மீன் சினையை எவ்வாறு சமைப்பது

தோழிகளே என் கணவருக்கு மீன் சினை என்றால் மிகவும் பிடிக்கும் ஆனால் எனக்கு மீன் சினையை எவ்வாறு சமைப்பது என்று தெரியாது இதனால் எண்ணையில் பொரித்தே கொடுப்பேன். வேறு என்ன முறையில் சினையை சுவையாக சமைக்கலாம் என்று கூறுங்களேன்.

நான் கேட்க நினைத்த கேள்வி:)

நல்லவேளை நீங்க கேட்டுட்டீங்க!

மீன் சினையை பொறித்து அதை தனியா வச்சுக்கோங்க.

கொஞ்சமா எண்ணெயில் கடுகு, 2 பட்ட மிளகாய். கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி, சீரகதூள், மஞ்சள்துள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கி பின் பொறித்த சினையை போடுங்கள். இப்படி தான் செய்வேன்.

வேறு யாராவது புது முறை சொல்றாங்களான்னு காத்திருக்கலாம்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மெதுவாக உப்பு, மஞ்சள் புரட்டி, ஸ்டீம் செய்து / பொரித்து எடுத்து வைங்க. கறி கூட்டி கொதித்ததும், சினையைச் சேர்த்து கொஞ்ச நேரம் சிம்மில் வைத்து இறக்குங்க. குழம்பு, வெள்ளைக் கறி இரண்டும் இப்படிச் செய்யலாம். கலக்க வேண்டுமானால் அகப்பை போடாமல் சட்டியை உயர்த்திச் சுற்ற வேண்டும்.

சிலர் துணியில் கட்டி வேக வைப்பார்கள். பிறகு சமைப்பார்கள். எதுவானானும் அதிகம் கரண்டி போட்டால் கரைந்து விடும்.

‍- இமா க்றிஸ்

இங்கு எனக்கு தெரிந்த கேரள தோழி மீன் சினையய் (மீன் முட்டை) செய்யும் முறையய் நான் உங்களுக்கு தருகிறேன்.
இரண்டு பெரிய வெங்காயம், பச்சைமிளகாய் பொடியாக நறுக்கி வைக்கவும்.
தேங்காய்,இஞ்சி ஒன்றுக்கு இரண்டாக (துருவியது போல்) மிக்சியில் அரைக்கவும்.
கடுகு,கருவேப்பிளை,வெங்காயம்,பச்சைமிளகாய் போட்டுத் தாளித்தவுடன் மீன் சினையைப் போட்டு வதக்குங்கள். இது வதங்க வதங்க முட்டைப் பொறியல் போல் பொறியும். சினை நன்கு வெடித்து பொறிந்தவுடன், மேலிருக்கும் தோல் தனியாக வந்துவிடும். அதனை நீக்கி விட்டால் மீன் வாடை வ்ராது.
பிறகு அரைத்துவைத்த தேங்காய்,இஞ்சியை போட்டு சிறிது கிளறி இறக்கிவைக்கவும்.
இது நல்லா சுவையாக இருக்கும்.
இதற்கு பெரிய மீன்களின் சினையில் செய்யவும்.
மத்தி மீன் என்றால் குழம்பிலேயே போடலாம்.

Don't Worry Be Happy.

சின்ன வெங்காயம்-10
முட்டை -2
பச்சைமிளகாய் -3
கொத்தமல்லிஇலை-சிறிதளவு
உப்பு
மீன் சினை
மஞ்சள் தூள்-1/2ஸ்பூன்
சீரகத்தூள் -1/2ஸ்பூன்
மிளகுத்தூள்-1ஸ்பூன்
மீன் சினையை நன்றாக பிசைந்து பிறகு அதில் முட்டை உடைத்து ஊற்றி வெங்காயத்தை பொடிதாக நறுக்கி,ப.மிளகாய் பொடிதாக நறுக்கி போடவும்.பிறகு அனைத்து மசாலாவையும் போட்டு முட்டை பொறிப்பது போல் தோசைக்கல்லில் ஊற்றி பொறிக்கவும்.

வெவ்வேறு முறைகளை கூறியிருக்கின்றீங்கள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதத்தில் சமைத்து எனது கணவரை அசர வைக்கப்போகின்றேன் பதில் தந்த அனைவருக்கும் எனது நன்றிகள்

மீன் சினையா ? நான் பார்த்ததே இல்ல :(

மேலும் சில பதிவுகள்