எதை தேர்வு செய்வது?

வணக்கம் தோழிகளே,புதிய இன்டர்நெட் கனெக்சன் பெற,எதை தேர்வு செய்வது?
மாமா,மாமி மதுரையில் வசிக்கிறார்கள். அவர்களுக்கு புது இணைப்பு பெற்றுத்தர,என்பது தெரியவில்லை.நான் வசிப்பது சார்ஜாவில்.பதில் விரும்பி காத்திருக்கிறேன்.

பி.எஸ்.என்.எல் பிராட்பாண்ட் எடுத்துக்கொள்ளுங்கள். ஏதாவது உதவி வேண்டுமானால் சொல்லுங்கள். விண்ணப்பித்துவிட்டு சொல்லுங்கள்.


ஜெ மாமி சொல்லறதை நான் வழி மொழியரேன்.ஏன்னா நான் அதான் வெச்சுருக்கேன்.

ஜெ மாமி
மாட்டு பொண் வந்தாளோ! மாமியார் ஆனேளோ!

ரொம்ப நாளா கேட்டுண்டுருக்கேன்.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

hi rukpriya,
in madurai airtel network is the best service provider for broadband connections. landline internet connection is suitable for your in-law's usage.
for more details pls go through this link
http://www.airtel.in/wps/wcm/connect/airtel.in/airtel.in/home/forme_newuser/broadband+and+fixed+Line/broadband/
my parents are using airtel broadband connection in madurai. service and speed is good. u can choose the tarrif according to ur usage.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

பி.எஸ்.என்.எல்லை வைத்திருப்பதற்கும், இப்ப வழி மொழிஞ்சதுக்கும் ரொம்ப நன்றி.

சாரி
மாட்டுப்பொண் வந்துட்டா. மாமியார் ஆகல. இன்னொரு பொண்ணுக்கு அம்மா ஆயிட்டேன்.

கடவுள் அருளால் எல்லாம் நன்னா போயிண்டிருக்கு.

அப்புறம். உங்களுக்கு வாழ்த்துக்கள்.
எல்லா அறுசுவையின் இழைகளிலும் கலக்கிக்கொண்டிருக்கீங்களே. அதுக்குத்தான்.


ஒங்களுக்கு எத்தனையோ வேலை இருக்கும்.

அதுக்கு நடுப்பர வந்து என்கூட பேசினது ரொம்ப சந்தோஷமாருக்கு.

//மாட்டுப்பொண் வந்துட்டா. மாமியார் ஆகல. இன்னொரு பொண்ணுக்கு அம்மா ஆயிட்டேன்//

ஜீனியஸ் எப்போவுமே ஜீனியஸ்தான்.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

நான் உபயோகிப்பது, பி.எஸ்.என்.எல், EVDO card கனெக்ஷன், நன்றாக தான் உள்ளது

அன்புடன்
பவித்ரா

வணக்கம் மாமி நல்லாயிருக்கீங்கலா?நன்றி ஆலோசனை கூறிய அனைவருக்கும்.தோழி ஜெயந்தி எந்த ஊருனு தெரிந்து கெள்ளலாமா? இதற்கு முன்பு ஒரு முறை கேட்டேன்.தங்களிடமிருந்து பதில் இல்லை.{மதுரை தோழிகளே பகுதில்}

நான் வசிப்பது சென்னையில்தான்.

நீங்கள் கேட்டது வேறு ஜெயந்தியாக இருக்கும்.

நான் ‘காலச்சக்கரம்’ என்ற தலைப்பில் பல்சுவை பகுதியில் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். முதல் பக்கத்தில் என் புகைப்படமும் இருக்கிறது.

வணக்கம் தோழி,நீங்க மதுரையா? நானும் மதுரை தான்.படித்தது.வளர்ந்தது.மதுரை தான்.நீங்க எங்க இருக்கிங்க? நம்ம ஊருனு சொன்னதும்,ஒரு ஆர்வம் தான். சொல்லுங்கப்பா.

நன்றி ஜெயந்தி மாமி,நான் கேட்டதற்கு உடன் பதில் கிடைத்தமைக்கு, கதைகள் எல்லாம் நன்கு வர வாழ்த்துக்கள்.

மேலும் சில பதிவுகள்