இயற்கை வீட்டு தோட்டம்-2

வணக்கம் சகோதரிகளே சகோதரர்களே இரசாயன உரங்கள் இல்லாத இரசாயன பூச்சி கொல்லிகள் இல்லாத விவசாய முறையில் தோட்டம் போடலாம் வாருங்கள். உங்கள் சந்தேகங்களை கேள்விகளை கேளுங்கள்.
<!--break-->
மரம் வளர்கும் வகையில் இடங்கள் இருப்பவர்ள் மரங்கள் வளருங்கள்.

அறுசுவை அங்கத்தினர்ரளுக்கு காலை வணக்கம். உடலளவிலும், மனதளவிலும், விஷமில்லா சமுதாயம் உருவாக்குவோம் வாருங்கள்.

அன்புடன்
THAVAM


//மரம் வளர்க்கும் வகையில் இடங்கள் இருப்பவர்கள் மரங்கள் வளருங்கள்.//

எங்காத்து வாசல்ல மஞ்சள் அரளியும்

கொல்லேல முருங்கை மரமும் இருக்கே!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

இன்னும் இடம் இருந்தால் வேப்ப மரம் ஒன்றை வையுங்கள் அதுதான் இரவிலும் கூட ஆக்ஜிஜனை வெளியிடுகிறது. இதுவும் நம்மாழ்வார் சொன்னது.

அன்புடன்
THAVAM


வேப்ப மரம் பழைய ஆத்துல வைச்சுருந்தோம். அதோட வேர் ‘ஆழ் துளை கிணத்து’ குழாயை சுத்துண்டதுல தண்ணியே ஏறாம பேடுத்து.

அதனாலதான் வைக்கல்லை.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

தேனூறும் ராகம் மாமி பாடும் நேரம் விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே கண்ணிண் மணியே நீயும் உறங்கு. உன்னை நீயே மறந்துறங்கு, நாளை விடியும் என்ற நம்பிக்கையுடன்...

அன்புடன்
THAVAM

விடிகின்ற காலைப் பொழுதில் உங்களின் இந்த நாள் நல்லன எல்லாம் நடக்க வாழ்த்துக்கள் புத்துணர்வோடு கடமையாற்றுங்கள்

அன்புடன்
THAVAM

ஹாய் தவமனி சாரி நாங்க இப்பம் வெளிநாட்டில் இருக்கோம். இந்தியால கொஞ்சம் இடம் சும்மா இருக்கு. அந்த இடத்துல எதாவது உபயோக படுரமாதிரி செய்யலாம்னி இருக்கோம். நம்ம டேலி பராமரிக்க முடியாத, ஆனால் வளர கூடிய ஒரு மரம் சொல்லுங்க. எங்களால அத போய் பார்க்க முடியாது. வருடம் ஒரு முறை தான் போக முடியும். வேண்டுமானால் எங்க வீட்டில் இருப்பரை அடிக்கடி போய் பார்க்க சொல்லலாம். ரொம்ப பராமரிக்க வேண்டி இல்லாத உபயோக மான ஒரு மரம் சொல்லுங்க, நான் இன்னும் இரண்டு வருடத்தில் அந்த இடத்தில் வீடு வைக்கிர என்னம் இருக்கு. ஆனால் உறுதி இல்ல.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

மகிழ்ச்சி எந்த ஊர்ல உங்களோட இடம் இருக்குன்னு தெரிஞ்சுக்கலாமா?, மழை பெய்யக்கூடிய இடமா?. விளக்கவும்.

அன்புடன்
THAVAM

சார் பசுமைக்கு பேர் உள்ள கேரளா பாடர் எங்க ஊர், அதாவது நாகர்கோவில். அடிக்கடி மழைபெய்யும். நாகர்கோவில் கொஞ்சம் அவுட் சைட் தான். வாழை வைக்கிர ஐடியா இருந்து ஆனால் அதை போய் அடிக்கடி பார்க்கனும் என்பதால் செய்ய வில்லை. இப்பம் இந்தியா போரோம். எதாவது அந்த இடத்தில் செய்து வைத்துடு வந்தால் அடுத்த முறை போகும் போது எதாவது நன்மை இருக்கும் என்று என்னி தான் கேட்டேன். உங்கள் பதிலுக்காக சோனியா.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

மகிழ்ச்சி குமிழ் தேக்கு முயற்சி செய்து பாருங்க 15 அடிக்கு ஒன்று வையுங்கள். இருபது வருடங்கள் வரை இருக்கலாம். அதற்கு மேலும் கூட வளர்த்தலாம்.

அன்புடன்
THAVAM

மேலும் சில பதிவுகள்