aloevera gel pls explain me

Hello friends,

can u please tell me what r the uses of aloevera gel? can i apply it for face and body? what r the benefits on beauty wise? in the tube its written that 98 percent aloe gel..

நிஞ்சுபாப்பு... சரியா நான் டைப் பன்னது. ஆமாம் நீங்க ஏன் தமிழ்-ல டைப் பன்னல?...

நான் ஆலோவேரா ஜெல்ல தலைக்கு யூஸ் பன்னிருக்கேன்ங்க... பொடுகு நிறைய இருந்துச்சுன்னா ஜெல்ல அப்ளை பன்னி காயர வரைக்கும் வெச்சு அப்பறம் தலை குளிப்பேன் சரியாயுரும். நல்லா சாப்ட்டா இருக்கும் முடிகூட... ஆனா ரொம்ப குளிர்ச்சி, மத்தபடி நான் எதுக்கும் யூஸ் பன்னியது இல்லை... கொஞ்சம் வெய்ட் பன்னுங்க நம்ம தோழிகளும் வந்து சொல்லுவாங்க...

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

thank you friend.. it takes lot of time and lot of mistakes to type in tamil.. thats y..

நிஞ்சுபாப்பு, ஆலுவேரா ஜெல் முகம், கை, கால் உடம்பெல்லாம் கூட அப்ளை பண்ணி ஒரு 10 நிமிடம் ஊற வைத்து பிறகு கழுவலாம். நல்ல குளிர்ச்சி தரும். வெயில் காலத்திற்கேற்ற தோழன். இன்னும் தெரிந்தால் சொல்கிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஆலோவேரா ஜெல்!
சுத்தமான ஆலோவேரா ஜெல் (100 %) பலவிதமான அழகு மற்றும் மருத்துவ குணங்கள் கொண்டது.
வெய்யிலால் ஏற்படும் கருமை மற்றும் சன்பர்ன் போக்க போடலாம்.
சிறிய தீக்காயங்களுக்கு போடலாம்.
பேஸ்பேக் செய்தும் போடலாம். ஆலோவேரா ஜெல்/சக்கரை/ஆலிவ் ஆயில் சம அளவில் கலந்து ஸ்க்ரப் ஆக பயன்படுத்தலாம்.

ஆலோவேரா ஜூஸும் உடம்புக்கு நல்லது. கான்ஸ்டிபேஷனுக்கு நல்லது. ஜூஸ் உட்கொண்டால் சருமம் பளபளப்பாக இருக்கும்.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

பதில் தந்த தோழிகள் அனைவருக்கும் மிகவும் நன்றி.. இன்னும் தெரிந்தால் பதில் கூறவும்..

மேலும் சில பதிவுகள்