இந்த வீட்டு உபகரணங்கள் லிஸ்ட்'ல டிஷ் டிவி வருமா???
கொஞ்சம் சொல்லுங்க... வீட்டில் எந்த ஹை டெபனிஷன் டிஷ் டிவி வாங்கலாம்??? பயன்படுத்தினவங்க சொல்லுங்க.
இந்த வீட்டு உபகரணங்கள் லிஸ்ட்'ல டிஷ் டிவி வருமா???
கொஞ்சம் சொல்லுங்க... வீட்டில் எந்த ஹை டெபனிஷன் டிஷ் டிவி வாங்கலாம்??? பயன்படுத்தினவங்க சொல்லுங்க.
HD DTH service provider
Airtel, big tv, tata sky, sun direct, dish tv இதில் எது செலவு குறைவு, தரமானது, நம்பிக்கையானது, அதிக தமிழ் சேனல் வழங்குவது, picture quality இருப்பது? எந்த entry package வாங்கலாம்? அதன் தகவல் வேணும்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா அக்கா
அக்கா
சன் டைரக்ட் வாங்குங்க. அது தான் அம்மா எனக்கு இங்கே வரும் போது குடுத்தாங்க. அதிகமான தமிழ் சேனல் இருக்கு. செலவும் என்னை பொருத்த வரை குறைவு. நான் பொதுவாக பார்க்கும் சேனலுக்கு கட்டும் பணத்திலேயே எல்லா சேனலும் கிடைக்கிறது. அது போக ஹிந்தி சேனலும்:)
படங்களும் தெளிவானவை தான். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்க்கலாம்:)
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
ஆமினா
ஆமினா... சன் டைரக்டில் இனிஷியல் பேமன்ட் அதிகமா இருக்க மாதிரி இருக்கே... சரி, இருங்க மற்றவர் என்ன சொல்றாங்கன்னும் கேட்டுடலாம்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி அக்கா
எனக்கு தெரிந்து எங்க பாட்டி வீட்டில big tv தான் ரொம்ப நல்லாருக்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி, ஹிந்தில அனைத்து மியூசிக் சேனலும் வருது, clarity கூட நல்லாருக்கு.
நான் ஒருமுறை பஸ்சில் வரும்போது, பயணத்தின் போது பக்கத்தில் இருந்த ஒரு பெண் என்னோடு பேசிக்கொண்டு வந்தார், அப்போது அவர் சன் டைரக்ட் சரி இல்லைன்னு சொன்னாங்க, நேத்திக்கு பார்த்த சேனல் திடீர்னு இன்னிக்கு காணாம போய்விடுகிறதுன்னு சொன்னாங்க, நான் யூஸ் பண்ணலை சோ எனக்கு confirm ஆ சொல்ல முடியலை, but என்னோட vote big tvக்கு தான் அக்கா.
அன்புடன்
பவித்ரா
பவி
நன்றி பவி... ஆனா Big TV'ல Z tv வராதே :(.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஹாய் வனிதா மேடம்...
நல்லாருக்கீங்களா? வீட்ல எல்லாரும் சவுக்கியமா? நான் பெங்களூர்ல இருந்த வரைக்கும் டாடா ஸ்கை தான் யூஸ் பன்னினேன், எல்லா சேனல்களும் வந்திச்சு. க்ளாரிட்டி பக்காவா இருந்துச்சு, இப்ப பழனி வந்தன்ன அம்மா வீட்ல சன் டைரக்ட் இருக்கு, பாதி நாள் நிறைய சேனலே வரதில்லை. என்ன ப்ராப்ளம்னே தெரியலை. அவங்க சேனல்களும் நிறைய வரதில்லை. க்ளாரிட்டி நல்லாதான் இருக்கு. இருந்தாலும் எனக்கு டாடாஸ்கை ரொம்ப பிடிச்சிருந்துச்சு... அப்பறம் வனிதா மேம் எல்லா இந்தி சேனலும், இங்கிலிஷ் சேனலும் வந்துச்சு. 200க்கு ரீசார்ஜ் பன்னுவோம். சன் நெட்வர்க்-ல 120க்கு ரீசார்ஜ் பன்னரோம் ஆனா எந்த இந்தி, இங்கிலிஷ் சேனலும் வரதே இல்லை... சோ.....
என் ஓட்டு டாடாஸ்கை தாங்க...
இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.
அன்புடன்
லதாவினீ.
வனி அக்கா
அப்படியா அக்கா, அது தெரியல அக்கா, செக் பண்ணி பாருங்க
அன்புடன்
பவித்ரா
dish tv
வனிதா எந்த set top box வாங்கினாலும் நமக்கு புடிச்ச சில channels க்கு pay பண்ணிதான் பா ஆகனும் என்னை பொருத்தவரைக்கும் big tv பெஸ்ட் நம்ம பார்க்க விரும்புற எல்லா தமிழ் சேனலும்,english news channels, most hindi channels kids channels எல்லாம் கிடைக்குது. clarity ok
ponni
வனிதா வில்வராணிமுருகன்
டைரக்ட் டு ஹோம் DTHன்னு சொல்வாங்க அதில் டிஷ் டிவி யோட பேக்கேஜ்கள் தான் சிறந்தது சௌத் பேக்கேஜ்ல அனைத்து தமிழ் சேனல்களும் கிடைக்கிறது கூட ஸ்போர்ட்ஸ் சேனல்கள்,ஜி டிவியின் சேனல்களும் கிடைக்கின்றன. ஆகவே எல்லாவற்றிலும் சிறந்தது டிஷ் டிவி தான் என்பது என் கருத்து.
அன்புடன்
THAVAM
வனிதா - TV
ஆளாளுக்கு ஒரு TV சொல்றாங்க. உங்களுக்கும் எல்லாத்தப் பத்தியும் தெரிஞ்சிருக்கு. இருந்தாலும் அட்மின் அண்ணாகிட்ட சொல்லி ஒரு ஓட்டெடுப்பு நடத்தமுடியுமான்னு பாருங்க :-)
என்னது....என்னோட opinion ஆ. எனக்கு இதப்பத்தி சுத்தமா தெரியாது ?!:-) என்ன முடிவுக்கு வந்தீங்கன்னு சொல்லுங்க நானும் தெரிஞ்சுக்கிறேன்.
அன்புடன்,
இஷானி