பிரசவத்தில் கணவனின் பங்கு

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

உங்க எல்லோருக்கும் வணக்கம்.தலைபிரசவம்ங்கறது பெண்களுக்கு மறு ஜென்மம்னு சொல்லுவாங்க.அந்த நேரத்தில பெண்கள் மனநிலை பத்தி சொல்லவேமுடியாது.பிரசவம் நல்லபடியா ஆகணும் எல்லா கடவுளையும் கும்பிடுக்கிட்டு இருப்பாங்க.இங்கே வெளிநாட்டுலே ப்ரசவம் சமயத்தில கணவனும் அருகே இருக்கணும்ங்கற கலாச்சாரம் இருக்கு.placenta எனப்படும் தொப்புள் கொடியை cut பண்றதே கணவன் தான்.நம்ம நாட்டுலயும் இப்போ அந்த system சில hospitals ல இருக்கு.அதுக்குன்னு பணம் தனியா collect பண்றாங்கன்னு நினைக்கிறேன்.சரிங்க.விஷயத்துக்கு வரேன்.

என் கேள்வி என்னன்னா ,பெண்கள் பிரசவ நேரத்துல கணவன் அல்லது தாய் யாருடைய அருகாமையையாவது விரும்பறீங்களா? ஏன்?

அன்புடன் அனு

உங்களின் இந்த இழையை பார்த்ததும் எனக்கு இஷானியின் "நீயின்றி நானில்லை" கதைதான் ஞாபகத்திற்கு வருகிறது. தோழிகள் வந்து அவங்க கருத்துக்களை சொல்லுவாங்க

அன்புடன்
பவித்ரா

இங்கு குவைத்தில் ஹாஸ்பிடல் உள்ளே போய்விட்டால் நோயாளிகளுக்கு மட்டும் தான் அனுமதி மற்ற யாரையும் அனுமதிப்பதில்லை. பிரசவத்திற்க்கும் அப்படியே. ஆனாலும் பிரசவத்திற்கு முன்பே atleast ஒரு வாரத்திற்கு முன்பே அம்மா கூட இருந்தா நல்லா இருக்கும் என்று என் மனதில் ஒரு ஏக்கம். எங்க அம்மவிற்க்கும் அப்படியே அனால் என் பிரசவத்திற்க்கு ஒரு மாதம் முன்பு அம்மாவிற்கு utres problem ஆகி அதை எடுக்கவேண்டிய கட்டாயம் என்ன செய்ய நினைப்பதெல்லாம் நடக்காது அம்மா வால வரமுடியாதுன்னு ரொம்ப கவலையோடிருந்தேன், ஆனா என் அம்மா எனக்கு எப்படியோ என் பொண்ணு என்னை பாத்துக்கொள்வாள் நான் அவ கூட இருந்தே ஆகனும்னு தைரியமா வந்துட்டங்க operation முடிந்து ஒரு மாதம் கூட முடியாமல் எங்க அம்மா வந்த நிலைமைய பார்த்து airport லேயே நான் அழுதுட்டேன் அதுக்குபிறகு எங்க அம்மாவ நாங்க எல்லா கவனிசிகிட்டோம் ஒரு வாரம் கழித்துதான் எனக்கு பிரசவம் ஆனது அதுக்குள்ள அம்மா நல்லா தெம்பாயிட்டாங்க என்னையும் குழ்ந்தையயும் நல்லா பாத்துகிட்டங்க . எனக்கு ரெட்டை சந்தோஷம் அம்மா பிரசவத்திற்கு இருந்த்து அப்புறம் நான் அம்மாவை கவனிச்சிகிட்டது

ponni

நம்முடைய பிரசவத்தின்போது, நம்முடைய பெற்றோர், உடன்பிறந்தோர் இருக்க வேண்டும் என்பதை விட கட்டிய கணவன் பக்கத்தில் இருப்பதையே ஒவ்வொரு மனைவியும் விரும்புவாள். அவளுக்கு கணவன் பிரசவத்தின்போது பக்கத்தில் இருப்பது ஒரு யானையின் பலத்தை போன்றது.கணவன் நம்முடன் பிரசவ அறையில்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த பிரசவ வார்டில் இருந்தால் கூட போதும், நம் கணவர் நம்முடன் தான் இருக்கிறார் என்ற நினைப்பே பிரசவத்தை வலியற்றதாக்கிவிடும்.

பிரசவ அறைக்குள் இருந்து கணவனும், மனைவியின் பிரசவத்தை பார்ப்பதென்பது அவரவர் மனநிலையை பொறுத்தது. ஏனென்றால் ஒரு சில கணவர்கள் தங்கள் மனைவியின் பிரசவத்தை அருகில் இருந்து பார்ப்பதால் மனோரீதியாக பாதிக்கப்பட்டு, தாம்பத்தியத்தில் விருப்பம் இல்லாமல் போய்விடுவதாக மனநலமருத்துவர்கள் கூறுகிறார்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

100% கணவனே தான்..எனக்கு அம்மாவும் உறவினர்களும் அருகில் இருந்தும் யாரையும் அருகில் அனுமதிக்கவே வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.

ஆனா பாருங்க பிரசவம் முடிந்ததும் அம்மாவை தான் வேண்டும்..பிரசவ வலியின் போது அம்மாமார்கள் கூட இல்லாதிருப்பது நல்லது..என்னதான் தெரிந்தாலும் அம்மாக்களுக்கு பிள்ளைகள் வலியால் இருப்பதை பார்க்க சஹிக்காது..பிறகு அவங்களும் சேந்து கதறுவாங்க

கணவர் அருகில் இருப்பது ரொம்ப தைரியமாக இருக்கும்.மற்ற யாரையும் என்னை பொறுத்தவரை சிந்தித்து பார்க்க கூட முடியாது

அனுஷா ..எனக்கும் கல்பனா சொல்றது கொஞ்சம் லாஜிக்கலா சரியா படுது..அம்மா கூட இருப்பதோ...கணவர் கூட இருப்பதோ அந்த பெண்ணின் அதீத விருப்பம் பொறுத்து..!நாம் வெளிநாட்டு காரவங்க மென்டாலிட்டி இல் அவளவு யதார்த்தமாய் போக முடியும்னு தோணலை..நாம ரொம்பவே உறவுகளோடு பின்னி பிணைந்த emotional சமூதாயத்தில் உருவாக்கபட்டவர்கள்.என் தம்பிக்கு ஒரு surgery பண்ணும்போது live cam இல் காமிச்சுட்டே இருந்தாங்க..ஆனால்..என்னாலே அதை 2 செகண்ட் க்கு மேலே பார்க்க முடியாமல் எந்திரிச்சு வெளியே போயிட்டேன்...அப்போ என்ன பண்றாங்கன்னு தெரிஞ்சுக்கும் ஆர்வத்தை விட..என் உறவு இப்படியெல்லாம் கஷ்டபடுதேங்கிற உணர்ச்சி தான் அதிகமாகி அந்த இடத்தில் என்னை நிக்கவிடாமல் பண்ணியது..இயல்பாகவே இந்தியர்களுக்கு emotional bond ஜாஸ்தி..ஒரு வேலை பிரசவ நேரத்தில் கணவனை அருகில் இருக்க வைத்தால் நிச்சயம் மனைவி இவ்வளவு வேதனை படுகிறாளா என்று இன்னும் பெண்மையின் வீரியமும் புரிஞ்சுக்கலாம்..கல்பனா சொன்னது போலே தாம்பத்யத்தில் ஈடுபாடும் குறையலாம்..அடுத்த குழந்தை அவள் பெத்து இனி அவள் வலி தாங்க வேணாம் னு யோசிக்கலாம்..இதெல்லாம் அன்பான கணவர் பார்ப்பதை விட..மனைவியின் அருமை தெரியாத கணவர்மார்களுக்கு இப்படி ஒரு ஆப்ஷன் குடுத்தால் நல்லா இருக்கும் தோணுது..

Madurai Always Rocks...

இங்கு சவுதியிலும் யாரையும் அனுமதிக்க மாட்டாங்க.என்ககும் ஆனந்தியின் கருத்து தான் சரியென தோணுது.பிரசவத்தை நேரில் பார்க்கும் தைரியம் எல்லா ஆண்கலுக்கும் வருவதில்லை.

பிரசவத்தின் போழுது கணவன்மார்கள் அருகில் இருப்பதுதான் எல்லா பெண்களும் ஆசைபடுவார்கள், கணவன் மனைவியுடன் இருந்தால்தான் பக்க பலமாக இருக்கும் என்னேன்றால் நம் பெற்றோர்களால் நாம் படும் அவஸ்த்தையை தாங்கிக் கொள்ளமுடியாது, என் அக்கவிற்க்கு பிரசவம் ஆகும் சமையத்தில் என் அம்மா ரொம்பவே அழுதுட்டாங்க அதுக்கும் மேல் என் அப்பா அக்கவை சிறு வயதில் இருந்தே அடித்ததுகூட கிடையாது அவரும் அழாதகுறையாக இருந்தார் என் அக்கா கணவர் மட்டும்தான் தைரியமாக இருந்தார்கள். கணவனிடம் நாம் கஷ்டப்பட்டு பெற்றேடுத்தக் குழந்தையை அவரிடம் காண்பிக்கும் பொழுது ஏர்படும் சந்தோஷத்திற்க்கு அளவே இல்லை.

அன்புடன்
நித்யா

prasavathin bothu kanavan arukil irukka vendum enna.... appodan oru kulandai peruvatharku nam evvalavu kastappadaromnu therium nam mel anbu koodum

ஃப்ரெண்ட்ஸ்,

உங்க பதில்களுக்கு நன்றி.என் மகனுக்கு 3 வயது.நான் Australia விற்கு வந்துதான் conceive ஆனேன்.வந்த புதிது என்பதால் இங்கே யாரும் அவ்வளவு பழக்கம் இல்லை.மசக்கை படுத்தி எடுத்தது.அப்போதெல்லாம் என் கணவர்தான் என்க்கு உதவியாக இருந்தார்.டெலிவரிக்கு 1 மாதம் முன்புதான் அம்மாவந்தார்கள்.வலி இல்லாமலே நீர்குடம் உடைந்துவிட்டது.hospital சென்றோம்.வலி
வராததால் induce செய்தார்கள்.18hrs கழித்தே என் மகன் பிறந்தான்.18hrs நான் ப்ட்ட கஷ்ட்ம் இவ்வளவு என்றில்லை.

என் கணவரும் அம்மாவும்தான் உடனிருந்தனர்.நீங்கள் சொன்னதுபோல் அம்மா அழுதுகொண்டுதானிருந்தார்.midnight என்பதால் ஒரு midwife தான் இருந்தார்.வலிபொறுக்கமுடியாமல் epidural எடுத்துக்கொண்டேன்.என் கண்வர் பிடியை விடவேஇல்லை.வலி தெரியாததால் contractions வரும் போதெல்லாம் push..push என்று சொல்லிக்கொண்டிருந்தார்.இன்னும் சொல்லப்போனால் midwife வேலையெல்லாம் இவர்தான் செய்து கொண்டிருந்தார்.அவர் பக்கத்தில் இருந்ததால்தான் என்னால் அனைத்தையும் பொறுக்கமுடிந்தது.முதல்நாள் காலையில் hospital சென்ற எனக்கு மறுநாள்காலையில்தான் குழந்தை பிறந்தது.வலி எடுத்தபோதெல்லாம் எனக்கு ஆதரவாக, கிட்டத்தட்ட என் அம்மா போல் என்னை பார்த்துக்கொண்டார். அவர் அருகே இருந்தது நிச்சயமாக எனக்கு யானைபலம்தான்.வலி எடுத்தபோதெல்லாம் அம்மா என்று அலறவில்லை.என் கணவர் பெயர் சொல்லித்தான் அலறினேன்.என் அம்மா கூடசொல்லி கிண்டல் செய்வார்கள்.

சரிங்க.இனிமேதான் twist.குழந்தை பிறந்து 1வாரம் கூட இருக்காது,எனக்கு அடிவயிற்றில் சின்னவலி இருந்துகொண்டேயிருந்தது.சொன்னால் காதில்
போட்டுக்கொள்வதேயில்லை.டென்ஷன் ஆகி ஒருநாள் ,எவ்வள்வு கஷ்டப்பட்டு குழந்தை பெற்றேன்,வலி என்று சொன்னால் காதில் போட்டுக்கொள்ள
மாட்டேன் என்கிறீர்களே என்றால்,நீ மட்டுமா உலகத்தில் அதிசயமாக வலி எடுத்து பெற்றாய்,எல்லா பெண்களும் அவ்வாறு தான் பெறுகிறார்கள்.
hospital லில் எவ்வளவு பேர் வலியால் கத்திக்கொண்டிருந்தார்கள் என்றுதான் பார்த்தேனே என்றார்.அவ்வளவுதான்.எனக்கு அனைத்தும் சர்ரென்று
இறங்கிவிட்டது.அப்போதே சொல்லிவிட்டேன்,இன்னொறு குழந்தை பெறும்போது உங்கள் அருகாமை எனக்கு தேவையில்லையென்று.

சொன்னாலும் மனசு கேக்குமா? இரண்டாவது குழந்தை பிறக்கும்போதும் இவர் தான் அருகிலிருந்து, midwife க்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டு அந்த
வேலையை இவர் பார்த்துக்கொண்டிருந்தார்.அந்நேரத்தில் அவர் ஆதரவு ,அரவணைப்பு என்னவோ நன்றாகத்தான் இருந்தது.ஆனால் முதல்தடவை
அவ்வாறு கூறியதாலோ என்னவோ என் மனது அவற்றை ஏற்க மறுக்கின்றது.அன்பானவர்தான்,பொறுப்பானவர்தான்.நன்றாகத்தான் பார்த்துக்கொள்கிறார்.எனக்கு என்னவென்றால் பக்கத்திருந்து பட்ட கஷ்டமெல்லாம் பார்த்தும் அதைபெரிய விஷயமாகவே எடுத்துக்கொள்ளவில்லையென்றுதான்.

என்னை பொறுத்தவரை ,நம் பெரியோர்கள் எதயும் இலை மறைவு,காய் மறைவு என்பார்கள்.அதுபோலத்தான் பிரசவம் என்பதும் இருக்கவேண்டும்.
பிரசவத்திற்கு மனவியை உள்ளே அனுப்பிவிட்டு,படபடப்புடன் கணவன் வெளியே நிற்பானே மனைவியின் அலறல் சத்தம் கேட்டுக்கொண்டு.அய்யோ!ந்ம்
மனைவி எவ்வளவு கஷ்டப்படுகிறாளோ என்று.அப்படித்தான் இருக்கவேண்டுமோ என்று நினைக்கிறேன்.என் கணவருக்கு அருகிலிருந்து அனைத்தையும்
பார்த்ததால் இவை பெரியவிஷயமாகத்தெரியவில்லை என்று நினைக்கிறேன்.ஆனால் இதனால் எங்களிடையே தாம்பத்தியதிதில் ஈடுபாடு இல்லைஎன்றெல்லாம் கூறமுடியாது.மகிழ்ச்சியாகத்தான் உள்ளேன்.அவருக்கு என்னவென்றால் இது உலக இயல்பு என்றொரு எண்ணம்.எல்லாக்கணவர்களும் இப்படியிருப்பார்கள் என்றுசொல்லமுடியாது,சில தோழிகளின் கணவர்கள் உள்ளேயிருக்க பிடிக்காமல் வெளியே வந்துவிட்டதாக சொல்லுவார்கள்.ஆனால் இவரோ தூக்கம் கூடஇல்லாமல் குழந்தை பிறக்கும்வரை உடனிருந்தார்.

ஆனால் நிச்சயமாக சொல்லுகிறேன்,கணவர் அருகேயிருப்பது கோடி யானைகள் பலம்தான்.ஆனால் அவற்றை அவ்ர்கள் பின் எப்படி எடுத்துக்கொள்வார்கள்
என்பதில்தான் இருக்கிறது.


//என்னை பொறுத்தவரை ,நம் பெரியோர்கள் எதயும் இலை மறைவு,காய் மறைவு என்பார்கள்.அதுபோலத்தான் பிரசவம் என்பதும் இருக்கவேண்டும்.
பிரசவத்திற்கு மனவியை உள்ளே அனுப்பிவிட்டு,படபடப்புடன் கணவன் வெளியே நிற்பானே மனைவியின் அலறல் சத்தம் கேட்டுக்கொண்டு.அய்யோ!ந்ம்
மனைவி எவ்வளவு கஷ்டப்படுகிறாளோ என்று.அப்படித்தான் இருக்கவேண்டுமோ என்று நினைக்கிறேன்//

இதைதான் நானும் சொல்ல நினைச்சென்.நேக்கு இவ்வளவு கோர்வையா சொல்ல வராது. ஏதாவது தப்பா சொல்லி யார் மனசாவது கஷ்ட பட்டுடுமோனுதான் சொல்லலை.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்