கொழுப்பு கட்டி,,,,,,,,

hi all,
என் கையில் சிறு சிறு கொழுப்பு கட்டிகள் உள்ளது.டாக்டரிடம் காமித்த போது,இதனால் ஒன்றும் பிரச்சனை இல்லை என சொன்னார்.இயற்கையாகவே இது கரைவதற்கு வழி உள்ளதா?

என் அம்மாவுக்கும் இது போலவே தான் கையில் வந்தது!

டாக்டர் சின்ன ஆப்ரேஷன் பண்ண வேண்டுமென சொன்னார்கள். ஆனால் அம்மா எதுவும் செய்ய்வில்லை.

அந்த இடத்தில் முடி சுத்தி கட்டி விட்டார்கள். ஆலிவ் எண்ணெய் கொண்டு தேய்த்தார்கள். குணமானது.

முயற்சி செய்து பாருங்கள். நாளை மீண்டும் தெளிவாக விசாரித்து பின் சொல்கிறேன். ஆனால் அந்த கட்டி இருந்த இடத்தில் உங்களுக்கு வலி இல்லை தானே! வலி இல்லாமல் தான் இருந்தது என் அம்மாவிற்கும்:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வலி இல்லை.....ஆனால் டாக்டரிடம் operate பண்ணி எடுக்க சொன்னால்,அது நிறைய வந்தால் எல்லவற்றையும் எப்படி remove செய்வீர்கள் என்கிறார்.

ஆபரேஷன் பண்ண தேவையே இல்லை கிருத்திகா.

கை வைத்தியத்துலேயே சரியாகிவிடும். எந்த அளவு இருக்கு உங்களுக்கு? ஒரு கோலிகுண்டு அளவு கையின் நாடி நரம்பு அருகில் வந்த என் அம்மாவிற்கே சரியாகிவிட்டது. உங்களுக்கும் சரியாகும் என நினைக்கிறேன். காலைல இன்னும் உங்களுக்கு தெளிவான விவரங்களை தருகிறேன். எல்லாவற்றிற்கும் இறைவன் துணை உண்டு. கவலை வேண்டாம்:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சின்ன size தான்.நன்றி ஆமினா......உங்க உடனடி பதிலுக்கு.........

அன்புள்ள ஆமினா அவர்களுக்கு,
நீங்கள் மேலே கூரிய வழிமுறையை சற்றே விளக்கமுடியுமா ?
"அந்த இடத்தில் முடி சுத்தி கட்டி விட்டார்கள்." இந்த வாக்கியத்தைதான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எவ்வாறு முடியை கட்டினார்கள்? சற்றே குழப்பமாக உள்ளது.
இது ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்.
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி...

அன்புடன்,
சதீஷ்.

`ha; Mkpdh>

eykh. vd; ifapy; Njhy; cs;Ns rpWrpW fl;bfs; cs;sJ. vg;gb rhp nra;tJ. tpsf;fk; juTk;

Hi amina

Kolupu katti karaiya ena pannanumnu solla mudiyuma.nan doctorkita pesunathula onum panamudiyathunu sollitanga.ethavathu terincha solunga

கொழுப்பு கட்டியில் ( lipoma ) நிறைய வகைகள் இருக்கின்றன. ஒன்றிரண்டு வகைகள் காலப் போக்கில் மறைந்துவிடும். நிறைய வகை மறைவதில்லை. எனக்கு வலது கையின் உட்பகுதியில் சிறியதாக இருக்கிறது. உற்று கவனித்தால்தான் தெரியும். அதனால் எந்த பிரச்சனையும் இல்லை. அதனால் நானும் அதை தொந்திரவு செய்யவில்லை. எனது நண்பர் ஒருவருக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது. அவருக்கு இரண்டு கைகள் முழுக்க இருக்கும். சில நாட்கள் வீக்கம் குறைந்து இருக்கும். தீடிரென அர்னால்டு மாதிரி ஆங்காங்கே புஜங்கள் ஏறிவிடும். இது ஒருவித lipoma variety. அது சரியானதாக தெரியவில்லை. நான் அவரை பார்த்து வருசங்கள் பலவாயிற்று.

மரு மாதிரியான வெளிப்புறம் தோன்றும் சிறு கட்டிகளுக்கு முடி கட்டுவார்கள். எனக்குகூட முதுகில் ஒரு சிறிய மரு வந்தபோது, (என் மனைவியின் ஆலோசனை பேரில்) முடி கட்டி சில நாட்களில் இருந்த இடம் தெரியாமல் சென்றுவிட்டது. ஆனால் lipoma lumps க்கெல்லாம் முடி கட்ட முடியுமா என்று தெரியவில்லை. இது தோலுக்கு உட்புறம் சற்று பெரிய அளவில் (அகலத்தில்) இருக்கும். அதைச் சுற்றி எப்படி முடி கட்டுவது, அது எப்படி பழுத்து விழும் என்பது தெரியவில்லை.

மருத்துவர்கள் எல்லோரும் கூறும் ஆலோசனை இதுதான். இந்த lipoma வகை கட்டிகள் பிரச்சனை இல்லாதது. இதனால் cancer வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதனால் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், (வலி, அல்லது முகம் போன்ற பகுதிகளில் அசிங்கமாக தெரிவது) நீங்கள் ஆபரேஷன் மூலம் அதனை நீக்கலாம். ஆனால், நீக்கிய பிறகு வேறு எங்கேனும் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

நீங்கள் எதற்கும் lipoma treatment, fatty lump treatment இப்படி எதாவது கொடுத்து கூகிளில் தேடிப்பாருங்கள். நிறைய தகவல்கள் கிடைக்கும். யூட்யூபிலும் தேடுங்கள்.

enaku periya kolupukatti ullthu aruvai sekechai illamal epadi kuna paduthuvadhu

.

மேலும் சில பதிவுகள்