்கும். ஜிரகத்தை வெறும் வாணலியில் வறுத்து அதில் தண்ணீர் ஊற்றி பாதியளவு வற்றியதும் வெண்ணை சிறிது சேர்த்து குடிங்க சரியாயிடும்.
துங்கும் போது இரண்டு கால்களுக்கு இடையில் தலையணை வைத்து கொள்ளுங்கள். அடிவயிரு விரிவடைவதால் இப்படி வலிக்கும். மாலையில் சிறிது நேரம் நடக்கலாம். தண்ணீர், இளநீர், பழச்சாறு, பால் நிறையா குடிங்க.
இரவு வலிக்கும் போது கொஞ்சம் எழுந்து ரூம்லேயே நடந்துட்டு படுங்க.
இரவு 8 மணிக்குள் சாப்பிட்டு விடுங்கள்.

நம்ம தோழிகளும் சொல்லுவாங்க.

ஆரோக்கியமான குழந்தைப் பெற வாழ்த்துக்கள்.

Don't Worry Be Happy.

gas உள்ள பொருட்கள் அதிகமா சாப்பிட்டால் கூட வயிறு வலிக்கும், வயிறு expand ஆவதினாலும், சூட்டினாலும் கூட வலிக்கலாம். இரவு நேரங்களில் சாதம் , பருப்பு, கிழங்கு வகையான உணவு பொருட்களை தவிர்த்து இட்லி, சப்பாத்தி, ஓட்ஸ் போன்ற லைட் ஆனா உணவுகளை எடுத்து கொள்ளுங்கள். இளநீர், மோர், மற்ற citrus பழங்களை அதிகமா எடுத்து கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். வயிறு வலிக்கும் பொது ஒரு ஸ்பூன் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடியுங்கள்,
take care

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

நதியா, சில சமய வயிறு வலி என்பது தோழி ஜெயலஷ்மி சொன்னது போல வயிறு விரிவடைவதால் கூட இருக்கலாம். அந்த சமயத்தில் நான் குளுகோஸ் கலக்கி குடிப்பேன். சரியாகும், நீங்களும் அதுபோல செய்து பாருங்கள். ஒரு பக்கம் படுத்து எழுவதால் அப்படித்தான் வலி இருக்கும். குழந்தை எடை அதிகமாகி அது அடிப்புறத்தை அழுத்துவதால் தோன்றும் வலி அது. நீங்கள் ஒரே பக்கத்தில் படுக்காமல் மாற்றி மாற்றி படுத்து பாருங்கள். சிறிது நேரம் வீட்டுக்குள்ளே நடந்து பாருங்கள். நீண்ட நேரம் உட்கார்ந்த நிலையிலோ, நின்ற நிலையிலோ, படுத்த நிலையிலோ இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சுகப்பிரசவம் ஆக வாழ்த்துக்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்